கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கேமராவுக்குள் சிறைப்பட விரும்பாத செலிபிரிட்டிகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல செலிபிரிட்டிகளின் மோஸ்ட் வான்ட்டட் கேமராமேன். இவர் கடந்துவந்த பாதையையும் அந்தப் பாதையில் இவர் எடுத்த அரிய படங்களின் தொகுப்பும் இங்கே...

``கார்த்திக் ஸ்ரீனிவாசன் எப்படி செலிபிரிட்டி போட்டோகிராபரானார்..?’’

``அது ஒரு பெரிய ட்ராவல் ப்ரதர். தேனிக்குப் பக்கத்துல இருக்கும் கம்பம்தான் என் சொந்த ஊர். நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தப்போ, எங்க அப்பா வாங்குற சில சினிமா புத்தகங்களைப் படிப்பேன். அந்தப் புத்தகங்கள்ல இருந்த புகைப்படங்கள் என்னை ஈர்த்துச்சு. நடிகர்கள் எப்படி போஸ் கொடுக்குறாங்க, போட்டோ எப்படி எடுத்திருக்காங்கன்னே யோசிச்சுக்கிட்டு இருப்பேன். சரி நாமும் போட்டோ எடுக்கலாமேனு ஒரு நாள் தோணுச்சு. அது டிஜிட்டல் கேமரா வராத காலம்; ஃபிலிம் கேமராதான். அதுல போட்டோ எடுத்து, டெவலப் பண்ணிப் பார்க்கும்போது பல நேரங்கள்ல அதுல எதுவுமே இருக்காது. இப்படிப் பல சிக்கல்களுக்கு நடுவுலதான் நான் போட்டோகிராபி கத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல எல்லா போட்டோகிராபர்களையும்போல மலை, பூ, செடினு இயற்கையில் இருந்துதான் நானும் ஆரம்பிச்சேன். நாளாக ஆகத்தான் எனக்கு அந்த ஸ்டைல் போட்டோகிராபி எனக்கானது இல்லைனு தெரியவந்துச்சு. செலிபிரிட்டிகளை போட்டோ எடுக்கணும், லைட்டிங் செட் பண்ணி போட்டோ எடுக்கணும், பேப்பர்ல வர்ற விளம்பரங்கள் மாதிரி போட்டோ எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைக்கிற எதையுமே எங்க ஊருல இருந்து செய்ய முடியாது. அதனால எங்க மாமாவோட உதவியால சென்னைக்கு வந்து சில சினிமாப் பிரபலங்கள்கிட்ட அறிமுகமானேன். அவங்ககூட இருக்கும்போது நிறைய ப்ரீமியர் ஷோஸ் பார்ப்பேன். பல சினிமாப் பிரபலங்களை நேரில் பார்க்க முடிஞ்சுது. அப்போ, போட்டோகிராபி ப்ளஸ் சினிமாடோகிராபியும் பண்ணணும்னு ஆசை வந்தது. அந்த ஆசையை விடாம கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு `ஊமை விழிகள்’ படத்தோட ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார்கிட்ட கொஞ்ச நாள் வேலை பார்த்து, சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

ஒளிப்பதிவாளராக இது மட்டும் போதாதுனு டி.எஃப்.டெக் படிக்கப் போனேன். அப்போ டி.எஃப்.டெக் படிக்கத் தமிழ்நாட்டுல ஒரு காலேஜ்தான் இருந்துச்சு. அங்கேயும் 20 சீட்டுதான். எனக்கு சீட் கிடைக்கலை. அந்த காலேஜ் பிரின்ஸிபால் என்னைப் பார்த்துட்டு, ‘பார்க்கிறதுக்கு நடிகன் மாதிரி, நல்லா ஆறு அடிக்கு இருக்கியே... நீ ஏன் ஆக்டிங் கோர்ஸ் பண்ணக் கூடாது’னு கேட்டார். ‘இல்லை சார். எனக்கு ஒளிப்பதிவு பண்றதுலதான் ஆர்வம்’னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அவர் சொன்னது என் மனசுலேயே இருந்துச்சு. அதனால நடிக்க வேணாம், மாடலிங் பண்ணலாம்னு நினைச்சேன்.

