மியூசிக் லைப்ரரி, மூவி லைப்ரரி, டேட்டா லைப்ரரி, டிஜிட்டல் லைப்ரரி... இப்படி எத்தனையோ லைப்ரரிகளைப் பார்த்திருப்போம்; கேள்விப் பட்டிருப்போம். `ஹியூமன் லைப்ரரி’ என்கிற மனித நூலகம் பற்றித் தெரியுமா?

இங்கே மனிதர்கள்தாம் புத்தகங்கள். புத்தகங்களைப் படிப்பதற்குப் பதில் மனிதர்களைப் படிப்பது. அவர்களின் அனுபவங்களைக் கேட்கிற இடம்தான் மனித நூலகம். மனிதர்களே புத்தகங்களாகும் விநோதம்தான் மனித நூலகத்தின் அடிப்படை.
உலகெங்கிலும் பல நாடுகளில் பிரபலமாக உள்ள மனித நூலகம் முதன்முறையாகச் சென்னைக்கு வந்திருக்கிறது. சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் மனித நூலகத்தின் இரண்டு செஷன்கள் அரங்கேறியிருக்கின்றன.

``டென்மார்க்கில் மனித நூலகம் நடத்துகிற Ronni Abergel என்பவர்தான் முதன்முதலில் இதை அறிமுகப் படுத்தியவர். 10 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஆசியாவுக்குக் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இந்தியாவில் இதை முதலில் அறிமுகப்படுத்தியவர் அம்ரிதா. மனித நூலகம் நடத்த வேண்டுமென்றால், ஒருவர் அதற்கான லைசென்ஸ் பெற வேண்டும். ஒரு நகரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அந்த உரிமம் கிடைக்கும். உரிமம் கேட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும். அவற்றைப் பரிசீலித்து இந்த நூலகம் நடத்த விரும்புவதற்கான காரணங்களைக் கேட்பார்கள். காரணங்கள் திருப்தியாக இருந்தால்தான் லைசென்ஸ் கிடைக்கும்.

முகநூல் வழியே ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த மனித நூலகம் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் நான் விண்ணப்பித்தேன். சென்னை சார்பாக ஹியூமன் லைப்ரரி சென்ட்ரலுக்கு விண்ணப்பித்தேன். என் காரணங்கள் பிடித்து லைசென்ஸ் கொடுத்தார்கள்'' என்கிற சாய்லட்சுமி வெங்கட்தான், சென்னையில் மனித நூலகம் நடத்திவருபவர். இன்ஜினீயரிங் பட்டதாரி. சோஷியல் வொர்க்கரும்கூட.

``புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போகிற மாதிரி, மனுஷங்களையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணுமா?''

``பிரபலங்கள் மட்டும்தான் புத்தகங்களா இருக்க முடியுமா?''

``புத்தகங்கள்னா எத்தனை முறை வேணாலும் படிப்போம். மனிதர்களில் அது சாத்தியமா?''

- எதிர்கொண்ட எல்லா கேள்விகளையும் சாய்லட்சுமியின் முன்வைத்தோம்.

``புத்தக வடிவில் வாசகர்களின் முன் நிற்கப் போகிறவர்கள் மனிதர்கள். அப்படிப் புத்தகங்களாக வருவோர், தம் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்களைச் சந்தித்தவர் களாக இருப்பார்கள். நம்மைச் சுற்றி எத்தனையோ சாமானிய மனிதர்கள் இருப்பார்கள். அவர்களிடம் செறிந்த அனுபவங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒரே மாதிரியான சிந்தனைகளைத் தகர்த்தெறிகிறவர் களாகவும், பாரபட்சங்கள் ஏதும் இல்லாதவர்களாகவுமான நபர்களையே புத்தகங்களாக இருக்க அழைக்கிறோம்.

45 நாள்களுக்கு ஒருமுறை இயங்கும் இந்த நூலகத்தில், மனிதப் புத்தகங்களை வாசிப்பது என்பது வித்தியாசமான ஓர் அனுபவமாக இருக்கும். இப்போதைக்கு அரை நாள் மட்டுமே இந்த நூலகம் இயங்குகிறது. அந்த அரை நாளில் வாசகர்கள் இரண்டு மனிதப் புத்தகங்களைப் படிக்க முடியும். படிப்பதென்பது இங்கே உரையாடல் என அர்த்தம் கொள்ளப்பட வேண்டும். புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கும்போது நேரம் என்பது நம் வசமிருக்கும். வேண்டுகிற வரை படிப்போம். வேறு வேலை இருந்தால், புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் பிறகு பார்த்துக்கொள்வோம். ஆனால், மனிதப் புத்தகங்களை அப்படி நினைத்தபோதெல்லாம் தவணை முறையில் வாசிக்க முடியாது. மனிதப் புத்தகங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை என்பதால், வாசகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துவதில்லை.

எந்தப் புத்தகத்தை வாசிக்கப் போகிறோம் என்பது வாசகர்களுக்கு முன்கூட்டியே தெரியாது. வந்த பிறகு நாங்கள் கொடுக்கும் பட்டியலிலிருந்து அவர்கள் விருப்பமான இரண்டு புத்தகங்களைத் தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்க நூற்றுக்கணக்கான சாய்ஸ் இருக்கும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேலான விருப்பங்கள் இருப்பது இயல்பு என்பதால், இந்தப் பட்டியல் நிச்சயம் அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும். ஒரு நேரத்தில் நான்கு முதல் ஐந்து பேர் வரை ஒரு மனிதப் புத்தகத்தை வாசிக்கலாம். புத்தகங்களாக வருகிறவர்களுக்கோ, வாசகர்களுக்கோ கட்டணங்கள் ஏதுமில்லை. இடம், உபசரிப்பு உள்ளிட்ட விஷயங்களை சென்னை, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியே ஏற்கிறது.

வாழ்க்கையில் ஏதோ வித்தியாசமாகச் செய்வதாகப் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், மனிதப் புத்தகமாக இருக்க நினைப்பவர்கள் சில விஷயங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தான் சந்திக்கிற அனுபவங்களைத் தன் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கவும் அதை அடுத்தவர்களுக்குக் கொண்டுசேர்க்கவும் முடிகிறதென்றால், அவர் மனிதப் புத்தகமாக இருக்கத் தகுதியானவர். இந்தத் தகுதிகளை உடைய எல்லோரும் உரையாடலில் திறமையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து மனிதப் புத்தகமாகத் தயார்ப் படுத்துவோம். எல்லா மனிதருக்குள்ளும் ஆயிரம் அனுபவங்கள் இருக்கும். அடுத்தவருக்குப் பயன்படுகிற அனுபவங்கள் உள்ள யாரும் மனிதப் புத்தகங்களாக இருக்கலாம். பிரபலம் என்கிற முத்திரை தேவையில்லை. மனிதப் புத்தகங்களுக்கு மொழியும் தடையில்லை. எந்த மொழி பேசுவோரும் புத்தகங்களாகலாம் https://www.facebook.com/HumanLibraryChennai/ என்கிற முகவரியில் முகநூல் வழியே எங்களுடன் இணையலாம்'' - அத்தனை சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகின்றன சாய்லட்சுமியின் பதில்கள். சமூக வலைதளங்களிலும் சாராவிலும் முடங்கிக்கிடக்கும் மனிதகுலத்தை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி இந்த மனித நூலகம்!

மனித நூலகத்தில் காணக்கிடைக்கிற புத்தகங்கள் ரசனையானவை, ரகளையானவை. அப்படிச் சில புத்தகங்கள் இங்கே பேசக் கேட்போமா?

இயற்கை வாழ்வியல்... இனிய வாழ்வியல்!

``நான் இமாவதி பேசுகிறேன்...’’

``நான் ஓர் இல்லத்தரசி. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் உடல்நலக் கோளாறுகள் நிறைய இருந்தன. ஒரு நாளைப்போல இன்னொரு நாள் இருந்தது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை. திடீரென சுவாசப் பிரச்னை வரும். நுரையீரல் சிறப்பு மருத்துவரைப் பார்ப்பேன். இன்னொரு நாள் இனம்தெரியாத வலி ஏற்படும். பிசியோதெரபி செய்துகொள்வேன். ஒவ்வொரு முறையும் எல்லா டெஸ்ட்டுகளையும் எடுக்கச் சொல்வார்கள். மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால், எதிலுமே எனக்குத் தீர்வுகள் கிடைக்கவில்லை. இந்த டெஸ்ட்டுகளிலிருந்தும் மருந்துகளிலிருந்தும் விடுபட்டு, நோய்களின்றி வாழ வழிகளே கிடையாதா எனத் தேடியபோது இயற்கை வாழ்வு மற்றும் உணவு முறைகள் பற்றிய தகவல்கள் தெரியவந்தன. அந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பின்பற்ற ஆரம்பித்தோம். ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால்தான் வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன எனத் தெரிந்து முதல்கட்டமாக ஃப்ரிட்ஜ் உபயோகிப்பதைத் தவிர்த்தோம். அடுத்து, உணவு முறைகளில் நிறைய மாற்றங்களைப் பின்பற்றினோம். ரீஃபைண்டு ஆயில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்தோம். சமையலறையை ஆரோக்கியப் பெட்டகமாக மாற்றினோம். பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கும் கண்ணாடிப் பொருள்களுக்கும் மாறினோம். கேன் தண்ணீரை வாங்கிக் கொதிக்க வைத்துக் குடித்துக்கொண்டிருந்தோம். அப்படிக் கொதிக்க வைப்பதன்மூலம் அதிலுள்ள சத்துகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன என அதையும் தவிர்த்தோம். தண்ணீரைப் பிடித்து காட்டன் துணியில் வடிகட்டி, அப்படியே மண்பானையில் ஊற்றிப் பயன்படுத்தத் தொடங்கினோம். அந்தத் தண்ணீரில் கிருமிகள் இருக்கும்; அவை நோயைப் பரப்பும் என்பதெல்லாம் நமக்குள் திணிக்கப்பட்ட கருத்துகள்.

வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்து காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்படி வாழத் தொடங்கினோம். இப்படி வாழ்வியலிலும் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு கடந்த ஐந்து வருடங்களாக நானும் என் வீட்டாரும் எந்தவொரு உடல்நலப் பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாகவே இருக்கிறோம். அலோபதி, ஆயுர்வேதா, சித்தா என எந்த மருத்துவத்தையும் நாடுவதில்லை. சாதாரணமாகச் சளி, காய்ச்சல் வந்தால் ஒருநாள் படுத்து ஓய்வெடுப்போம். பசிக்குக் கஞ்சியும் தாகத்துக்குத் தண்ணீரும் குடிப்போம். அடுத்த நாள் எழுந்துவிடுவோம். வீட்டிலுள்ள எல்லோரும் காலை முதல் இரவு படுக்கும் வரை அதே எனர்ஜி குறையாமல் சுறுசுறுப்பாகவே இயங்கிக்கொண்டிருப்போம்.

இந்த எல்லா மாற்றங்களையும் நானே முதல் நபராக இருந்து ஆரம்பித்துவைத்தேன். கொதிக்காத தண்ணீரைக் குடிக்கலாமா என எல்லோரும் பயந்துகொண்டிருந்தபோது, முதலில் நான் அதைச் செய்தேன். ஒருநாள் முழுவதும் அப்படிக் குடித்தேன். எனக்கொரு பிரச்னையும் வரவில்லை எனத் தெரிந்ததும் மற்றவர்களும் செய்தார்கள்.

தண்ணீரை மாற்றிக் குடித்தாலே ஆரோக்கியம் கெட்டுப்போகும் எனப் பயந்துகொண்டிருக்கிற வேளையில், நாங்கள் தைரியமாக மெட்ரோ வாட்டரை அப்படியே பயன்படுத்த ஆரம்பித்தோம். அந்தத் தண்ணீரைப் பானையில் பிடித்துவைத்து, நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் தேத்தாங்கொட்டையை அதற்குள் போட்டுவைப்போம். அது தண்ணீரிலுள்ள கசடுகளை அடியில் தங்கச் செய்துவிடும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, பானையில் ஊற்றி, தேவைப்பட்டால் பானைக்குள் செம்பு டம்ளரைப் போட்டுவைத்து மறுநாள் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவோம். செம்பு நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மண்பானை கிருமிகளை எடுத்துவிடும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

`பசித்த பின் புசிப்போம்’ என்பதுதான் எங்கள் வீட்டின் தாரக மந்திரம். மூன்று வேளைகளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பதில்லை. யாருக்கு எப்போது பசிக்கிறதோ அப்போது சாப்பிடுவோம். பசியை உணர முடியாமல் செய்கிற காபி, டீ, பால் எதுவும் எங்கள் வீட்டில் கிடையாது. நெய் மட்டும் சேர்த்துக்கொள்வோம். திடீரென காபியோ, டீயோ குடிக்க வேண்டும் எனத் தோன்றினால், மூலிகை டீதான் குடிப்போம். வீட்டில் ஓமவல்லி, துளசி என மூலிகைச் செடிகள் இருக்கின்றன. ஆவாரம்பூ, ரோஜா போன்றவற்றைப் பொடி செய்து வைத்திருப்போம். மூலிகைகளுடன் இந்தப் பொடியையும் சேர்த்துக் கொதிக்கவைத்து வெல்லம் சேர்த்து வடிகட்டிக் குடிப்போம்.

எங்கள் மூதாதையர் பின்பற்றிய எல்லாவற்றையும் நாங்களும் பின்பற்றுகிறோம். வீட்டில் எந்த வேலைகளுக்கும் கெமிக்கல் பயன்பாடு கிடையாது. குளிப்பதற்கு சோப்போ, ஷாம்பூவோ கிடையாது. பச்சைப்பயறு மாவும் சீயக்காயும்தான் உபயோகிப்போம். வாரம் ஒருநாள் எண்ணெய்க் குளியல் கட்டாயம். துணி துவைக்க பூந்திக்கொட்டைப் பொடியைச் சுருக்குப் பைக்குள் போட்டுக் கட்டி வாஷிங் மெஷினுக்குள் போட்டுவிட்டால் துணிகள் சுத்தமாகிவிடும். பாத்ரூம் சுத்தப்படுத்த எலுமிச்சை, பாத்திரம் தேய்க்க பூந்திக்கொட்டை, சீயக்காய் அல்லது மீந்துபோன இட்லி மாவை உபயோகிப்போம். பாத்திரம் கழுவும் தண்ணீர் தோட்டத்துக்குச் செல்லுமாறு அமைத்திருக்கி றோம். அதனால் செடிகளுக்கும் கெமிக்கல் சேர்வதில்லை. நகரத்தில் வசிக்கிறவர்களுக்கு இது சாத்தியமா என்கிற கேள்வியைத் தவிர்க்க முடிவதில்லை. எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வந்து எங்கள் வாழ்வியல் முறையைப் பார்த்த பிறகு நம்புகிறார்கள். நாங்களும் பின்பற்றுகிறோம் என்கிற நம்பிக்கையுடன் செல்வார்கள். இதுதான் எங்கள் வாழ்க்கை. ஆரோக்கியமாக வாழ்வதென்பது எளிதானது மட்டுமல்ல... செலவில்லாததும்கூட.''

ஓ.கே கண்மணி..!

``நான் ஸ்ரீராம் ஸ்ரீதர் பேசுகிறேன்...’’

``சென்னையில் பிறந்து வளர்ந்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸில் இன்ஜினீயரிங் முடித்து விட்டு மாஸ்டர்ஸ் டிகிரி படிப்பதற்காக அமெரிக்கா போனேன். எம்.பி.ஏ முடித்துவிட்டுச் சொந்தமாக நிறுவனம் தொடங்கினேன். பிறகு இந்தியாவிலும் அதற்கொரு கிளை தொடங்கினேன். பிசினஸுக்கான நேரம் போக மீதி நேரத்தில் தொழில்முனைவோருக்கான விழிப்பு உணர்வு கொடுப்பது, சமூகத்தில் மற்ற யாரும் பேசத் தயங்கும் சென்சிட்டிவான விஷயங்களைப் பேசுவது போன்றவற்றைச் செய்கிறேன்.

நான் ரொம்பவும் பழைமைவாதக் குடும்ப அமைப்பிலிருந்து வந்தவன். ஆசாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். திருமணம், உறவுகள் குறித்த அவர்களின் சித்தாத்தங்களும் கொள்கைகளும் வேறு மாதிரி இருக்கும். பெண் பார்த்துக் கல்யாணம் செய்வது ஒன்றுதான் சரி என்றே போதிக்கப்பட்டு வளர்ந்தேன். மற்ற எந்த மாதிரியான உறவுகளும் தவறு என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன். தவறு என்பதைக் கேட்டு வளர்ந்துகொண்டிருந்தபோதே, அவை ஏன் தவறு எனச் சொல்லப்படுகின்றன. இவற்றை மீறி வேறு மாதிரியான உறவுகளை அமைத்துக் கொள்வோரும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்கள்... பிறகு அதெல்லாம் எப்படித் தவறாகும் என்கிற கேள்விகளும் எனக்குள் இருந்தன. அமெரிக்கா போனபோது மக்கள் அவரவர் விருப்பப்படி வாழ்வதைப் பார்த்தேன். எதேச்சையாக எனக்கும் அப்படியோர் உறவு அமைந்தது. அதாவது லிவ் இன் ரிலேஷன்ஷிப். எனக்கும் அது பிடித்திருந்தது. சமுதாயத்துடன் சண்டை போடுவதோ, புரட்சி செய்வதோ என் நோக்கமல்ல.

நம் சமூகத்தில் பெண் பார்ப்பது, பிடித்திருந்தால் திருமணம் செய்வதெல்லாம் ஆணாதிக்கக் குடும்ப அமைப்பின் வெளிப்பாடாகவே தொடர்ந்திருக்கிறது. நம் வீடுகளிலேயேகூட அப்பாவுக்குக் கீழ்தான் அம்மா என்பதை சர்வ சாதாரணமாகக் கடந்து வந்திருப்போம். அதைப் பார்த்து வளர்கிறவர்களுக்கும் அதே சிந்தனைதான் ஊறிப்போயிருக்கும். அதெல்லாம் வேண்டாம் என முடிவு செய்தபோதுதான் எனக்கு இந்த உறவு அமைந்தது. என்னுடன் இருக்கும் பெண் என்னுடன் படித்தவர். ரொம்பவும் சுதந்திரமானவர். தமிழ்ப் பெண். இந்த உறவுக்குள் இருப்பதால், சாமி எங்கள் கண்களைக் குத்திவிடவில்லை; வீட்டில் தெரிந்த பிறகு எங்களை யாரும் ஒதுக்கவில்லை; துரத்திவிடவில்லை; ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

எனக்கு இணையான ஒரு துணை தேவைப்பட்டார். அவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு, என் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு எனக்குக் கீழே இருப்பவராக இருக்கக் கூடாது என நினைத்தேன். எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது. சேர்ந்து வாழ்ந்து பார்க்கிறோம். பிற்காலத்தில் தேவைப்பட்டால், திருமணம் செய்துகொள்வோம்.

விவாகரத்து செய்யாமலிருப்பதை வைத்து, அந்தத் திருமண உறவு நன்றாக இருக்கிறது என நாம் அர்த்தம் கொள்கிறோம். நன்றாக இருக்கிறது என்பதற்கும் அந்த உறவு சந்தோஷமானதாக இருக்கிறது என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. திருமணமாகிவிட்ட காரணத்தினாலேயே ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்பவர்களே நம் சமுதாயத்தில் அதிகம்.

அதற்காக இதுதான் ஆகச் சிறந்த உறவு என்றும் நான் சொல்லவில்லை. இதிலும் பிரச்னைகள் வரும். பெரியவர்கள் பார்த்துச் செய்துவைக்கிற திருமண உறவுகள் என்றால், அவர்களுக்குள் சின்ன பிரச்னை வந்தாலே அதைப் பெரிதாகவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், திருமணமில்லாமல் சேர்ந்து வாழ்கிற உறவு சமூகத்தால் அங்கீகரிக்கப்படாதது என்பதால், நாங்களேதான் எங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டாக வேண்டும்.

`இந்த உறவில் கமிட்மென்ட் இருக்காதே...' என்று சிலர் கேட்பதுண்டு. இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருப்பதால்தான் சேர்ந்திருக்கிறோம். அந்த விருப்பமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிற வாழ்வில் கமிட்மென்ட் இருப்பதாகச் சொல்வது எந்த வகையில் நியாயம்? கல்யாணம் என்பது இருவர் சேர்ந்து வாழ்வதும் குடும்பத்தைப் பெருக்குவதும் என்கிற நிலை மாறிவிட்டது. தலைமுறை தலைமுறையாகப் பெண் பார்க்கும் படலத்திலோ, பையன் பார்க்கும் படலத்திலோ மாற்றங்கள் இல்லை. ஆனால், ஆண் பெண் எதிர்பார்ப்புகள் மாறியிருக்கின்றன.

ஒருவேளை எங்களுக்குத் திருமணமாகி யிருந்தால் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்துதான் வாழ வேண்டும் என்கிற பிரஷர் எங்களுக்கு இருந்திருக்கும். இன்று நாங்கள் இருவரும் வேறு வேறு இடங்களில் இருக்கிறோம். என் இணையும் கம்ப்யூட்டர் இன்ஜினீயர். அவருக்கு வேறு ஊருக்குப் போக ஒரு வாய்ப்பு வந்தது. அவரது துறையில் சிறக்க அது அவருக்கு அவசியமாக இருந்தது. பாரம்பர்யமான திருமண அமைப்புக்குள் நாங்கள் இருந்திருந்தால், `உனக்கென்ன வேலை அவ்வளவு முக்கியமா? அவன் வேலை பார்க்கிற இடத்துலயே இரு' என்கிற பேச்சு வந்திருக்கும். எனக்கு என் துறை சார்ந்த லட்சியங்கள் இருப்பதுபோலவே அவருக்கும் இருக்கின்றன. அதை அடையும் உரிமையும் அவருக்குண்டு. வேறு வேறு ஊர்களில் இருப்பதென முடிவு செய்தோம்.

பிறந்தது முதல் பல வருடங்களாக நான் என் வீட்டில் கற்றுக்கொள்ளாத விஷயங்களை இந்த உறவு எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அது என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறது.'’

பயணங்கள் முடிவதில்லை!

``நான் ஸ்ரீலட்சுமி பேசுகிறேன்...’’

``நான் சென்னைப் பெண். சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் வேலை பார்க்கிறேன். நான் பயணங்களின் காதலி. பயணங்களைப்போல சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம் வேறில்லை.

பயணம் என்பது வேலை நிமித்தமானது...குடும்பத்துடன் மட்டுமே போவது... தனிப்பட்ட மகிழ்ச்சிக்கானதல்ல... அது வீண் செலவு... - பயணம் பற்றி இப்படிப் பலருக்கும் பல கருத்துகள்.

தவிர, தனியே பயணம் செய்வது குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் பலருக்கும் இருந்தன. அது பாதுகாப்பற்றது; திருமணத்துக்கு முன்னர் தனியே பயணம் செய்வது சரியானதா என்றெல்லாம் ஏகப்பட்ட மனத்தடைகளையும் பார்த்தேன். நான் இந்தியாவில் அநேக மாநிலங்களுக்குத் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். இவற்றில் பல பயணங்களில் முழுக்க ஆண்களும் நான் மட்டுமே பெண்ணாகவும் இருந்ததும் உண்டு.

முதன்முறை தனியே பயணம் செய்கிறபோது எனக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்... ஒவ்வொரு பயண அனுபவமும்தான் அந்தக் கேள்விகளுக்குப் பதில்களாகின.

தனியே பயணம் செய்வதில் நிறைய சாதகங்கள் உள்ளன. தங்கும் இடம் முதல் சாப்பாடு வரை எல்லாம் சக பயணிக்கும் பிடிக்குமா என யோசிக்கத் தேவையில்லை. ஓரிடத்துக்குப் போகும்போது எனக்குத் தோன்றும் விஷயங்களையும் எனக்குப் பிடிக்கிறவற்றையும் செய்கிற சுதந்திரம் இருக்கும். கொல்கத்தா போனபோது வழக்கமாகச் சுற்றுலாப் பயணிகளின் கவனம்ஈர்க்கும் விஷயங்களை நான் பார்க்க நினைக்கவில்லை. தெருவோரக் கடைகளில் ஷாப்பிங் செய்தேன்... அங்கேயே சாப்பிட்டேன். பழைய கொல்கத்தாவை ரசித்தேன். தனியே பயணம் செய்கிறபோது உங்கள் மனநிலை வேறு மாதிரி மாறியிருக்கும். கவனம் அதிகரித்திருக்கும். யாருடனாவது சேர்ந்து பயணம் செய்கிறபோது அவர்களுடன் மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். புது மனிதர்களிடம் பேசவே மாட்டோம். தனியே போகும்போது புது நபர்களிடம் பேசுவோம். ஒன்றிரண்டு முறை தனியே பயணம் செய்த பிறகு யாரை நம்பலாம்; யாரை நம்பக் கூடாது; யாரிடம் பேசலாம் என்கிற பக்குவமும் வரும்.

நான்கு வருடங்களாக ஆண்களுடன் பயணம் செய்கிறேன். இதுவரை அவர்களால் எனக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஆனால், அந்த அசட்டுத் தைரியத்தில் நான் அலட்சியமாக இருப்பதுமில்லை. இப்போதும் அவர்களுடனான பயணங்களில் பெப்பர் ஸ்பிரே மாதிரியான தற்காப்புப் பொருள்களைக் கையில் எடுத்துக் கொண்டுதான் போகிறேன். அவற்றைப் பயன்படுத்த இதுவரை வாய்ப்புகள் வரவில்லை என்பது நல்ல விஷயம். நாம் பயப்படுகிற அளவுக்கு இந்த உலகம் கெட்டதுமில்லை... நாம் நினைக்கிற அளவுக்கு இந்த உலகம் நல்லதுமில்லை. சக ஆண் பயணிகளால் பிரச்னைகள் வந்துவிடுமோ எனப் பயந்த போதெல்லாம் பெருமழை பெய்தது, ட்ரெயின் கேன்சல் ஆனது மாதிரியான பிரச்னைகள்தான் வந்திருக்கின்றன. பிரச்னைகளே வராது என்று தைரியமாக இருந்தபோது யாரோ பின்தொடர்ந்து வந்தது மாதிரியான அனுபவங்களும் நடந்திருக்கின்றன.

தனியே பயணம் செய்யலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தைப் பெண்கள் தூக்கி எறிய வேண்டும். அந்தப் பயணத்துக்கேற்ப தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். திடீரென ஆபத்து வரும்போது அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடும் அளவுக்கு உடலில் தெம்பிருக்க வேண்டும். என்னதான் உடனிருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், நாம் புதிய இடத்தில் தனியே இருக்கிறோம் என்கிற நினைப்பு எப்போதும் இருந்தால்தான் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்கிற துணிச்சலும் இருக்கும்.

இதுவரை என் பயணங்களுக்கு வீட்டில் `நோ’ சொன்னதில்லை. யாருடனாவது சேர்ந்து செல்கிறேன் என்றால், அவர்களது தொடர்பு எண்களைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்வார் என் அம்மா. தனியே போகிறேன் என்றால் எங்கே போகிறேன், எத்தனை நாள்கள் என்கிற தகவல்களைச் சொல்ல வேண்டும். ஒன்றுக்கு இரண்டு பவர் பேங்க் எடுத்துக் கொண்டு போகச் சொல்வார்.

பயணம் எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்திருக்கிறது. அனுபவங்களை மட்டுமல்ல....நிறைய நண்பர்களையும் நிறைவான வாழ்க்கைப் பாடங்களையும்!''