ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி நகருக்குள் நுழையும் முன்னரே, கோதாவரி ஆற்றில் புதுவெள்ளம் பொங்கி ஓடுவது கண்களைச் சுண்டி இழுத்தது. இன்னும் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால், `இந்தியாவின் தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்’ என்று அழைக்கப்படும், கடியம் (Kadiyam) பகுதிக்குச் சென்றுவிடலாம். நம் நாட்டில் பயன்படுத்தப்படும் 75 சதவிகித அலங்காரச் செடிகள், இங்குள்ள நர்சரிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உங்கள் பகுதியில் உள்ள நர்சரியில், ‘இந்தச் செடியை எங்கிருந்து வாங்கி வருகிறீகள்?’ எனக் கேளுங்கள். நேர்மையான நர்சரிக்காரர் என்றால், `ஆந்திராவில் உள்ள கடியம்’ என்று பதில் சொல்வார். அழகுச்செடிகள் தொடங்கி, ஆள் உயர மா மரங்கள் வரை... தோட்டக்கலைச் செடிகளை விதவிதமாக உற்பத்திசெய்து, நாடு முழுவதும் இங்கிருந்து அனுப்பிவருகிறார்கள். தினந்தோறும் செடிகள் வாங்குவதற்கு ஏராளமான நபர்கள், கடியத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறார்கள். பெரிய நர்சரிகளைக் கணக்கில் எடுத்தாலே, 500-க்கு மேல் இருக்கும். வீட்டுக்கு வீடு குட்டி நர்சரிகளும் உள்ளன. இந்திய அளவில் இவ்வளவு எண்ணிக்கையிலான நர்சரிகள் ஒரே இடத்தில் இருப்பது இங்கு மட்டும்தான்.

சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இங்கிருந்து தோட்டக்கலைச் செடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் நெல் சாகுபடியில் வந்த வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த இந்த விவசாயிகளுக்குக் கடன், கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இருந்துள்ளது. ஆனால், இன்று ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் நர்சரி வைத்திருப்பவர்களின் வீட்டில்கூட இரண்டு கார்கள் சர்வ சாதாரணமாக நிற்கின்றன.

குட்டிக் கிராமமாக இருந்த கடியம், இன்று பெரிய ஊராக வளர்ந்து, இந்தியாவின் முக்கிய முகமாகவே மாறியிருக்கிறது.

அதற்கான ஆரம்பப்புள்ளியை நோக்கிய பயணத்தில், சூப்பர் ஹிட் படத்துக்கு உண்டான கதைபோல அத்தனை விறுவிறுப்பு. கடியம் பகுதியில் முதன்முதலாக நர்சரியைத் தொடங்க, ஆரம்ப விதையைப் போட்டவர், ஒரு மாற்றுத்திறனாளி என்றால், ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அதுவும், சொத்து பாகப்பிரிவினையில் சொந்தச் சகோதரர்களால், ஏமாற்றி அனுப்பப்பட்ட அந்த மாற்றுத்திறனாளிதான், கடியம் பகுதியில் உள்ள நர்சரிகளுக்குக் ‘காட் ஃபாதர்!’

அது, 1952-ம் ஆண்டு. பல்ல வெங்கண்ணா என்ற போலியோ பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளி இளைஞரின் குடும்பத்தில் பாகப்பரிவினை. உடன் பிறந்த சகோதரர்கள், ‘நீ நடக்க முடியாதவன்; உனக்கு எதற்கு விவசாய நிலம்..?’ என்று சொல்லி, ஏக்கர் கணக்கில் தங்களுக்கு எடுத்துக்கொண்டு, அரை ஏக்கர் நிலத்தை மட்டும் வெங்கண்ணாவுக்கு போனால் போகிறது என்று கொடுக்கிறார்கள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தபோதும், சொந்தச் சகோதரர்களே தன்னுடைய உடல் ஊனத்தைக் காரணம் காட்டிப் பேசியது, வெங்கண்ணாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அந்தக் கோபத்தை, வாழ்வில் வெற்றி பெற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற லட்சியமாக மாற்றிக்கொண்டு உழைக்கத் தொடங்குகிறார்.

தனக்குக் கிடைத்த அரை ஏக்கர் நிலத்தில், சிறிய அளவில் நர்சரி தொடங்கி அழகுச் செடிகள், கொய்யா, மா... என விதவிதமான செடிகளை வளர்த்து விற்பனை செய்யத் தொடங்குகிறார். அயராத உழைப்பும், சரியான விலையும், நேர்மையான வியாபாரமும்... வெங்கண்ணாவுக்கு நர்சரித் தொழிலில் நல்ல பெயரை உருவாக்கிக் கொடுக்கிறது. கொஞ்சம், கொஞ்சமாக நிலம் வாங்கி நர்சரியை விரிப்படுத்துகிறார். தான் மட்டும் நர்சரித் தொழிலில் வெற்றி பெற்றால் போதாது என்று, அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளையும் செடிகளை உற்பத்தி செய்யும் நர்சரி தொடங்கும்படி ஊக்குவிக்கிறார். அன்றைக்கு அரை ஏக்கரில் தொடங்கப்பட்ட வெங்கண்ணாவின் நர்சரி இன்று பல நூறு ஏக்கரில் விரிந்துகிடக்கிறது. இந்தக் கதையை அசைபோட்டப்படியே நாம் கடியம் பேருந்து நிலையத்தில் கால் எடுத்துவைத்தோம்.

‘‘சார், செடி வாங்க வந்தீங்களா, வாங்க, வாங்க...’’ என வரவேற்று அழைத்துச் செல்ல, ஹோண்டா ஆக்டிவா தொடங்கி, பிஎம்டபிள்யூ கார்கள் வரைக்கும் வைத்துக்கொண்டு நம்மை, அவர்களின் நர்சரிகளுக்கு அழைத்துச் செல்ல பலர் காத்திருக்கிறார்கள். முதலில், இந்தப் பகுதியில் நர்சரிகள் உருவாகக் காரணமாக இருந்த பல்ல வெங்கண்ணாவின் நர்சரிக்குச் செல்வது எனத் திட்டமிட்டோம். கூகுளில், `பல்ல வெங்கண்ணா ’ என்ற பெயரைத் தட்டினால், முழு முகவரியையும் கொட்டி, எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதையும் வழிகாட்டுகிறது.

செல்லும் வழி எங்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்புப் பலகைபோல, தெலுங்கு, தமிழ், ஆங்கிலத்தில் நர்சரி கார்டன்களின் அறிவிப்புப் பலகைகள் கண்ணில்படுகின்றன. ஓர் அடி நிலத்தைக்கூட வீணாக்காமல், அந்த இடத்தில் செடிகளை வளர்த்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

வெங்கண்ணாவின் நர்சரி கார்டன், ஒரு கார்ப்பரேட் அலுவலகம்போல சீராக, நேர்த்தி யாக இருந்தது. நர்சரியில் இருந்த செடிகள், போருக்குச் செல்லும் ராணுவ வீரர்கள்போல அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. நர்சரிக்குள் நுழைந்தவுடன், மினரல் வாட்டரும், சூடான டீயும் கொடுத்துவிட்டுத்தான், `எதற்கு வந்தீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அருகில் நின்றிருந்த இளைஞரிடம், நமக்குத் தெரிந்த சுந்தரத் தெலுங்கில் சுமராகப் பேச, ‘‘சார், தமிழ்லயே பேசுங்க... எனக்குத் தமிழ் தெரியும், என்னோட பேரு வெங்கடேஷ்’’ எனச் செம்மொழியாம் தமிழில் சரளமாகப் பேசி அசத்தினார் அந்த இளைஞர்.

‘`அட எப்படீங்க... இந்த அளவுக்குத் தமிழ் தெளிவா பேசுறீங்களே...’’ என நாம் சொல்லி முடிக்கும்போதே, ‘‘சார், நான் சென்னையில இருக்குற காலேஜ்லதான் பி.எஸ்சி பயோ-டெக்னாலஜி படிச்சேன். எங்க தாத்தாதான், பல்ல வெங்கண்ணா. இப்போ அவர் நர்சரிக்கு வர்ற நேரம்தான். அதுக்குள்ள நாம் நர்சரியை சுற்றிப் பார்க்கலாம்’’ என அழைத்துச் சென்றார். யானை, மான், சிங்கம்... போன்ற உருவங்களில் அழகுச் செடிகளை வளர்த்து வைத்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஆட்கள், செடிகள் பராமரிப்புப் பணியை செய்துகொண்டிருந்தனர்.

‘‘எங்களைப் பொறுத்தவரைச் செடிகளும், குழந்தைகளும் ஒன்று. எனவேதான், கவனமாக நர்சரியில் உள்ள செடிகளைப் பராமரித்து வளர்க்கிறோம். நர்சரியில் உள்ள செடிகளைச் சரியாக வளர்த்தால்தான், அதை வாங்கிச் செல்பவர்கள் வளர்க்கும்போது, நன்றாக வேர்பிடித்து வளரும்.

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள்... இந்த நர்சரியைப் பார்வையிட வருகிறார்கள். வெறும் செடிகள் வாங்குவதற்கு மட்டும் வருவதில்லை. ஒரு மாற்றுத்திறனாளியின் சாதனையை நேரில் பார்த்துச் செல்லத்தான் வருகிறார்கள். இப்படி வந்தவர்களில் பலர் தங்கள் பகுதியில் நர்சரி தொடங்கி, சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள்...’’ என்று சொன்னபடியே, கொய்யாச் செடிகள் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றவர், செடியி
லேயே காய்த்திருந்த கொய்யாப் பழத்தைப் பறித்து, நமக்குச் சாப்பிடக் கொடுத்தார்.