ஃபேஷன் கோரியோகிராபர் ஷோபா வித்யாகிட்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் என்னை அறிமுகப்படுத்தினார். அவங்களும் என்னைச் சேர்த்துக்கிட்டாங்க. ஆனா, என்னால அந்தக் குழுவோட அவ்வளவு சீக்கிரம் சேர முடியலை. அந்த டீம்ல இருந்தவங்க சென்னைக்காரர்களாக இருந்தாலும், யாருக்கும் தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில்தான் பேசுவாங்க. நான் கிராமத்தில் இருந்து வந்ததனால எனக்கு அவங்களை மாதிரி ஆங்கிலம் பேச வராது. ரொம்ப சிரமப்பட்டுதான் அவங்களுக்குச் சமமா ஆங்கிலம் பேசக் கத்துக்கிட்டேன். இதை எதுக்குச் சொல்றேன்னா, கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற பசங்க, இந்த மாதிரியான காரணத்தினால பயந்துபோய் ஊருக்கே போயிடுறாங்க. நம்ம மேல நம்பிக்கை வெச்சு தன்னம்பிக்கையோட இருந்தா வெற்றி கிடைக்கும். அது என் லைஃப்ல நடந்துச்சு. என்னோட மைனஸ் என்னென்னன்னு பார்த்து, அதையெல்லாம் சரி பண்ணினேன். ஒரு வருஷத்துல என்னையே மாத்திக்கிட்டேன்.

நிறைய ஷோ பண்ணினேன். பாம்பே, டெல்லினு பல ஊர்கள்ல இருந்தேன். எனக்கு எப்பவுமே ஒரு வேலையைத் தொடர்ந்து பண்றது பிடிக்காது. அடுத்து அடுத்துனு போகத்தான் நினைப்பேன். அப்போ நான் பண்ணிட்டு இருந்த மாடலிங்கை என்னால 60 வயசு வரைக்கும் பண்ண முடியாது. அதனால ஒரு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு புராஜக்ட் பண்ண வரும் போட்டோகிராபர்களுக்கு மாடல், லொக்கேஷன்னு என்னென்ன தேவையோ அதையெல்லாம் இங்கே பண்ணிக் கொடுக்கிறதுதான் என் வேலை. இந்த கம்பெனி மூலமா எனக்குப் பலர் அறிமுகம் ஆனாங்க. அப்படி ஒருநாள் பிரபல பிரிட்டிஷ் புகைப்படக்காரர் மைக்கேல் கென்னா (Michael kenna) இந்தியாவுக்கு வந்தார். அவர் நான் வொர்க் பண்றதைப் பார்த்துட்டு, ‘கார்த்திக் உனக்கு போட்டோகிராபருக்கான கண் இருக்கு. நீ போட்டோகிராபி பண்ணலாமே’னு எனக்குள்ள இருந்த ஆசைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அப்போ என் நண்பர்கள் மற்றும் இப்போ என் மனைவியா இருக்கிற காதலிகிட்ட, ‘நான் போட்டோகிராபி பண்ணப்போறேன்’னு சொன்னேன். `கம்பெனி நல்லாதானே போகுது. அப்புறம் ஏன் இந்த முடிவு? இதெல்லாம் வேண்டாம்’னு சொன்னாங்க. நான் எதையுமே கேட்டுக்காம தாய்லாந்துக்குப் போயிட்டேன். ஏன்னா, சென்னையில என்னை நம்பி யாரும் ஆர்டர் கொடுக்கலை. `மாடல்தானே இவன். போட்டோகிராபி எப்படிப் பண்ணுவான்?’னு பயந்தாங்கபோல. புரொடக்ஷன் கம்பெனி வெச்சிருந்ததனால தாய்லாந்தில் எனக்குச் சில நண்பர்கள் பழக்கமானாங்க. அதனால அங்கே போய் வொர்க் பண்ணினேன். அப்புறம் அந்த வொர்க்கை எல்லாம் காண்பிச்சு பெங்களூருல வேலை பார்த்தேன். இதையெல்லாம் செய்து எனக்கான ஒரு பேர் கிடைச்சதுக்கு அப்புறம்தான் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்து சில வருஷங்களிலேயே இங்கேயிருந்த ஃபேமஸான போட்டோகிராபர்களுக்குச் சமமா வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதிகமா விளம்பரங்களுக்குத்தான் ஷூட் பண்ணிட்டு இருப்பேன். அப்போ அப்போ சில புது ஹீரோக்களுக்கு போர்ட்ஃபோலியோ பண்ணிக் கொடுப்பேன். இப்படித்தான் கம்பம் கார்த்திக் ஸ்ரீனிவாசன் செலிபிரிட்டி போட்டோகிராபரானார்.’’

``நீங்க போட்டோ ஷூட் பண்ணின முதல் செலிபிரிட்டி யார்..?’’

