‘கொடுமுடி டாக்டர்.கே.நடராஜன்’ என்ற பெயரை இப்போது கூகுளில் தட்டினால், முழு முகவரியையும், யூடியூப் வீடியோக்களையும் அள்ளிக்கொட்டுகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் வசிக்கிறார் டாக்டர் நடராஜன். இவருடைய அரிய கண்டுபிடிப்பான `பஞ்சகவ்யா’ விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே கிடைத்த வரப்பிரசாதம். அவரைச் சந்தித்துப் பேசினோம். தொடக்கத்திலேயே நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறார் டாக்டர் நடராஜன்...

``பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எதிரில் உள்ள மனுஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவம் பார்க்கிறேன். முடிந்த வரை நோய்க்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவத் தீர்வுகளைச் சொல்வேன். நோயாளி ஏற்றுக்கொண்டால், நம் பாரம்பர்ய மருத்துவத்தைச் செய்வேன்; விருப்பமில்லை என்று சொல்பவர்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் நடராஜன்.

எளிமையாகக் காட்சிதரும் இவர் கண்டுபிடித்த `பஞ்சகவ்யா’ பல நாடுகளிலும் இவருடைய பெயரை உச்சரிக்கவைத்திருக்கிறது. ஏராளமான விருதுகளும் ‘பஞ்சகவ்யா சித்தர்’ பட்டமும் கிடைத்திருக்கிறது. பாராட்டு விழாக்கள் இப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், காலையில் விவசாயத்தைக் கவனிப்பது, மாலையில் வழக்கம்போல மருத்துவம் பார்ப்பது என்பதை வழக்கமாகவைத்திருக்கிறார்.

‘‘எனக்குப் பூர்வீகம், கொடுமுடி. விவசாயக் குடும்பம் என்பதால், பள்ளியில் படிக்கும் வரை வயலில் இறங்கி, அனைத்து விவசாய வேலைகளையும் செய்திருக்கிறேன். பள்ளிப் படிப்பு முடிந்து, திருச்சியில் பி.யூ.சி படித்தேன். பள்ளியில் தமிழ் வழியில் படித்திருந்தேன். பி.யூ.சி-யில் ஆங்கிலம் என்பதால், கொஞ்சம் கடினமாக இருந்தது. என் பெற்றோர் வயலில் கடினமாக விவசாய வேலைசெய்து என்னைப் படிக்கவைப்பதை நினைத்துக்கொள்வேன். நல்ல மதிப்பெண் கிடைத்தது. என் நல்வாய்ப்பு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. மருத்துவம் படிக்கும் ஆசை, என் தந்தை மூலமே உருவானது. எங்கள் வீட்டில் சாமியார்கள், சித்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சிறு வயது முதல் சித்தர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால், மூலிகைகள் குறித்த அடிப்படைக் கல்வியை, இளம் வயதிலேயே கற்றுக்கொண்டேன். அந்த மூலிகைகள் தொடர்பான அறிவுதான், என்னை இந்த அளவுக்கு உயர்த்தி அழகு பார்க்கிறது.

மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, சாமியாராகிவிட வேண்டும் என்பது என் திட்டம். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் இணைந்துவிட எல்லா வேலைகளையும் செய்துவந்தேன். என் ஆன்மிக குருவான புதுக்கோட்டை ரத்தினசபாபதி ஜீவானந்த சுவாமிகளிடம் சென்று, என் விருப்பதைச் சொன்னேன். ‘நீ படித்த படிப்புக்குத் தக்கப்படி மக்களுக்கு மருத்துவம் செய். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...’ எனச் சொல்லி அறிவுரை சொல்லி அனுப்பினார். அத்தோடு சாமியார் கனவு சாம்பாலானது.

1974-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற கையோடு, கொடுமுடியில் கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுக்குள் `கைராசி டாக்டர்' என்று பெயர் கிடைத்துவிட்டது. மருத்துவம், ஆன்மிகம் எனச் சுற்றிக்கொண்டிருந்தபோது, திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தன. சுற்றுப்புறம் முழுக்க கிராமப் பகுதிகள் என்பதால், தினமும் புதுப் புதுச் சம்பவங்களையும் மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது’’ என்று சொன்னவர், இன்று தன்னை உலக அளவில் அடையாளப்படுத்தியிருக்கும் `பஞ்சகவ்யா’ உருவானவிதம் பற்றிப் பேசத் தொடங்கினார்...

