சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வீரர்கள், தமிழ் நாட்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத் தடகளச் சாம்பியன்ஷிப்பில் கவனம் ஈர்த்த லட்சுமணன், எமெர்ஜிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ‘தமிழ்நாட்டின் நெய்மார்’ எனப் பெயரெடுத்த நந்தகுமார் என இந்த ஆண்டு ஜொலித்த இளம் வீரர்களைப் பற்றிய ஓர் அலசல்.

அஷ்வினுக்கு மாற்று யார்?

ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர். கிரிக்கெட்டில் அவர் முன்னேறியது படிப்படியாக அல்ல, ஒரேயடியாக! ஐந்து வயதில் தந்தை சுந்தருடன் பயிற்சியில் ஈடுபட்டு, 12 வயதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஐந்தாவது டிவிஷன் போட்டியில் 20 - 30 வயதுடைய வீரர்களுக்கு எதிராக விளையாடி, 16 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஃபைனலில் பங்கேற்றுவிட்டார்.

கடந்த டி.என்.பி.எல் தொடரில் பெளலிங்கில் மட்டும் கவனம் ஈர்த்தவர், இந்த சீசனில் அடித்தது 459 ரன்கள். கூடவே, `அதிவேகமாக அரைசதம் அடித்தவர்' (15 பந்து), `முதல் சதம் அடித்தவர்' என்ற பெருமைகளும் பெற்றவர். பெளலிங்கிலும் சோடை போகவில்லை. 15 விக்கெட்டுகள். நான்கு முறை `ஆட்ட நாயகன் விருது.’ இடதுகை பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தர், ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராபோல விளையாட நினைத்து, பிறகு யுவராஜ் சிங் பாணியை ஃபாலோ செய்யத் தொடங்கிவிட்டார். அண்டர் - 19 உலகக்கோப்பையில் விளையாடி முடித்ததுமே தமிழக ரஞ்சி டிராபி அணியில் இடம் கிடைத்தது. பேட்டிங்கில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும், ‘பையனுக்கு ஆஃப் ஸ்பின் நன்றாக வரும். இக்கட்டான நேரத்தில் டைட்டா பெளலிங் போட்டு பேட்ஸ்மேனைத் திணறடிப்பார்; பார்ட்னர்ஷிப் பிரேக் பண்ணுவார்’ - என்பது பயிற்சியாளர்கள் வாஷிங்டன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. தியோதர் டிராபியில் தமிழ்நாடு வெல்வதற்கு, வாஷிங்டன் சுந்தரின் பெளலிங்கும் ஒரு காரணம்.

ஐ.பி.எல் சமயத்தில் அஷ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. `அவருக்கு மாற்று யார்?' என்ற கேள்வி எழுந்தபோது வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், இருவரும் ட்ரயல்ஸுக்கு அழைக்கப்பட்டனர். நெட் பிராக்டீஸில் ஸ்டீவ் ஸ்மித்தை bowled செய்தார் வாஷிங்டன். தோனி, பென் ஸ்டோக்ஸ் இருவரையும் பெரிய ஷாட் அடிக்க முடியாதபடி மடக்கினார். ரசூலுக்குப் பதிலாக வாஷிங்டன் பெயரை டிக் செய்து வைத்தது புனே நிர்வாகம். ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக புதிய பந்தில் நன்றாக வீசியவர், டேவிட் வார்னர், ஷிகர் தவான் போன்ற இடதுகை பேட்ஸ்மேன் களுக்கு நெருக்கடி கொடுத்தார். மும்பைக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி, புனே இறுதிப்போட்டிக்குச் செல்ல காரணமாக இருந்தார். ஃபைனலிலும் டீசன்ட் பெளலிங். ஐ.பி.எல் தொடரில் கிடைத்த வெளிச்சம் டி.என்.பி.எல் தொடரில் அவர்மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஃபைனலில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததைத் தவிர்த்து, இந்த சீசன் முழுவதும் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் கலக்கினார்.

டி.என்.பி.எல் தொடரில் அவர் விளையாடிய தூத்துக்குடி அணியின் ஆலோசகர் மான்ட்டி தேசாய் வீரர்களிடம், ‘உங்கள் எண்ணங்களை ஒரே வார்த்தையில் வெளிப்படுத்துங்கள்’ எனக் கேட்டதும் வாஷிங்டன் சுந்தர் சொன்ன வார்த்தை ‘Professional!’. `ஏன்?' என விளக்கம் கேட்டபோது, ‘Professional ஆக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், கிரிக்கெட்தான் பணம், புகழ், மரியாதை எல்லாவற்றையும் கொடுத்தது. கிரிக்கெட்டை மதிக்க வேண்டியது அவசியம், அந்த மதிப்பு Professional ஆக இருந்தால் மட்டுமே சாத்தியம்’ எனப் பதில் சொன்னார். 17 வயதில் இப்படிப் பேசுவதெல்லாம் அபூர்வம்.

