இயற்கையாகவும்... அதன் அழகாகவும், காலமாகவும்... அதன் சூழலாகவும் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது இறைத்தன்மை. நாம்தான் அதை உணர்வதில்லை. இந்தச் சூட்சுமத்தை மிகத் துல்லியமாக உணர்ந்துகொள்ளும் வெகு சிலர், ஏதோ ஒரு வகையில் அதில் லயித்துவிடுகிறார்கள். அந்த இறைத்தன்மையே அவர்களிடமிருந்து கலையாக, கற்பனையாக, காவியமாக வெளிப்பட்டு நம் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடுகிறது. இறைத்தன்மை வாய்ந்த அப்படியான வெகு சிலரில் ஓவியர் சிவாஸும் ஒருவர். இயற்பெயர் எம்.சிவசுப்பிரமணியன்.

கணபதியாக, கலைமகளாக, சிவ குடும்பமாக, திருவேங்கடவனாக, இன்னும் பல தெய்வங்களாக நம்மில் பலரது வீட்டுப் பூஜையறையை அலங்கரிக்கும் தெய்வப் படங்கள், காலண்டர் ஓவியங்கள் முதலானவற்றைப் படைத்தளித்த கொண்டையராஜு, முருகுக்கனி, ராமலிங்கம் போன்ற ஓவிய பிரம்மாக்களின் வரிசையில் இவருக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

``எப்படித் தொடங்கியது இந்த ஓவியப் பணி?’’ - ஒற்றைக் கேள்வியில் நாம் தொடங்க, மீண்டும் வேறொரு கேள்வியைக் கேட்க அவசியமின்றி, தமது கலைப் பணி குறித்து வெகு சுவாரஸ்யமாக விவரித்தார் ஓவியர் சிவசுப்பிரமணியன்.

‘‘என் பூர்வீகம் ஸ்ரீவில்லிப்புத்தூர்தான். ஓவியக் கலையில் எனக்கென்று தனியே குருநாதரை வரித்துக்கொள்ள அவசியம் வாய்க்கவில்லை. காரணம், என் முன்னோர் கலைப்பணி சார்ந்தவர்கள். சிற்பப் பணிகளில் சிறந்தவர்கள். சின்னமனூர், கம்பம், சோலையாறு டேம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும் பாலான கோயில்களில் என் தாய்வழிப் பாட்டனார் செய்தளித்த சுதைச் சிற்பங்களே அதிகம். `சிற்பிகளுக்கு ஓவிய வாரிசு எப்படி?’ என்று கேள்வி எழலாம். ஒரு சிற்பத்தை உருவாக்கும் முன்னர், முதல் படிநிலையாக அந்தச் சிற்பத்தை ஓவியமாக வரைவார்கள். சிறு வயதிலேயே அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்த எனக்குள் தானாகவே புகுந்துகொண்டது ஓவியத் திறமை. அப்படி கவனிக்க ஆரம்பித்தபோது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன்’’ எனக் கூறிச் சிரித்தவர், சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

‘‘முதல் ஓவியம் பிள்ளையார்தான். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஓவியங்களுக்கும் மேல் வரைந்தாகிவிட்டது. ஓவியங்கள் தீட்டுவதில் இரண்டு வாய்ப்புகள் உண்டு. நேரில் பார்த்து வரைவது ஒரு வகை. சம்பவங்களை, உருவங்களை மனதில் ஏற்றி வரைவது மற்றொரு வகை. நான் இரண்டாவது வகை. எனக்கு அது தியானம் போன்றது. வரைய ஆரம்பித்துவிட்டால், அது நிறைவுபெறும் வரை வெளியுலகம் மறைந்துபோகும்’’ என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டவர், தனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பான, சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்தும் பேசினார்.

‘‘தியானம் என்று சொன்னேன் அல்லவா... தெய்வ ஓவியங்கள் ஒவ்வொன்றையும் அப்படியே தீட்டுகிறேன். ஒருமுறை காலண்டர் பணிக்காக கீதோபதேசக் காட்சியை வரைய நேர்ந்தது. குருக்ஷேத்திரப் பின்னணியில் பார்த்தனையும் பார்த்தசாரதியையும் லயித்து வரைந்தபோது நானும் குருக்ஷேத்திரக் களத்தில் புகுந்து விஸ்வரூபத்தை தரிசித்தேன் என்றே சொல்லலாம். கீதைக் கண்ணன் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டான்.

அதேபோல், சமீபத்தில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை யொட்டி, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரின் ஓவியத்தை வரைந்தளித்தது நான் செய்த பாக்கியம்!

நான் சிலிர்த்த இன்னொரு சம்பவம் உண்டு. ஒருமுறை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்டேன். கணபதி ஸ்தபதி ஐயாவும் கலந்துகொண்டிருந்தார்கள். அவர் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த காட்சியை ஸ்பாட் ஸ்கெட்ச் செய்து அவரிடம் கொடுத்தேன். ஆச்சர்யப்பட்டார். ஓவியத்தை வெகுவாக ரசித்தவர், நூறு ரூபாய் தந்தார். எனக்கான மிகப்பெரிய விருது அது’’ என்று பூரிப்புடன் சொல்பவர், பத்திரிகைகளுக்குப் பிரத்யேகமாக ஓவியம் வரைந்ததில்லையாம். எனினும், இவருடைய ஓவியங்கள் பல்வேறு இதழ்களில் பயன்படுத்தப்படுவதைப் பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஓவியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ள ஓவியர் சிவாஸ், இப்போதும் அதன் கெளரவத் தலைவராக இருந்துவருகிறார். 2006-2007-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக் கலை பண்பாட்டுத் துறை இவரைப் பாராட்டி ‘கலை நன்மணி’ விருது வழங்கி கெளரவித்துள்ளது. இப்படியான தனது கலைப் பயணத்தில் சாதனையாக இவர் குறிப்பிடுவது, 30 வருடங்களுக்கு முன்னர் வைணவ திவ்ய தேசக் கோயில்களின் ஓவியங்களைப் புதுப்பித்ததை. பெரும்பாலும் தஞ்சாவூர் பாணியிலான அந்த ஓவியங்களைப் புதிப்பித்தது சவாலாகவும் சாதனையாகவும் இருந்தது என்கிறார் ஓவியர் சிவசுப்பிரமணியன்.

சமீபத்தில் தென்னக ரயில்வே சார்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆயில் பெயின்ட்டில் இவர் வரைந்தளித்த ‘ஜல்லிக்கட்டு’ ஓவியம், மதுரை ரயில்நிலையத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டும் அன்பர்களின் வாழ்த்துகள்தான் எனக்கான பெரிய அங்கீகாரம் என்று சிலாகித்துக் கூறும் ஓவியர் சிவசுப்பிரமணியன், நிறைவாக ஒன்றைக் குறிப்பிட்டார்... ‘‘இதுவெல்லாம் போதாது. கலைஞனுக்கு மனநிறைவு என்பதே வந்துவிடக் கூடாது. இன்னும் இன்னும் எனது கற்றலும் பயணமும் தொடர வேண்டும். இதற்காகவே இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்...’’

வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்; பயணம் தொடரும். ஓவியரின் கைவண்ணத்தில் இன்னும் பல படைப்புகள் பரிணமிக்கும்!

நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் சிவாஸின் ஓவியங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்