படைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்று நிரூபித்திருக்கிறார், கென்யாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கோர்டன் பெம்பிரிட்ஜ் (Gordon Pembridge). சிற்பக் கலையில், தனது வித்தியாசமான சிந்தனையால், மரக்கிண்ணங்களில் இவர் வரைந்த ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

மரத்தில் செதுக்கிய சிற்பங்கள்தான் என்றாலும் பச்சைப் பசேலென மரங்கள், பறக்கும் பறவைகள், துள்ளி ஓடும் மான்கள் என நிஜமான ஆப்பிரிக்கக் காட்டையே நேரில் பார்ப்பதுபோல், `வாவ்' சொல்ல வைக்கிறது கோர்டனின் கைவண்ணம். இவர் கென்யா நாட்டில் பிறந்திருந்தாலும், 10 வயது வரைதான் அங்கு இருந்தார். பிறகு, படிப்பதற்காக நியூசிலாந்துக்கு வந்துவிட்டார்.

தன் ஓவியங்களுக்காகப் பிரத்யேகமாக மரக் கிண்ணங்களை உருவாக்கி, கூர்மையான கருவிகளைக்கொண்டு ஆப்பிரிக்கக் காடு, விலங்குகள் எனப் பல்வேறு உருவங்களைப் பொறுமையுடனும் கலைநயத்துடனும் செதுக்கி, அதற்கேற்ற வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்துகிறார். `இந்தக் கலையைக் கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது' என்கிறார்கள் பார்வையாளர்கள்.

இயற்கை சார்ந்த ஓவியங்களைத் தீட்டுவதில் ஆர்வமுடையவர் கோர்டன். பிறகு, மர வேலைப்பாடு களிலும் ஈடுபட்டார். சிறு சிறு மரத்துண்டுகளைச் சிற்பமாக்கக் கற்றுக்கொண்டார். சரி, ஆப்பிரிக்கக் காடுகளைச் செதுக்க அனுபவம் எப்படிக் கிடைத்தது? ``10 வயது வரை ஆப்பிரிக்காவில் வளர்ந்த அனுபவமே எனக்குப் போதுமானது’’ என்கிறார் பெருமையுடன்.

கிராஃபிக் டிசைன், ஓவியம், போட்டோகிராபி, டிஜிட்டல் இமேஜிங் எனப் பல்வேறு துறைகளில் சகலகலா வல்லவராகத் திகழும் கோர்டன், மரத்தில் காடுகளையும், காட்டுக்குள் விலங்குகளையும் பறவைகளையும் உருவாக்கி, மக்களை வியக்கவைப்பதையே பெருமையாக நினைக்கிறார்.