டிரிபிளிங் மன்னன்!

கால்பந்து வீரர். இவரின் திறமையைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்நாட்டின் நெய்மார். ‘‘நந்தா மாதிரி ஒரு பிளேயர் டீம்ல இருந்தா போதும். ஆப்பனென்ட்டைக் காலிபண்ணிடலாம்!’’ என்கிறார் பிரபல பயிற்சியாளர் ராபின் சார்லஸ் ராஜா. ராபின் மட்டுமல்ல, ஐ - லீக் தொடரை, சீனியர் டிவிஷன் போட்டிகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்குத் தெரியும் நந்தா எப்பேர்பட்ட பிளேயர் என்று. அதே கதைதான். வியாசர்பாடியில் பிறந்துவிட்டு, கால்பந்து விளையாடாமலா? நந்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

‘‘எங்க அப்பா ஆட்டோ டிரைவர். அவர்தான் என்னை ஃபுட்பால் விளையாடச் சொன்னார். அப்படித்தான் ஆரம்பிச்சேன்’' எனும் நந்தா, பத்தாம் வகுப்பு வரை படித்தது மாநகராட்சிப் பள்ளியில்.

``ராயப்பேட்டைல இருக்கிற வெஸ்லி ஸ்கூல்ல சேர்ந்த பிறகுதான், நுணுக்கமா விளையாடக் கத்துக்கிட்டேன். சாத்தூர்ல நடந்த மாநில அளவிலான போட்டியில் நாங்க ரன்னர்ஸ். தோல்விதான். ஆனா, ரெண்டாவது வந்ததே பெரிய போதை. இந்துஸ்தான் யுனிவர்சிட்டியில பி.காம் படிக்கும்போது இந்துஸ்தான் ஈகிள்ஸ் டீம்ல சேர்ந்தேன். சென்னை லீக்ல சீனியர் டிவிஷன்ல நாங்க சாம்பியன்’’ எனச் சொல்லும்போதே நந்தாவின் கண்களில் பெருமிதம்.

கால்பந்தில் டிரிபிளிங்தான் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து. களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் நந்தா அப்படி ஒரு விருந்து படைப்பார். அட்டாக்கிங் மிட் ஃபீல்டர், கோல் அடிப்பது, விங் சைடிலிருந்து ஒரு மாதிரியாக சொக்கவைக்கும் வகையில் பந்தை ‘கர்வ்’ செய்வது என, எல்லா மேட்ச்சிலும் வித்தை காட்டுவார் நந்தா. எல்லா திறமைகளும் ஒரே இடத்தில் இருக்கும் வீரனைக் கொத்தாமல் இருக்குமா அணிகள்! அலேக்காகக் கொத்தியது சென்னை சிட்டி எஃப்.சி!

ஐ - லீக் தொடரில் சென்னை சிட்டி எஃப்.சி சார்பில், ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான்அணிகளுக்கு எதிராக மெர்சல் காட்டிய நந்தா, அண்டர் -23 இந்திய அணியில் இணைந்ததில் ஆச்சர்யமில்லை. டிரிபிளிங்கில் மன்னனான அவர், ப்ரீமியர் ஃபுட்ஸால் போட்டியில், சென்னை அணிக்காக விளையாடியது எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன். இவ்வளவு திறமையான வீரன் சந்தோஷ் டிராபி தொடரில் ஆடாமல் இருக்க முடியுமா? அங்கேயும் நந்தா மிரட்டினார். இதை
யெல்லாம் கவனித்த தமிழ்நாடு விளையாட்டு நிருபர் சங்கம், இந்த ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருது வழங்கிக் கெளரவித்தது.