‘‘உலகில் அதிகச் சத்துக்கள் உள்ள பழங்களில் கொய்யாவுக்குத் தனி இடம் உண்டு. வீட்டுத் தோட்டத்தில் நட்டுவைத்தால்கூடப் போதும்... சத்தான பழங்களைக் கொடுக்கும். ஆனால், இதை மறந்துவிட்டு, பல நூறு ரூபாய்க்கு ரசாயனத்தில் விளைவித்த ஆப்பிள் பழத்தை வாங்கிச் சாப்பிடுகிறோம்...’’ எனச் சிரித்துக் கொண்டே கசப்பான உண்மையைச் சொன்னவர், மாஞ்செடிகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று தொடர்ந்தார்.

‘‘இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும், இங்கிருந்து செடிகள் செல்கின்றன. இந்தப் பகுதியில் தரமானச் செடிகளை, சரியான விலைக்கு விற்பனை செய்கிறோம். இதனால்தான், தேனீக்கள் மலரை நாடி வருவதுபோல, கடியம் பகுதிக்கு வந்து, செடிகளை வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக, எங்கள் நர்சரியில் உள்ள தரமான பங்கனப்பள்ளி மாஞ்செடியை 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். உங்கள் ஊரில் உள்ள நர்சரியில், `பங்கனப்பள்ளி மாஞ்செடி என்ன விலை’ என்று விசாரித்துப் பார்த்தாலே, எவ்வளவு லாபம் அந்த நர்சரி நடத்துபவருக்குக் கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும்’’ எனச் செடிகளின் விலை ரகசியத்தைச் சொன்னவர், ‘‘ இப்போது தாத்தா வந்திருப்பார், இன்னும் பல தகவல்களை அவர் சொல்வார்...’’ என்ற வெங்கடேஷ் நம்மை, நிழல் குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.

பல்ல வெங்கண்ணாவுக்கு 80 வயது இருக்கும். கையில் ஊன்றுகோலுடன் எல்லோருடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கே உரிய தெலுங்கில், ராகம் இழுத்து பேசத் தொடங்கினார்...

‘‘என்னோட வாழ்க்கை ஊர் அறிந்த கதை. எனக்குப் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கல்வி அறிவும் கிடையாது. ஆரம்பத்தில் வருமானத்துக்காக இந்த நர்சரித் தொழிலைத் தொடங்கி நடத்தியிருந்தாலும், காலப்போக்கில் நான் செய்துவரும் செயலின் மகத்துவம் தெரியத் தொடங்கியது. செடிகளும், கொடிகளும், மரங்களும்தான் இந்தப் பூமிக்கு முக்கியம் என உணர்ந்துகொண்டேன். அதனால், இந்த நர்சரித் தொழில் வேகமாக வளர வேண்டும் என விரும்பினேன். எங்கள் உறவினர்கள், நண்பர்கள்... என எல்லோருக்கும், நர்சரித் தொழிலைத் தொடங்கி நடத்தும்படி உற்சாகம் கொடுத்து, வழிகாட்டினேன். ‘வெங்கண்ணா பலரையும் வளர்த்துவிடுகிறான். இதனால், தொழில் போட்டி ஏற்பட்டு, நர்சரி தொழிலிலிருந்து காணாமல் போய்விடுவான்’ என்றுகூடப் பேசினார்கள். ஆனால், நடந்தது வேறு. இந்தப் பகுதியில் நர்சரித் தொழில் விரிவு பெற, விரிவுபெற எங்களின் வருமானமும் பெருகத்தான் செய்தது. `நாம் நல்ல வழியில் செல்லும்போது, நமக்கான இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது’ என்ற வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.

ஏராளமான விருதுகள், பட்டங்கள் கிடைத்தாலும், எங்கள் நர்சரியில் உருவாக்கப் பட்ட செடிகள், வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன என்று பயன் பெற்றவர்கள் சொல்லும், திருப்திகரமான வார்த்தையைத்தான் இன்றளவும் பெரிய விருதாக நினைக்கிறேன்’’ என்று சொன்னவர், கண்களை மூடி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். ‘‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட விருட்ச ஆயுர்வேதம் நூலில் மரங்களின் மகத்துவம் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது,

‘பத்துக் கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம்

பத்துக் குளங்கள் ஓர் ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு மகனுக்குச் சமம்

பத்து மகன்கள் ஒரு மரத்துக்குச் சமம்.’ எனவே, நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் மரம் வளர்ப்போம்’’ என்று சொல்லிக் கைகூப்புகிறார் பல்ல வெங்கண்ணா.

