Published:Updated:

விஸ்வரூபம்!

விஸ்வரூபம்!
பிரீமியம் ஸ்டோரி
விஸ்வரூபம்!

ஆன்மிகம்: ஜெ.வி.நாதன், படங்கள்/ச.வெங்கடேசன்

விஸ்வரூபம்!

ஆன்மிகம்: ஜெ.வி.நாதன், படங்கள்/ச.வெங்கடேசன்

Published:Updated:
விஸ்வரூபம்!
பிரீமியம் ஸ்டோரி
விஸ்வரூபம்!

ரில் ஒரு சிவலிங்கம் இருந்தாலே, அதற்குக் கோயில் கட்டி... கும்பா பிஷேகம் நடத்தி, கும்பிட்டு ஆராதிப்பார்கள் மக்கள். ஆனால், ஒரு ஆலயத்துக்குள் 90 லட்சம் சிவலிங்கங்கள் இருக்கின்றன என்றால், சிலிர்த்துப் போக மாட்டார்களா? 

கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகருக்கு 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது கம்ம சமுத்திரம் என்ற சிற்றூர். இங்குதான் இருக்கிறது, ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் ஆலயம். ஓர் அங்குல உயரத்தில் இருந்து உலகிலேயே உயரமான 108 அடி உயரம் வரை இங்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. 108 அடி பிரமாண்ட லிங்கம் இறைவனின் விஸ்வரூப தரிசனம் போன்று காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதன் எதிரில் 35 அடி உயரத்தில் நந்தி.

விஸ்வரூபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமாண்ட லிங்கம்

1980-ல் ஸ்ரீசாம்பசிவ மூர்த்தி என்ற பெரியவர் ஒரே ஒரு சிவலிங்கத்தை இங்கு ஸ்தாபித்து, அதற்கு ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் என்று பெயர் வைத்தார். இங்கு கோடி லிங்கங்களை நிறுவுவதுதான் அவரது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேற இருக்கின்றது. ஆம், இந்த ஆலயத்துக்கு மேலும் ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்து இருப்பதால், இங்கு மேலும் 10 லட்சம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள். இந்த செயல் நிறைவடையும்போது, தற்போது உள்ள ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் என்ற பெயருக்கு முழு அர்த்தம் கிட்டிவிடும்!

ராம - ராவண யுத்தத்தில் உயிர் விட்டவர்கள் நற்கதி அடைய வேண்டும் என இராமர் நினைத்தார். மேலும், தனுஷ் கோடியில் இருந்து ராமேஸ்வரம் வந்த அவர், அங்கு ஒரு லிங்கத்தைத் தம் கையால் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து போரில் பலியானவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

இதை மனதில் நிறுத்தி, கலியுகத்தில் மக்களிடையே மன அமைதி, மகிழ்ச்சி, பக்தி பெருகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கம்மசமுத்திரத்தில் ஒரே ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர், ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் என்றும் ஸ்ரீ மஞ்சுநாதர் என்றும் அழைக்கப்பட்டார்.

விஸ்வரூபம்!

பிரமாண்ட நந்தி

முதலில் பிரம்மா - விஷ்ணு - மகேஸ்வரர் சந்நிதி, அடுத்து மூலவரான ஸ்ரீ மஞ்சுநாதர் சந்நிதி, பிறகு ஸ்ரீவெங்கடரமண சுவாமி, ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி, ஸ்ரீபாண்டுரங்க சுவாமி, ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீ ராம - லட்சுமண - சீதா, ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி... இப்படி அடுத்தடுத்து தெய்வ சந்நிதிகள் உள்ளன. அனைத்து மூர்த்தங்களும் அழகாக மலர்களால் அலங்கரிக்கப் பட்டு, பூஜைகள் குறைவற நிகழ்த்தப்படுகின்றன. தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர் களுக்காக இந்த ஆலயம் காலை 6 மணி முதல் இடைவெளி இன்றி இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது..

ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தைக் கர்நாடக அரசு சுற்றுலாத் தலமாக அறிவித் துள்ளது. இந்த லிங்கங்களைதரிசிக்கப் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு, கோயிலின் அருகில் உள்ள மண்டப அறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

யார் வேண்டுமானாலும் உரிய கட்டணம் செலுத்தி, (சிவலிங்கத்தின் அளவைப் பொறுத்து

விஸ்வரூபம்!

