மகாபாரதத்தில் புகழ்பெற்ற கிளைக் கதை ஒன்று உண்டு. `அவரவர் அரண்மனை நிறைந்திருக்க வேண்டும். அதற்கு எந்தப் பொருளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற ஒரு போட்டியைப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வைப்பார் துரோணர். கெளரவர்கள், தங்கள் அரண்மனையை வைக்கோலால் நிரப்பிவிடுவர். அதுவும் எப்படி, ஆள் நுழைய முடியாத அளவுக்கு. ஆனால், பாண்டவர்களோ வேறொரு வழிமுறையைக் கையாள்வார்கள். அரண்மனை முழுக்க விளக்குகளை ஏற்றி விடுவார்கள். விளக்குகளின் ஒளி அரண்மனையையே நிறைத்துவிடும். அழகும் தெய்விகமும் கலந்து அரண்மனை விளக்கொளியில் ஜொலிக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பாண்டவர்களுக்கே... விளக்கின் மகிமை அப்படி!

தீப ஒளிதான் தீபாவளியானது. தீபங்களின் ஒளியில், வீட்டின் அழகை இன்னும் கூட்டும் திருநாளே தீபாவளி. எந்தவொரு சுபகாரியத்துக்கும் சாட்சியாக இருப்பவை தீபங்களும் அவற்றை ஏந்தி நிற்கும் விளக்குகளும்தான். வீட்டில் நடைபெறும் சின்ன விசேஷம் தொடங்கி திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல விழாக்களிலும் குத்துவிளக்கில் தீபம் ஏற்றியே விழா தொடங்கப்படுகிறது. திருமணச் சீரின் முதல் பொருளாக இடம்பெறுவதும் குத்துவிளக்குகளே!

குத்துவிளக்கு என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும்வரும் ஊர், நாச்சியார்கோவில். சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாகக் குத்துவிளக்குத் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது இந்த ஊர். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாச்சியார்கோவில். வயல்வெளிகள் சூழ்ந்திருக்கும் பசுமையான ஊர். நாச்சியார்கோவிலின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும், குத்துவிளக்குப் பட்டறைகள் நம்மை வரவேற்கின்றன. பித்தளை, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட விளக்கு தயாரிக்க உதவும் ஆதார உலோகங்களை `தெரா’ என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தெராவை உருக்கும் வெப்பம், இன்னொரு பக்கம் கடைசல் மெஷினின் சத்தம், மற்றொரு பக்கம் விறுவிறுவென நடந்துகொண்டிருக்கும் நகாசு வேலைகள் என ஒவ்வொரு சின்னப் பட்டறையும் பரபரப்பாகவே இருக்கின்றன. சின்னஞ்சிறு அறை அளவே உள்ள பட்டறைகளிலிருந்து அழகழகான விளக்குகள் தயாராவதைப் பார்க்கும்போது, பிரமிப்பும் ஆச்சர்யமும் எழுகின்றன. விளக்குத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் களைப்பையும் சோர்வையும் போக்க உதவுவது, அவ்வப்போது அவர்கள் பருகும் சூடான தேநீரும் விடாமல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களும்தான்.

பலவிதமான குத்துவிளக்குகள் சந்தையில் கிடைத்தாலும், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்தான் நமது பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்படுபவை. பார்க்கும்போதே நம்மை ஈர்த்துவிடும் இந்தக் குத்துவிளக்குகளைத் தயாரிக்கும் முறை பல தலைமுறைகளாக, பரம்பரை பரம்பரையாகக் கை மாற்றித்தரப்பட்டு வருகிறது. மிகக் கடுமையான உழைப்பு, அருமையான, நேர்த்தியான, நுட்பமான வேலைப்பாடுகளுக்குப் பிறகு அழகான விளக்காக இது நம் கைக்குக் கிடைக்கிறது.