தமிழ்நாடு கால்பந்தை உன்னிப்பாகக்கவனித்துவரும் அத்தனை பேரும் `நந்தகுமார், ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் எஃப்.சி கிளப்பில் விளையாட வேண்டும். அதுவும் பிளேயிங் லெவனில் தவறாது இடம்பெற வேண்டும் என்கிறார்கள். ``நந்தா விளையாடினால், அதைப் பார்த்து ஆயிரம் ஆயிரம் வீரர்கள் கால்பந்து விளையாட வருவார்கள். இது அவருக்கு மட்டும் பெயர் வாங்கிக் கொடுக்கும் விஷயம் அல்ல. தமிழ்நாடு கால்பந்துக்கே பெருமை’’ என்கிறார் பயிற்சியாளர் ராபின். நந்தாவின் ஆசையும் அதுவே. அதுமட்டுமல்ல, இந்திய அணியின் ஜெர்ஸி அணிய வேண்டும் என்பதும் அவரது அல்டிமேட் இலக்கு. ‘‘இந்த வருஷம் இல்லைன்னாலும் அடுத்த வருஷம் நிச்சயம் ஐ.எஸ்.எல்-ல விளையாடுவேன்’’ என்கிறார் நந்தா. காத்திருக்கிறோம் தமிழ்நாட்டின் நெய்மாரே!

டிஸ்டன்ஸ் ரன்னிங்... பிறவி குணம்!

அது, முழுக்க முழுக்க விளையாட்டைச் சுவாசிப்பவர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நடந்தது, விளையாட்டில் சாதித்தவர்களைக் கெளரவிக்கும் விழா. சிறந்த அணி, சிறந்த பயிற்சியாளர், சிறந்த எமெர்ஜிங் பிளேயர் வரிசையில் சிறந்த வீரர் விருதைப் பெறுபவரின் வீடியோ ஒளிபரப்பானது. ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் தொடரில் 5,000 மீட்டர் ஓட்டத்தின் கடைசி நிமிடம். 14:54.48 நிமிடத்தில் இலக்கை அடைந்ததும், லட்சுமணன் இரு கைகளையும் உயர்த்தி, தங்கம் வென்றதைக் கொண்டாடினார். மெய் சிலிர்க்கும் மொமன்ட் அது. வீடியோ முடிந்ததும் அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது வாங்கியதைவிட, இந்தக் கைதட்டல் லட்சுமணனுக்குக் கிடைத்த ஆகச் சிறந்த கெளரவம்.
தொலைதூர ஓட்டப்பந்தயத்துக்குப் பெயர்பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், செக்கூரணி கிராமம்தான் லட்சுமணனின் சொந்த ஊர். உடன்பிறந்தது நால்வர். தந்தை விபத்தில் இறந்துவிட, ஐந்து பிள்ளைகளையும் படாதபாடுபட்டு வளர்த்தார் தாய் ஜெயலட்சுமி. டிஸ்டன்ஸ் ரன்னிங், அந்த ஏரியாவில் பலருக்குப் பிறவி குணம். லட்சுமணன் பின்னாளில் சர்வதேச அரங்கில் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடிப்பார் என்பதை அப்போதே கணித்தார், கவிநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திவரும் லோகநாதன். தந்தை இல்லாச் சிறுவனை ஆறு ஆண்டுகள் தன் வீட்டில் வளர்த்தார்; பயிற்சி கொடுத்தார். இந்திய அளவில் 3,000 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டத்தில் ஈடு இணையற்ற வீரனாக லட்சுமணனை உருவாக்கினார்.

19 வயதில் அண்டர் - 20 பிரிவில் நேஷனல் சாம்பியன். 20 வயதில் சீனியர் லெவல் போட்டிகளில் சாம்பியன். இதைப் பார்த்து, உடனே லட்சுமணனை ராணுவம் வேலைக்கு எடுத்தது. அங்கு சேர்ந்த பிறகு, ஒலிம்பியன் சுரேந்தர் சார்ஜ் எடுத்துக்
கொண்டார். தடகள வீரன், ராணுவ வீரனானதும், ஓட்டம் இன்னும் வேகமெடுத்தது.

சீனாவில் நடந்த 2015-ம் ஆண்டு ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப்பில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற லட்சுமணன், தேசிய அளவில் நடந்த எல்லாப் போட்டிகளிலும் 5,000, 10,000 மீட்டர் என இரு பிரிவிலும் வென்றது எல்லாமே தங்கம். கூடவே, மீட் ரெக்கார்டு, நேஷனல் ரெக்கார்டு என தொட்டதெல்லாம் சாதனை. இன்றைய தேதியில் 5,000, 10,000 மீட்டரில் எல்லா சாதனைகளும் லட்சுமணன் பெயரில்தான் இருக்கின்றன. கடந்த ஜூலையில் புவனேஸ்வரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப், அவர் வாழ்வில் ஒரு மைல்கல். 5,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு, `1993-ம் ஆண்டுக்குப் பிறகு வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே இந்தியர்' என்ற பெருமையும் பெற்றார். ``எங்க க்ளப்ல பிராக்டீஸ் பண்றவங்களுக்கு தினமும் பிரெட், பால், ஆப்பிள் தருவோம். அதைப் பார்த்துட்டு, `எல்லாரும் ஓடுறாங்க, நாமளும் ஓடுவோம்’னு நினைச்சு இங்கே வந்தான். லட்சுமணன் நிச்சயம் சாதிப்பான்னு எனக்குத் தெரியும். 17 வயசுல இங்கே வந்தான். இப்ப 27 வயசு. எதிர்பார்த்த மாதிரியே அவன் இந்தியாவின் நம்பர்-1 அத்லெட்டா வந்துட்டான்’’ என்கிறார் லோகநாதன். லட்சுமணன், உலக சாம்பியன்ஷிப்புக்குத் தகுதிபெறும் வரை விக்கிபீடியாவில் எந்தத் தகவலும் இல்லை. இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கீப் அப் ப்ரோ!

எதிர் அணிக்கு சிம்மசொப்பனம்!

குழு விளையாட்டில் கவனம் ஈர்ப்பவரே சிறந்த வீரர். கடந்த ஆண்டு, சீனியர் நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் ஃபைனல் சென்னையில் நடந்தது. கேரளா - ரயில்வே அணிகள் மோதல். ஐந்து செட் வரை நீடித்த அந்தப் போட்டியில் கேரளாவைத் தனி ஒருவனாக ஜெயிக்கவைத்தார் ஜெரோம் வினித்.

செட்டருக்கும் சென்டருக்கும் இடையே பளிச் பளிச்சென அவர் ஷாட்களை இறக்கும்போதெல்லாம் அரங்கம் அதிரும். அரிதினும் அரிதாகவே அவரது Smash மிஸ்ஸாகும். முந்தைய சர்வை நெட்டில் அடித்திருந்தாலும் கவலையில்லை. அடுத்த அடி இடியாக இறங்கும். எதிரணி கிறங்கும். அவர் அடிக்கும் ஷாட்டை எடுக்கும் முனைப்பில், கைகளை நீட்டினால், பந்து கைகளில் பட்டு எங்கோ தெறிக்கும். சர்வ் ஒவ்வொன்றும் கலங்கடிக்கும். ஜெரோம், எதிர் அணியின் சிம்மசொப்பனம்! புதுக்கோட்டை பக்கம், கோட்டைக்காடு கிராமம் ஜெரோம் வினித்துக்குச் சொந்த ஊர். இப்போது இருப்பது கேரளாவில். (தமிழகம் சுதாரிக்கத் தவறிவிட்டது). கொச்சியில் BPCL நிறுவனத்தில் பணி. வாலிபாலில் கேரளாதான் இப்போதைக்கு அவர் அணி. சின்ன வயதில் படிப்பில் மக்கு. ஹாஸ்டலில் சேர்த்தனர். விடுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம் வாலிபால் விளையாடுவதுதான் அவருடைய மிகப்பெரிய சந்தோஷம்.

புதுக்கோட்டையில் பாலிடெக்னிக் படித்தவர், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஜூனியர் நேஷனல்ஸில் கலக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்துப் பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரிக்கு அழைத்து, ஜெரோமை ஆல்-ரவுண்டராக மாற்றினார். ஆனால், எதிர்பாராத ஒரு விபத்து அவர் வாழ்க்கையை மாற்றியது.

‘‘அவ்ளோதானா, லைஃப் முடிஞ்சிருச்சானு நினைச்சேன். ட்ரீட்மென்ட் முடிஞ்சு சென்னைக்கு வந்ததும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பழைய மாதிரி ஜம்ப் வரலை. சர்வ் பண்றதுகூட கஷ்டமா இருந்துச்சு. என் கேம் மொத்தமா மாறிடுச்சு. ஆனா, நான் மனசைத் தளரவிடலை. ஆறு மாசம் தொடர்ந்து பிராக்டீஸ் பண்ணேன். 2014, டிசம்பர் சென்னை எக்மோர்ல மாநில அளவிலான ஒரு போட்டி. அதில் ஜெயிக்கிறது என் கோச் தட்சிணாமூர்த்தி கனவு. நான்தான் டீம் கேப்டன். ரொம்ப உக்கிரமா விளையாடி என் கோச்சோட 17 வருஷக் கனவை நனவாக்கினேன். அந்த மேட்ச்தான் எனக்கான இந்தியன் சீனியர் டீமிலும் இடம் வாங்கித் தந்தது. இவ்வளவு பெரிய காயத்துல இருந்து மீண்டு, திரும்பவும் டீமுக்குள்ள வந்தது இந்திய அளவில் நான் மட்டும்தான். அதுவும், இந்திய சீனியர் டீமுக்கு போகும்போது எனக்கு வயது 22’’ எனச் சொல்லும் ஜெரோம் வினித்துக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

`தமிழ் தலைவாஸ்' நம்பிக்கை நட்சத்திரம்!