3,000 முதல்

விஸ்வரூபம்!

30,000 வரை கட்டணம்) இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்யலாம். முன்னாள் பிரதமர் தேவே கவுடா, எஸ்.ஆர்.பொம்மை, ராமகிருஷ்ண ஹெக்டே, பங்காரப்பா, வீரப்ப மொய்லி என்று பல அரசியல் தலை வர்கள் இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில், அவரின் 62-வது பிறந்த நாளுக்கு, தொண்டர்கள் இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு கல்வெட்டுக் குறிப்பு, ஜெயலலிதாவின் உருவத்துடன் காணப்படுகிறது. ரஜினிகாந்த்தின் 60-வது பிறந்த நாளுக்கு அவரின் சகோதரர் சத்தியநாராயண ராவ் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். கமலின் ரசிகர்கள் அவருடைய கலை உலகப் பொன் விழாவை நினைவுகூரும் வகையில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி உள்ளனர்.

விஸ்வரூபம்!

ஸ்ரீ வெங்கடரமணர், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி

இப்படி நிறுவப்பட்ட 90 லட்சம் லிங்கங்களுக்கும் ஏராளமான அர்ச்சகர்களைக் கொண்டு தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு தூப, தீப, தீர்த்த புரோட்சண, நைவேத்தியத்துடன், மேள தாளத்துடன் பூஜை நிகழ்த்தப்படுகிறது.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் லிங்கம், மைசூர் மாவட்டம் எக்கட தேவன கோட்டை என்ற ஊரில் செய்யப்பட்டு, மாதம் ஒரு முறை லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

விஸ்வரூபம்!

ஆலய வாயில்

ஆலயத்தின் சார்பில் வருடத்துக்கு 360 திருமணங்கள் இலவசமாகச் செய்யப்படு கின்றன. அதற்கு மேற்படும் ஒவ்வொரு திருமணத்துக்கும் ரூ. 200 கட்டணம். மேள வாத்தியம், புரோகிதர் மந்திரம் மற்றும் திருமணம் நடத்திவைக்கும் கட்டணம், திருமணச் சடங்குக்கான செலவு எல்லாமே இந்த ரூ. 200-க்குள் அடக்கம். இங்கு உள்ள இரண்டு திருமண மண் டபங்களில், தினம் 10-க்குக் குறையாமல் திருமணங்கள் நடை பெறுகின்றன. வருகிற பக்தர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும், அத்தனை பேருக்கும் சாதம், சாம்பார், கூட்டு, மோர் என்று கடந்த ஆறு வருடங்களாக மதியம் ஒருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

விஸ்வரூபம்!

சிவலிங்க வழிபாடு, நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறு

ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் உள்ளன. திருமணம் ஆகாத வர்களும், தங்களது கோரிக்கை நிறைவேற விரும்புபவர்களும் இந்த மரங்களில் மஞ்சள் கயிற் றைக் கட்டி வழிபடுகிறார்கள். இதனால், இந்த மரங்கள் முழுவதும் மஞ்சள் கயிறாகக் காட்சி அளிக்கின்றன.

விஸ்வரூபம்!

பிரார்த்திப்பவர்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் பெரிதும் நம்புகிறார்கள்!

நம்பி வருவோர்க்கு இது ஒரு பரவச பூமி!

மூலவர் ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரர் சந்நிதியில் நாம் சந்தித்த அர்ச்சகர் முரளி நம்மிடம், ''108 அடி உயர லிங்கத்துக்கு சிவராத்திரி அன்று 3,000 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் நடக்கும். மற்ற தினங்களில் மதியம் ஒருவேளைதான் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கும். சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவெளி இல்லாமல் அன்னதானம் உண்டு. இங்கு உள்ள சாயிபாபா தியான மண்டபம், அமைதியாக தியானம் செய்வதற்கு ஏற்றது. இங்கு, பக்தர்கள் லட்சக்கணக்கில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ய, அவற்றுக்குத் தினம் இரண்டு வேளை பூஜைகள் நடக்கின்றன. இந்த லிங்கங்களை ஸ்தாபித்த மனிதர்கள் கால ஓட்டத்தில் பூவுலகை விட்டுப் போய்விட்டாலும், இந்த லிங்கங்கள் காலம் காலமாக அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்!'' என்கிறார் சிலிர்ப்போடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism