2011-ம் ஆண்டில் `ஸ்வப்ன சஞ்சாரி' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனு இமானுவேல். மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். அவருடன் ஒரு ஜாலி சாட்!

``சினிமா என்ட்ரி?’’

``அப்பா தயாரிப்பாளர். ஸோ, `ஸ்வப்ன சஞ்சாரி' படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆனேன். பிறகு அமெரிக்காவுல படிப்பு. சினிமால நடிக்கணும்ங்கிறது கனவா இருந்தது. அப்பாகிட்ட சொன்னேன், தட்டிக்கொடுத்து என்கரேஜ் பண்ணினார். சினிமால நடிக்கிறது பெரிய ரிஸ்க், அதுல எப்படி நுழையலாம்னு ஏகப்பட்ட வழிகளைக் கண்டுபிடிச்சுவெச்சிருந்தேன். விதியைப் பாருங்க... எல்லாத்தையும் தானாவே நடத்திக் கொடுத்திடுச்சு!''

``இந்தியா - அமெரிக்கா. எந்த லைஃப் ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிருக்கு?"

``ரெண்டுமே பிடிச்சிருக்கு. ஆனா, இந்தியா எப்பவும் ஒரு படி மேலேதான். நல்ல சமையல், அதைப் பக்குவமா உபசரிக்கிற குணம்... எல்லாம் நம்ம ஊர்லதான் ஸ்பெஷலா இருக்கும். இந்தியால நான் நடிக்கிறேன்; சம்பாதிக்கிறேன். அமெரிக்கால ஃபுல் டைம் ரெஸ்ட் மட்டும்தான். இந்தியால எனக்கு ஹைதராபாத் பிடிக்கும். காரணம் கேட்காதீங்க... அழகா இருக்கிற எல்லா ஊரும் எனக்குப் பிடிக்குமே!'’

``குடும்பம்?’’

``அப்பா இதுவரை ரெண்டு மலையாளப் படங்களைத் தயாரிச்சவர். இப்போ பிசினஸ் பண்றார். அம்மா தனியார் மருத்துவமனையில் ஈ.சி.ஜி டெக்னீஷியன். ஒரே ஒரு தம்பி. காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கான்.''

``டிரீம் ரோல்?’’

``படம் முடிஞ்சு தியேட்டரை விட்டுப் போனாலும், என் கேரக்டர் ஆடியன்ஸ் மனசுல ரிப்பீட் ஆகிட்டே இருக்கணும். இப்படியெல்லாம் கூட இருப்பாங்களானு அந்த கேரக்டர் ஆச்சர்யம் தரணும். அந்த கேரக்டருக்காக ஐ ஆம் வெயிட்டிங்!’’

``துப்பறிவாளன்?’’

``இந்தப் படத்துல நான் பிக்பாக்கெட் அடிக்கிற பொண்ணா நடிச்சிருக்கேன். இந்த மாதிரி ஒரு கேரக்டரை தமிழ்சினிமால பார்த்திருப்பீங்களானு தெரியலை. படத்துல ஆண்ட்ரியாவோட சேர்ந்து நடிச்சிருக்கேன். முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர் கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி!''

``எந்த மொழிப் படங்கள் அதிகமா பிடிக்கும்?’’

``சினிமாவுக்கும் நடிப்புக்கும் மொழி முக்கியமில்லை. எந்த மொழி எனக்கு நல்ல கதையைக் கொடுக்குதோ, அந்தப் படத்துல நான் நிச்சயம் நடிப்பேன். அதுதான் சரியான சாய்ஸும்கூட!’’

``ஷூட்டிங் இல்லாத ஒருநாள்?’’

``ஷாப்பிங், சாப்பாடு, தூக்கம்!’’

``நடிகை ஆகலைனா..?’’

``உளவியல் நிபுணர் ஆகியிருப்பேன். நான் அதைத்தான் படிச்சேன்.''

`` `என்.டி.ஆர் 29' அவரோட வாழ்க்கை வரலாறா?’’

``அதே டவுட்தான் எனக்கும். அந்தப் படத்துல இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கலை. ஷூட்டிங் முடிஞ்சதும் சொல்றேன்!’’