இவர், புரோ கபடி தொடரின் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் முதல் புள்ளியை எடுத்தவர்; சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர். தந்தை குமரவேல் மட்டுமல்ல, குடும்பமே கபடிக் குடும்பம்தான். எட்டு வயதில் தைப்பொங்கல் அன்று ஊரில் நடக்கும் கபடிப் போட்டியில் விளையாடத் தொடங்கிய பிரபஞ்சன், இன்று தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ரைட் ரைடர் கேப்டன் அனுப்குமார் சொதப்பும் நேரத்தில் லெஃப்ட் ரைடர் பிரபஞ்சன் பாயின்ட் எடுப்பார்.

‘‘மத்தவங்க மாதிரி, எங்க வீட்டுல காயத்தைப் பார்த்ததும் `விளையாடப் போகாதே'னு சொல்லலை. `சீக்கிரம் காயத்தைக் குணப்படுத்திட்டு கபடி விளையாடு'னு சொன்னாங்க’’ எனச் சொல்லும் பிரபஞ்சன் குரலில், குடும்பம் குறித்த பெருமிதம். பிரபஞ்சன் கபடியில் நுழையக் காரணம், அவரது தந்தையுடன் விளையாடிய சாமியப்பன். இவர் இந்திய அணியில் விளையாடியவர். சேலம் ஏரியாவில் விட்டேத்தியாகக் கபடி விளையாடித் திரியும் விடலைப் பருவத்தினரின் வழிகாட்டி.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) சேர்ந்த பிறகு பிரபஞ்சன் கிராஃப் இறங்கவே இல்லை. மாவட்டம், மாநில அணிகளில் இடம்பெற்றவர், கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் நுழையும் வரை முன்னேறிவிட்டார். இந்திய அணியின் கேம்ப்பில் இருந்தவர் துரதிர்ஷ்ட வசமாக மேட்ச் ஆடவில்லை. கூடிய விரைவில் இந்திய அணியின் ஜெர்ஸியில் பிரபஞ்சனைப் பார்க்கலாம். பொருளாதாரரீதியிலும் சரி, புரொஃபஷனல்ரீதியிலும் சரி... புரோ கபடி தொடர், பிரபஞ்சனுக்கு ஒரு வரப்பிரசாதம். இது அவருக்கு நான்காவது சீசன். யூ மும்பா அணியில் இரண்டு வருடங்கள், தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் ஒரு வருடம், இப்போது தமிழ் தலைவாஸ் அணியில்...

6.2 அடிக்குமேல் உயரம். இது அவரது அட்வான்டேஜ். கைகளும் நீளம் என்பதால், இயல்பாகவே கைநீட்டித் தொடுவது அவரது ப்ளஸ். இரண்டு, மூன்று அடி எடுத்து வைத்தாலே போதும், முழு மைதானத்தையும் கவர் செய்துவிடலாம். கடந்த முறை தேமே என ரெய்டு சென்று, எல்லோரையும் தொட நினைத்தார். இந்த முறை ‘ரன்னிங் ஆன் டச்’, ‘டர்னிங் அண்ட் எஸ்கேப்’ இரண்டிலும் தேறியிருக்கிறார். இதற்குத் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், கேப்டனான சீனியர் பிளேயர் அனுப்குமார் இருவரும்தான் காரணம். கால்கள் நீளம் என்பதால், எதிர் அணியில் ஆறு பேருக்குமேல் இருக்கும் போதெல்லாம் போனஸ் புள்ளி எடுத்துவிடத் துடிப்பார். எல்லா நேரங்களிலும் போனஸ் புள்ளி எடுத்துவிட முடியாது. இதையெல்லாம் கவனித்த தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன், பிரபஞ்சனை ரொம்பவே செதுக்கினார். ‘‘முன்னாடியெல்லாம் ரெய்டு போகும்போது யாரைப் பார்த்தாலும் தொடணும்னு நினைப்பேன். அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டே இருப்பேன். இப்போ ரெய்டு போனா எந்த பிளேயரைக் குறிவைக்கணும், எப்படி அவரை டச் பண்ணணும்கிறது தெரிஞ்சிடுச்சு. ஊர்ல எல்லாரும் நான் கபடி விளையாடுற ஸ்டைலே மாறிடுச்சுனு வாழ்த்தினாங்க’’ என்கிறார் பிரபஞ்சன்.