வணக்கம்.

இந்த ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் பேராதரவுடன் `விகடன் தீபாவளி மலர்’ மலர்ந்திருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் புதுமை, புரட்டப் புரட்ட சுவாரஸ்யம், அரிய தகவல்கள்... என புதுமை படைப்பது விகடன் தீபாவளி மலரின் தனித்தன்மை.

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், ஆன்மிகம், சுற்றுலா, சினிமா, பாரம்பர்யம், பண்டிகைக் கால சிறப்புப் பலகாரங்கள்... எனப் பல சிறப்பம்சங்களுடன், வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விருந்து படைக்க வருகிறது இந்த தீபாவளி மலர்.

ஓவியர் சிவாஸின் அரிய ஓவியங்கள் தொடங்கி முருகக் கடவுளின் மயில் வாகனம், பூம்புகாரின் காவல் தெய்வம், தாண்டிக்குடி முருகன் கோயிலின் சிறப்பு, முக்கியமான மூன்று விநாயகர்களின் திருத்தலங்கள் எனப் பரவசப்படவும் பாதுகாக்கவும் ஆன்மிகப் பக்கங்கள்; எழுத்தாளர்கள் வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்நதி, சாம்ராஜ் ஆகியோரின் தேர்ந்த சிறுகதைகள்; யுகபாரதி, மகுடேசுவரன், மனுஷ்யபுத்திரன் இசை, சுகிர்தராணி, தேன்மொழிதாஸ் ஆகியோரின் முத்தான கவிதைகள்; பண்டைத் தமிழர்கள் உணவாகப் பயன்படுத்திய காய்கறிகள் குறித்த முகில் எழுதிய விரிவான கட்டுரை; தோழர் ஆர்.நல்லகண்ணு, எழுத்தாளர்கள், ஜோ டி குரூஸ், யூமா வாசுகி போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், பிரபல புகைப்படக்கலைஞர் கார்த்திக் னிவாசனின் பேட்டி; நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பம் குறித்த அவரின் நெகிழ்ச்சிப் பகிர்வு; `நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்’ எம்.ஜி.ஆர் குறித்த ஆர்.முத்துக்குமாரின் அலசல் கட்டுரை; கூர்க், அதிரப்பள்ளி என அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் பயணக் கட்டுரைகள்; நம் பாரம்பர்யத்தின் ஓர் அடையாளமாகத் திகழும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கின் பெருமை உணர்த்தும் கட்டுரை; அண்டை மாநில பிரபல ஸ்பெஷல் ரெசிப்பிகளின் செய்முறைகள், திரைத்துறை பிரபலங்கள் குறித்த பதிவுகள்... என ஏராளமான அம்சங்கள் மலர்ந்திருக்கின்றன.

விகடன் வாசகர்களுக்கு உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்