``நிறைய ஸ்டார்களுக்கு போர்ட்ஃபோலியோ ஷூட், விளம்பரங்கள்னு பண்ணியிருக்கேன். யாரை முதலில் ஷூட் பண்ணினேன்னு சரியா ஞாபகம் இல்லை. ஐ திங்க் `காதல்' சந்தியா.’’

``இதுவரை நீங்க போட்டோ ஷூட் பண்ணின பிரபலங்களில் யாரை உங்களால் மறக்க முடியாது..?’’

``இளையராஜா சார்தான். மியூஸிக் இப்போ வேற ட்ரெண்டுக்கு மாறிடுச்சு. ஆனா, நான் படிக்கிற காலத்தில் இளையராஜா சார் செம பீக்கில் இருந்தார். அவரைப் பார்த்து வளர்ந்தவன் நான். நானே அவரை ஷூட் பண்ணப் போறேன்னு நினைக்கும்போது கை, கால் எல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. கும்பலாப் போய் போட்டோ எடுக்கிற மாதிரி இருந்தா, இந்தப் பதற்றம் வராது. அரைநாள் அவரைத் தனியா வெச்சு நாம டைரக்ட் பண்ணி ஷூட் பண்ணப் போறோம்னு நினைச்சா, பதற்றம் வரத்தானே செய்யும்? அவரை முதன்முறையா போட்டோ எடுக்கப் போனப்போ என்னை அறிமுகம் செய்துக்கிட்டேன். அவர் ஊருக்குப் பக்கத்துலதான் என் ஊரும் இருக்குனு சொன்னதும், `நம்ம ஊரு பையனா நீ?’னு கேட்டுட்டு நல்லாப் பேச ஆரம்பிச்சுட்டார். `ராஜா சார் யாருகிட்டேயும் சீக்கிரமா பேச மாட்டார்’னு சொல்வாங்க. ஆனா, அவர் ஆரம்பத்துலேயே நல்லாப் பேச ஆரம்பிச்சுட்டார். எங்களோட முதல் ஷூட்ல அவரைக் கடவுள் மாதிரி வெச்சு, கடவுளைச் சுற்றி எப்படி இருக்குமோ, அப்படியே செட் பண்ணி எடுத்தோம். அது நல்லா ஹிட்டாச்சு. அவருக்கும் அது ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரே பல பேட்டிகளில் அதைப்பற்றிப் பேசினார். அதுக்கப்புறம் அவரைப் பலமுறை போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். `இளையராஜா ஆயிரம்’ நிகழ்ச்சி வரைக்கும் நான் ஷூட் பண்ணிக் கொடுத்திருக்கேன். எங்களுக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு.’’

``நடிகர், நடிகைகளைத் தனித்தனியாக போட்டோ ஷூட் பண்ணியிருப்பீங்க. அவங்களோட ஃபேமிலி ஷூட் பண்ணியிருக்கீங்களா..?’’

``ஃபேமிலி ஷூட் மாதிரி தனியாப் பண்ணினது இல்லை. ரியல் ஜோடிகளையும் ரீல் ஜோடிகளையும் வெச்சு நான் ஒரு காலண்டர் ஷூட் பண்ணினேன். அது பெருசா பேசப்பட்டுச்சு.’’

``மாடலா இருந்துட்டு போட்டோகிராபரா ஆனதுக்கு அப்புறம் மீண்டும் மாடலாகும் வாய்ப்புக் கிடைத்ததா..?’’

``ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில காஜல் அகர்வாலை வெச்சு ஒரு பியூட்டி ஷாப்புக்கு விளம்பர ஷூட் பண்ணினேன். முதல்நாள் விளம்பரத்துக்கான வீடியோ ஷூட் இருந்துச்சு, அடுத்த நாள் போட்டோ ஷூட். வீடியோ ஷூட்டை மணிகண்டன் பண்ணினார். எனக்கான வேலை அடுத்த நாள்தான் இருந்துச்சு. இருந்தாலும், நான் முன்னாடியே அங்கே போய் பார்த்துட்டு இருந்தேன். அந்த வீடியோவோட கான்செப்ட் என்னன்னா, காஜல் அகர்வால் ஸ்டுடியோவுக்குள்ள என்டர் ஆகி, மேக்கப் போட்டுட்டு போட்டோ ஷூட்ல கலந்துக்கிற மாதிரி இருக்கும். அந்த போட்டோ ஷூட்டைப் பண்ற போட்டோகிராபரா நடிக்கிறதுக்கு ஒரு மாடல் வந்திருந்தார். அந்த மாடல், இயக்குநருக்கும் கேமராமேன் மணிகண்டனுக்கும் திருப்தியா இல்லை. அப்போ நான் அங்கேதான் இருந்தேன். உடனே மணிகண்டன், ‘கார்த்திக் நீங்களே அந்த போட்டோகிராபர் ரோலைப் பண்ணுங்க’னு என்னை மறுபடியும் மாடலாக்கிப் பார்த்தார். அதுபோக சில மாடலிங் வாய்ப்புகளும், ஒரு படத்துல போலீஸ் கேரக்டரில் நடிக்கிறதுக்கும் வாய்ப்பு வந்துச்சு. நான்தான் அதைப் பண்ணலை.’’

