Published:Updated:

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

ஜிலு ஜிலு நெதர்லாந்து!
பிரீமியம் ஸ்டோரி
ஜிலு ஜிலு நெதர்லாந்து!

சுற்றுலா: ராஜிராவ்

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

சுற்றுலா: ராஜிராவ்

Published:Updated:
ஜிலு ஜிலு நெதர்லாந்து!
பிரீமியம் ஸ்டோரி
ஜிலு ஜிலு நெதர்லாந்து!

நெதர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் அருகில் உள்ள அலக்மார்க்கில் என் மகள் வசித்து வருவதால், அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின் இன்னொரு பெயர் ஹாலந்து. கடல் மட்டத்துக்கு கீழே அமைந்து உள்ள ஒரு சில நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. 

எப்போதும் வீசும் பலத்த காற்று, குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாய்க்கால்கள், அதில் அழகழகான படகுகள், இன்னமும் சைக்கிள் சவாரியை விரும்பும் நல்ல நிறமுடைய உயரமான மக்கள், பல வண்ணப் பறவைகள், கடல் அலையைக் கட்டுப்படுத்தும் பிரத்யேகச் சுவர்கள், ஏராளமான காற்றாலைகள், வண்ண வண்ணப் பூக்கள், சுவையான பால் உணவுகள் என்று நெதர்லாந்தின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 16 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட நெதர்லாந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறி உள்ளது. ஆம்ஸ்டர்டாமைத் தவிர தி ஹேக், ராட்டர் டாம், உட்ரெக்ட் போன்றவை இந்நாட்டின் பிரபல நகரங்கள். இப்போதும் அரச பரம்பரையின் தலை மையில் ஜனநாயக  ஆட்சி நடக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் ராஜவிசுவாசம் உடையவர்கள். பியாட்ரிக்ஸ் மகாராணிதான் இந்த நாட்டின் தலைவி. மன்னராட்சியைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஏப்ரல் 30-ம் தேதி, 'ராணி தினம்’ ஏற்படுத்தி ஆரஞ்சு நிற உடை அணிந்து மக்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆம்ஸ்ட்ர்டாம் தலைநகராக இருந்தாலும் அரசு நிர்வாக அலுவலகங்கள், நாடாளுமன்றம், தலைமை நீதிமன்றம் ஆகியவை தி ஹேக் நகரில்தான் உள்ளன. இந்த நகரின் மற்றொரு சிறப்பு, அகில உலக நீதிமன்றம் இங்கு அமைந்து இருப்பதுதான்.

என் பயணத்தில் நான் மிகவும் ரசித்த நகரம் ஆம்ஸ்டர்டாம். 12-வது நூற்றாண்டில், சிறிய மீனவர் கிராமமாக இருந்த ஆம்ஸ்டர்டாம் இப்போது, உலகின் மிகவும் முக்கியத் துறைமுகமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இதுதவிர, காற்றாலைகளும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மற்றொரு முக்கியக் காரணமாக இருக்கிறது.  பல காற்றாலைகள் மிகவும் பழைமை வாய்ந்தவை. அவற்றில் சில இப்போது உபயோகத்தில் இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி கொடுத்து உள்ளனர்.

டச்சு நாட்டின் பொற்காலத்தில் இந்த நகரம், சிறந்த நிதி நிறுவனங்களாலும், நாணயமான வைர வியாபாரத்தாலும் பிரபலமானது. வயது வித்தியாசமின்றி பெரும்பாலான மக்கள் சைக்கிள் சவாரி செய்வதை இந்த நாட்டில் பார்க்கலாம். வீடுகள் குறுகலாகவும், உயரமாகவும் அடுத் தடுத்தும் கட்டப்பட்டு உள்ளன.

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

பியாட்ரிக்ஸ் மகாராணி

  டச்சு கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. 17-வது நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆம்ஸ்டர்டாம் வாய்க்கால்கள், ஐக்கிய நாட்டின் உலக தொல்பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகப் புகழ் பெற்ற வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் (உதாரணமாக பிலிப்ஸ்), ஆம்ஸ்டர்டாமில் தங்கள் தலைமை அலுவலகத்தை நிறுவி உள்ளதால், வேலை வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. டச்சு மொழி தாய் மொழியாக இருந்தாலும் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்து இருப் பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு மொழிப் பிரச்னை ஏற்படுவது இல்லை.

பல்வேறு நாட்டு உணவு வகைகளை அளிக்கும் ஹோட்டல்களுக்கும் இங்கு குறைவு இல்லை. வட இந்திய உணவு, தென்னிந்திய உணவான இட்லி, தோசை போன்றவையும் இங்கு கிடைக்கிறது. சுமார் 5 சதவிகித டச்சு மக்கள் சைவ உணவுதான் சாப்பிடுகிறார்கள். யூரோ நாணயம் இங்கு புழக்கத்தில் உள்ளது. 1 யூரோ நம் ஊர் பணத்துக்கு சுமார் 65 ரூபாய்.  ஒரு நாளுக்கு 125 யூரோவில் இருவர் தங்கும்படியான அறைகள் கொண்ட நல்ல ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆம்ஸ்டர்டாம் வாய்க்கால்களில் படகுப் பயணம் செய்யும் போது, படகு ஓட்டிகளே போட்டோ எடுத்துக் கொடுத்து விடுகின்றனர். வாய்க்கால் படகுப் பயணத்தின்போது, இருபக்கமும் உள்ள கட்டடங்கள், இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்லலாம்.

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

ராணி தினக் கொண்டாட்டத்தில்

இங்குள்ள மியூசியம், அந்த நாட்டின் பல அம்சங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. அல்லார்ட் பியர்சன் மியூஸியத்தில் டச்சு சரித்திரத்தைப் பற்றியும், கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு ஓவியங் களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. உலகப் புகழ் பெற்ற ஓவியர் வான்கா வரைந்த  ஓவியங்களுக்காக, 'வான்கோ மியூசியம்’ என்றே தனியாக ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

நெதர்லாந்தில் விலை மாதர்களுக்கும். ஓரினச் சேர்க்கைக்கும், பாலியல் விஷயங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விலை மாதர்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். மேலும் அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் மட்டுமே உறவில் ஈடுபடுவதால், இங்கே செக்ஸ் தொழில் மிகவும் பிரபலமாகவும் பணம் கொட்டுவதாகவும் இருக்கிறது.

குடும்பத்துடன் சைக்கிள் பயணம்

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்டு அநியாய தோல்விகளை அள்ளிய நெதர்லாந்து அணியை இந்தியர்கள் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள்.

பூத்துக் குலுங்கும் தூலிப் மலர்கள்

ஜிலு ஜிலு நெதர்லாந்து!

எங்கெங்கும் பூத்திருக்கும் தூலிப் பூக்கள், இந்த நாட்டுக்கே புது வாசனை தருகிறது. அந்த மலரும் குளிர் காற்றும் அந்த நாட்டைவிட்டு வந்த இத்தனை நாட்களாகியும் நெஞ்சுக்குள்ளே நிற்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த நாட்டை மேற்கு ஐரோப்பாவின் அணிகலன் என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism