மதுரை என்றாலே, பருக `குளு குளு ஜிகிர்தண்டா’ என்று உச்சுக்கொட்டுவார்கள். அதைத் தவிர இன்னும் சில பானங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பருத்திப்பால். மதுரை, முனிச்சாலையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பருத்திப்பால் வியாபாரம் செய்கிறார் `பருத்திப்பால்’ சந்தானம். அவரிடம் பேசினோம்...

``என் அப்பா காலத்தில் ஆரம்பிச்சது. எனக்கும் என் பையனுக்கும் இதுதான் தொழில். என் மனைவி, மகன், மருமகள் என அனைவரும் சேர்ந்துதான் இந்தப் பருத்திப்பால் வியாபாரத்தை நடத்திவருகிறோம். பருத்திப்பால் என்றவுடன் வெல்லம், சீனி, எசென்ஸ் கலந்து செய்யும் இந்தக்காலப் பருத்திப்பால் என்று நினைத்துவிட வேண்டாம். கமகமக்கும் தித்திப்பான, திக்கான மஞ்சள் நிறத்தில் இருக்கும் கருப்பட்டிப் பருத்திப்பால். இதில் சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, கருப்பட்டி, திப்பிலி, தேங்காய் போன்ற இயற்கைப் பொருள்களைக் கலந்து `உணவே மருந்து’ என்ற பாணியில் பருத்திப்பாலைத் தயாரிக்கிறோம். எங்கள் குலதெய்வத்தின் பெயரைத்தான் இந்தக் கடைக்கும் வைத்திருக்கிறோம்... `திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை.’ இந்தப் பருத்திப்பால் வியாபாரத்தை ஒரு சேவை மனப்பான்மையோடுதான் செய்துவருகிறோம். சர்க்கரையோ, வெல்லமோ கலப்படம் இல்லாமல், ஒரிஜினல் பனங்கருப்பட்டியைக்கொண்டுதான் தயாரிக்கிறோம்'' என்றவர், பருத்திப்பால் செய்முறையை விளக்கினார்.

“பருத்தி விதையை நன்கு ஊறவைத்து உரலில் ஆட்டி, அதிலிருந்து கிடைக்கும் பாலை, பசும்பால்போலக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆட்டிய பச்சரிசியுடன் கலந்து அதில் கருப்பட்டியைக் காய்ச்சி ஊற்றிவிடுவோம். பின்பு, மிதமான சூட்டில் பாலை வைத்திருந்து, வாடிக்கையாளர்கள் கேட்கும்போது ஏலக்காய், திப்பிலி ஆகியவற்றைக் கலந்து, சுடச்சுட பருத்திப்பால் கொடுப்போம். ஸ்பெஷல் பருத்திப்பாலும் உண்டு. அது வேறொன்றும் இல்லை... சிறிது நெய் சேர்த்தால், ஐயப்பன் கோயில் பிரசாதம்போல பருத்திப்பால் கமகமக்கும். ஸ்பெஷல் பருத்திப்பால் 20 ரூபாய், நார்மல் பருத்திப்பால் 15 ரூபாய். பருத்திப்பாலில் சேர்க்கும் பொருள்கள் அனைத்தும் தரமானவை. ஆனாலும், குறைந்த விலைக்கே பருத்திப்பாலை விற்கிறோம். மதுரையில் எங்கு சென்று சாப்பிட்டாலும் எங்கள் பருத்திப்பால் சுவை கிடைப்பதில்லை என்பார்கள் எங்கள் வாடிக்கையாளர்கள். சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகிய நோய்களுக்கு மருந்து, இந்தப் பருத்திப்பால்.

பருத்திப்பாலுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் தேடித் தேடி வாங்குவோம். குண்டூரிலிருந்து வரும் சன்ன ரக பருத்திவிதைதான் வாங்குவோம். அதேபோல, பனங்கருப்பட்டி திருச்செந்தூரிலிருந்து வாங்குவோம். எங்கள் கடையில் கூழும் கிடைக்கும். முன்பெல்லாம் இந்த ஏரியாவில் சில தியேட்டர்கள் இருந்தன. வியாபாரமும் நன்றாக நடந்தது. வாடிக்கையாளர்களுக்குப் பருத்திப்பால் கொடுக்க முடியாத அளவுக்குக் கடை பிஸியாக இருக்கும். அந்தக் காலமெல்லாம் மாறிப்போய்விட்டது. அவ்வளவு வியாபாரம் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு எங்கள் பருத்திப்பால் கடைக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது’’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார் சந்தானம்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. நாம் உண்ணும் உணவும், உணவுப் பழக்கமுமே நம் உடல்நலத்தைத் தீர்மானிக்கிறது. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுவது. இயற்கை உணவுமுறையையும் இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் மனதையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில், நம் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும் மதுரைப் பருத்திப்பாலுக்கு முக்கிய இடம் உண்டு!