அரசு அதிகாரிகளுக்கும் கைகொடுக்கும் கடியம்!

கடியத்துக்கு வருபவர்களை, தரமான நர்சரிகளுக்கு அழைத்துச் சென்று, செடிகளை வாங்கிக் கொடுக்கும் வழிகாட்டிப் பணியைச் சிலர் செய்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஸ்ரீனிவாசன்.

‘‘தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா... எனப் பல பகுதிகளிலிருந்தும் செடிகள் வாங்குவதற்கு ஆட்கள் வருவார்கள். குறைந்தபட்சம் மூன்று நாள்கள் தங்கியிருந்து, பல நர்சரிகளைப் பார்வையிட்ட பிறகு, தங்களுக்கு ஏற்ற விலையில் கிடைக்கும் நர்சரியில் செடிகளை வாங்கிச் செல்வார்கள். ஏக்கர் கணக்கில் மா, கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகள்கூட இங்கு வந்து, குறைந்த விலைக்குச் செடிகளை வாங்கிச் செல்கிறார்கள். சில நேரங்களில் பல மாநிலங்களிருந்து தோட்டக்
கலைத்துறை அதிகாரிகளும் செடிகள் வாங்குவதற்கு வருவார்கள். முதலமைச்சர், கட்சித் தலைவர்கள் பிறந்தநாளின் போது லட்சக்கணக்கில் செடிகளை நடவு செய்வோம் என அறிவித்து விடுவார்கள். ஆனால், அவ்வளவு செடிகள், அவர்களின் மாநிலங்களில் கிடைக்காது. ஆகையால், சத்தம் இல்லாமல், இங்கு வந்து லட்சக்கணக்கில் செடிகளை வாங்கிச் சென்று, அவர்களே செடிகளை உற்பத்தி செய்து நடவு செய்ததாகச் சொல்லி பாராட்டு வாங்கும் கூத்துகளையும் பார்த்திருக்கிறோம்...’’ சிரித்துக்கொண்டே சொல்கிறார் ஸ்ரீனிவாசன்.

நர்சரிக்காரர்களின் புண்ணிய பூமி!

நாம் கடியம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு தேநீர்க் கடையில் இரண்டு பேர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சென்று பேச்சுக் கொடுத்தோம். ‘‘அட, நம்ம தமிழ்நாட்டுல இருந்து, கடியத்தைத் தேடி வந்ததுக்கே உங்களுக்குப் பாராட்டுச் சொல்லணும் சார்...’’ என்று சொல்லிவிட்டு, சூடான டீயை உறிஞ்சிக் குடித்தபடி பேசத் தொடங்கினார். ‘‘என்னோட பெயர் ஜோசப் பாஸ்டின். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் நர்சரி வைத்திருக்கிறேன். எங்களைப் போன்ற நர்சரி நடத்துபவர்களுக்கு, ‘கடியம்’ புண்ணிய பூமி. ஆண்டுக்கு ஒரு முறை, இங்கு வந்து, பல நர்சரிகளைப் பார்வையிட்டு, லாரி நிறையச் செடிகளை வாங்கிச் செல்வோம். ஆரம்பத்தில் கேரளாவிலிருந்து செடிகள் வாங்கி வந்து விற்பனை செய்தேன். அந்தச் செடிகளின் தரம் அவ்வளவு தரமாக இல்லை. தமிழ்நாட்டின் சூழ்நிலைக்குத் தக்கப்படியும் வளரவில்லை. அடுத்து, நம் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நர்சரிகளில் செடிகள் வாங்கி விற்பனை செய்தோம். ஆனால், அந்தச் செடிகளின் தரமும் விலையும் ஒத்துவரவில்லை. ஒருகட்டத்தில் நர்சரித் தொழில் வேண்டாம் என முடிவு செய்தபோதுதான், கடியம் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே, ரயில் ஏறி வந்து பார்த்தேன். எனக்குத் தெலுங்கு அவ்வளவாகத் தெரியாதே என்று பயந்தேன். ஆனால், பல நர்சரிகளில் தமிழ் பேசுகிறார்கள். இங்கு குறைந்த விலையில், தரமான செடிகளும் கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செடிகள் தமிழ்நாட்டின் சூழ்நிலைக்குத் ஏற்றதாக உள்ளன. இதனால், நான் நடத்தும் நர்சரிக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. நான்கூடக் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இங்கு வருகிறேன். இதோ, பக்கத்தில் நிற்கிறாரே, ‘அரியலூர்’ முருகேசன்... இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்குச் செடிகளை வாங்கிக் சென்றுதான் நர்சரி நடத்திவருகிறார்...’’ என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார் ஜோசப் பாஸ்டீன்.