பதப்படுத்தப்பட்ட மண்ணை ஒரு பெட்டிக்குள் நிரப்பி, அதில் குத்துவிளக்குக்கான பாகங்களின் அச்சு பதியப்படுகிறது. பிறகு, `தெரா'வை உருக்கி, அச்சுப் பதிக்கப்பட்ட இடத்தில் ஊற்றுகிறார்கள். அது தயாரானதும் அதை எடுத்து, அதிலுள்ள பிசிறுகள் நீக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் மரை போடுகிறார்கள். அடுத்து, அதைக் கடைசலில் இட்டு, அதற்கு முழு உருவம் தருகிறார்கள். பின்னர், நகாசு வேலைகள் செய்து அழகுபடுத்துகிறார்கள். எல்லாம் முடிந்ததும், பார்த்தவுடனேயே நம்மை ஈர்க்கும்விதமாக பாலீஷ் செய்கிறார்கள்.

இந்தக் குத்துவிளக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது எளிது. அதன் பாகங்களைச் சுலபமாகப் பிரித்து, மீண்டும் சேர்த்துவிடலாம். குத்துவிளக்கின் கீழ்ப் பகுதி `தட்டு' என்றும் (`பாதப் பகுதி’ என்றும் அழைக்கிறார்கள்), நடுப் பகுதி `கரணை' என்றும் குறிப்பிடப்படுகிறது. (கரணை இரு பகுதிகளாக இருக்கும். அதன் கீழ்ப்பகுதி `காய்'). கரணையின் மேல் அமரும் பகுதி `தகழி' என்று அழைக்கப்படுகிறது. `தகழி'யின் மேல் பகுதியான `பிரபை' அன்னப்பட்சி, விநாயகர், லக்ஷ்மி உள்ளிட்ட பல உருவங்களில் செய்யப்படுகிறது.

அன்னப்பட்சி விளக்கு, அஷ்டோத்திரம் விநாயகர் விளக்கு, லக்ஷ்மி விளக்கு, மலபார் விளக்கு, சேவா தீபம், சக்தி தீபம், அடுக்கு தீபம், அடுக்கு ரத தீபம், இரண்டு தகழி அன்ன விளக்கு, கிளி விளக்கு, குபேர விளக்கு, தாமரை விளக்கு, தொங்கு விளக்கு, சங்கு சக்கரத் தொங்கு விளக்கு... எனப் பல வகைகளில் விளக்குகள் நாச்சியார்கோவிலில் தயாராகின்றன. இவற்றில் பல, ஒரு அடி முதல் ஆறு அடி வரையான உயரங்களில், நமக்குத் தேவையான அளவுகளில் கிடைக்கின்றன. விளக்கின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றைக்கொண்டு ரூபாய் 400-ல் இருந்து 80,000 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகின்றன.

கும்பகோணத்தைச் சுற்றி நவகிரகக் கோயில்கள் இருக்கின்றன. அங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நாச்சியார்கோவிலுக்கு வந்து குத்துவிளக்குகள் வாங்கிச் செல்கிறார்கள். மற்ற ஊர்களைவிட இங்கு விலை குறைவு என்பதோடு, தயாரிக்கும் இடத்தில் நேரில் பார்த்து வாங்கும்போது அதன் தரம் குறித்த நம்பிக்கையும் ஏற்படும் அல்லவா! குத்துவிளக்கு விற்கும் இடத்தில் வாடிக்கையாளர் - விற்பனையாளர் என்பது போல அல்லாமல் உறவினர்களைப் போல, தேநீர் குடித்தபடி நீண்ட நேரம் உரையாடுகிறார்கள். திருமணத்துக்கு விளக்கு வாங்க வருபவர்கள், கடைக்காரரை அந்தத் திருமணத்துக்கு அழைக்கும் அளவுக்குப் பழகிவிடுகிறார்கள். அடுத்து, அவர்கள் தமது உறவினர்களை, நண்பர்களை அழைத்து வருவதும் இயல்பாகிவிடுகிறது. நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் இந்தியாவைக் கடந்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி.

நம் பாரம்பர்ய முறையில் தயாரான நாச்சியார்கோவில் விளக்குகளில் தீபம் ஏற்றி, அவற்றின் ஒளியில் நம் புத்தாடை பளபளக்க தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

விளக்குகள் உதவி: பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் ரெத்னா மெட்டல் மார்ட், நாச்சியார்கோவில்.