``நடிப்பதில் ஆர்வம் இல்லையா..?’’

``அப்படியில்லை. நான் ஒரு மாடலா இருந்தவன்தானே? அது மட்டுமில்லாம டி.வி ஷோ, டாக் ஷோ எல்லாம் பண்ணியிருக்கேன். நடிக்கிறதுல ஆர்வம் இல்லாமலா இருக்கும்? நேரம் இல்லாததால், அப்போ வந்த வாய்ப்புகளைப் பண்ண முடியாமப் போச்சு. நல்ல வாய்ப்புகள் வந்தா, நடிக்கவும் செய்வேன்.’’

``இவ்வளவு பிஸியா ஓடிட்டு இருக்கீங்க... உங்க ஃபேமிலிகூட நேரம் செலவழிக்க முடிகிறதா?’’

``என் முதல் பையனுக்குப் பத்து வயசு ஆகுது. அவன் பிறந்தப்போ நான் என் மனைவிகூட இல்லை. ஏன்னா, அந்த டைம்ல 30 நாள்ல 35 ஷூட் பண்ணிட்டு இருப்பேன். காலையில ஒண்ணு, மதியம் ஒண்ணுனு பரபரப்பா இருக்கும். பல ஊர்களுக்கு ட்ராவல் பண்ணிட்டு இருப்பேன். இப்போதான் எனக்கு ஒரு டீம் இருக்கு. அப்போல்லாம் நான் எடுக்கிற போட்டோக்களை நான்தான் கலர் கரெக்ஷன் பண்ணுவேன். என்ன நடக்குதுனே தெரியாம ஓடிட்டு இருப்பேன். வீட்டுக்குப் போனா தூங்கத்தான் நேரம் இருக்கும். அதனால என் முதல் பையன் வளரும்போது அதைப் பார்த்து நான் என்ஜாய் பண்ணவே இல்லை.

அந்த டைம்ல ரொம்பக் குறைவாதான் போட்டோகிராபர்ஸ் இருந்தாங்க. அதனால நிறைய ஆர்டர்கள் வந்தன. குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை இழந்துட்டேன். அதுக்காகவே என் முதல் பையன் பிறந்து பத்து வருஷம் கழிச்சு, எங்களோட இரண்டாவது குழந்தையைப் பெத்துக்க முடிவு பண்ணினோம். இரண்டு குழந்தைகள் இருக்கிற பல வீடுகளில் அந்த குழந்தைகளுக்கு இடையில பத்து வருஷம் இடைவெளி இருக்காது. ஆனா, என்னுடைய இரண்டாவது குழந்தையோட வளர்ச்சியைக் கருவில் இருந்தே பார்க்கணும்னு ஆசைப்பட்டு, பத்து வருஷம் கழிச்சு இரண்டாவது குழந்தையைச் சமீபத்தில்தான் பெத்துக்கிட்டோம். இரண்டாவது குழந்தை பொண்ணா இருக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, இரண்டாவதும் பையன்தான். இரண்டாவது பையனை ஆரம்பத்தில் இருந்தே பார்த்துட்டு இருந்தேன். அந்த டைம்ல என்ன வொர்க் வந்தாலும், அதை மறுத்தேன். முன்னாடியெல்லாம் அப்படிப் பண்ணவே மாட்டேன்.

பையன் பிறந்து ஒரு மாசத்துல 15 நாள் நான் வேலைக்கே போகலை. குழந்தை பிறந்து மூணாவது நாளிலே சுவிட்சர்லாந்தில் ஏழு நாள் ஷூட் இருந்தது. நான் வரலைன்னு சொல்லிட்டேன். வாழ்க்கையில வேலை வரும், ஓடிட்டுதான் இருப்போம். ஆனா, கடைசியில ஃபேமிலிதான் நம்மகூட இருக்கப்போறாங்க. அதனால கண்டிப்பா அவங்களோட நேரம் செலவழிக்கணும்.

என் மனைவி பேரு ஹேமா. அவங்க முன்னாள் மாடல். மாடலிங் அப்போதான் எங்களுக்குள்ள காதல் உண்டாச்சு. அவங்க சென்னைப் பொண்ணுதான். எங்க கல்யாணம் நடந்தப்போ, நான் சக்ஸஸ்ஃபுல் போட்டோகிராபரா இல்லை. இருந்தாலும், என்னை நம்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ எனக்கு கிடைச்சிருக்கிற சக்சஸுக்கு அவங்கதான் காரணம்.’’

``எந்த செலிபிரிட்டிகூட வொர்க் பண்ணணும்னு நினைக்கிறீங்க?’’

``ரஜினியோட வொர்க் பண்ணணும்கிறது என் ஆசை. இரண்டு, மூன்று முறை அந்த வாய்ப்பு வந்து நடக்காமப் போயிருச்சு. `லிங்கா’ பட டைம்ல எல்லாமே கன்ஃபார்ம் ஆகி ஞாயிற்றுக்கிழமை ஷூட்னா, வெள்ளிக்கிழமை வேற ஏதோ காரணத்துக்காக கேன்சல் ஆகிடுச்சு. சீக்கிரம் அவரோட வொர்க் பண்ணணும்.’’

``நீங்க ஒரு போட்டோ ஷூட்டுக்கு எப்படித் தயாராவீங்க?’’

``ஒரு விளம்பர ஷூட்டா இருந்தா, அதில் ஒரு கான்செப்ட் இருக்கிற மாதிரி ரெடி பண்ணுவேன். உதாரணத்துக்கு சமீபத்தில் மஞ்சு வாரியரை வெச்சு, சோனி கம்பெனிக்கு ஒரு விளம்பர ஷூட் பண்ணினேன். அதை ஓணம் ஸ்பெஷலா இருக்கிற மாதிரி வடிவமைச்சேன். கேரளா ஸ்டைலில் ஒரு வீடு, வீடு ஃபுல்லா மலர் அலங்காரம், புலி ஆட்டம்னு ஓணம் கொண்டாட்டத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதையெல்லாம் வெச்சேன். அப்புறம் சோனி கம்பெனி என்னென்ன புராடக்ட் பண்றாங்களோ அதையெல்லாம் அந்த வீட்டுக்குள் வெச்சு ஷூட் பண்ணினேன். இப்படித்தான் ஒவ்வொரு ஷூட்டையும் முன்னாடியே ப்ளான் பண்ணிட்டுப் பண்ணுவேன்.’’

``சொந்த ஊருக்கு அடிக்கடிப் போவீங்களா?’’

``ஊருல அப்பா மட்டும்தான் இருக்கார். எனக்கு ரெண்டு அக்கா. ஒரு அக்கா லண்டன்ல இருக்காங்க. இன்னொரு அக்கா சென்னையிலதான் இருக்காங்க. ஒரு வருஷம் அவங்க இங்கே வந்தா, அடுத்த வருஷம் நாங்க அங்கே போவோம். ஆனா, நான் வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குக் கட்டாயம் போயிடுவேன். ஊருக்குப் போறதே ஒரு கிரேட் ஃபீலிங்.’’

``மாடலிங், போட்டோகிராபியைத் தாண்டி வேற எதில் உங்களுக்கு ஆர்வம்?’’

``நான் ஒரு பைக்கர். சூப்பர் பைக் வெச்சிருக்கேன். சென்னையில சூப்பர் பைக் வெச்சிருக்கிற ஒரு கேங்கே இருக்கு. அதில் நானும் இருக்கேன். அப்பப்போ ப்ளான் பண்ணி எல்லாரும் விடியக்காலையில பைக்கை எடுத்துட்டுப் பாண்டிச்சேரிக்குப் போய் மார்னிங் டிபன் பண்ணிட்டு வருவோம். இந்த சூப்பர் பைக் டீம்ல சில சினிமாப் பிரபலங்களும் இருக்காங்க.’’

``உங்களோட நெக்ஸ்ட் ப்ளான் என்ன?’’

``இப்போ ஒரு போட்டோகிராபி ஸ்கூல் ஒண்ணு ரன் பண்ணிட்டு இருக்கேன். அதுல நிறைய பசங்க படிச்சிட்டிருக்காங்க. அந்தப் பசங்க எல்லோரையும் வெச்சு நான் வெட்டிங் போட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். வெட்டிங் போட்டோகிராபி இப்போ ரொம்ப பிரபலமாப் போயிட்டு இருக்கு. எல்லோரும் அதைப் பண்ணணும்னு நினைக்கிறாங்க. அதுனால அதையும் பண்ணிடலாம்னு இப்போ அந்த வேலைகளைத்தான் பார்த்துட்டு இருக்கேன்.’’