‘‘விவசாயிகளின் வளர்ச்சிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1998-ம் ஆண்டு மாசி மாதத்தில் பெங்களூருக்கு சர்வதேச மூலிகை கருத்தரங்குக்குச் சென்றபோது `Organic Farming Source Book’ என்கிற புத்தகம் கிடைத்தது. அதில் பிரேசில் நாட்டு இயற்கை விஞ்ஞானி ஒருவர் பசுவின் சாணத்தையும், அதன் சிறுநீரையும் சம அளவு தண்ணீரில் கலந்து 21 நாள்கள் ஊறவைத்து, மீத்தேன் எரிவாயுவை நீக்கி, அதனுடன் நுண்ணூட்டச் சத்துக்களைச் சேர்த்து, இரண்டு சதவிகிதக் கரைசலாகத் தண்ணீருடன் கலந்து திராட்சைத் தோட்டங்களில் தெளிப்பு உரமாகப் பயன்படுத்தியதில் நல்ல பலன் கிடைத்ததாக எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் நாமும் அதுபோலச் செய்யலாம் என்று நினைத்தேன்.

அப்போது ‘மகா சிவராத்திரி தினம் வந்தது. அந்த இரவுதான் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. திருப்பாண்டிக் கொடுமுடி ஈசனை தரிசிக்கச் சென்றேன். பூசைக்குப் பின் பஞ்சகவ்யா பிரசாதம் கொடுக்கப்பட்டது. எதேச்சையாக அதைக் கொடுத்த பெரியசாமி குருக்களைப் பார்த்து ‘என்ன சுவாமிகளே! இந்தப் பஞ்சகவ்யத்தால் என்ன பலன்?’ என்று கேட்டேன். `இது வந்த நோயையும் போக்கும்! இனிமேல் வரப்போகும் நோய்களையும் வராமல் தடுக்கும்’ என்று சொன்னார்.

அந்த வேளையில் எனக்குள் ஒரு பொறி தட்டியது. `அந்தப் பிரேசில்காரர் பசுஞ்சாணியையும், மாட்டின் சிறுநீரை மட்டுமே பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறாரே, நாம் ஏன் பஞ்சாட்சரம் போன்ற இந்தப் பஞ்சகவ்யாவின் ஐந்து பொருள்களையும் சேர்த்துப் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது?’ என்று எண்ணினேன். அதன் விளைவே நம் உணவுப் பஞ்சத்தையும் பிணியையும் போக்க வந்திருக்கும் இந்த ‘பஞ்சகவ்யா’ எனும் மாமருந்து. அடுத்த நாளே இதை 21 நாள்கள் ஊறல்போட நினைத்தபோது, சிவனருளால் மீண்டும் ஒரு பொறி தட்டியது. `மீத்தேன் காற்று நீங்கிய, இயற்கை எரிவாயு கலனில் இருந்து வெளியாகும் சாணியை ஏன் உபயோகப்படுத்தக் கூடாது?’ என்று நினைத்தேன். பின்னர் அதுவே குறுகியகாலத்தில் பஞ்சகவ்யா தயார் செய்ய ஏற்றதாக அமைந்தது.

முடிவில் ஐந்து பொருள்களான சாணம், மாட்டின் சிறுநீர், பால், தயிர் ஆகியவற்றுடன் தேன் கலந்து தயார் செய்தோம். தேன் விலையைக் கருதி நாட்டுச்சர்க்கரை சேர்த்தோம். பின்னாளில் அதிலும் ரசாயன நஞ்சுப் பொருள் கலந்திருப்பதால், அதற்குப் பதிலாகக் கரும்புச் சாற்றைப் பயன்படுத்தினோம். பின்னர் இளநீரும் வாழைப்பழமும் கள்ளும் சேர்த்து, பஞ்சகவ்யாவின் நொதிப்புத் திறனைக் கூட்டி, அதிலுள்ள நுண்ணுயிர்களையும், நுண்ணூட்டச் சத்துகளையும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் பேரூட்டச் சத்துகளையும் பெருக்கினோம். இதனால், தற்போது பஞ்சகவ்யா ஒன்பது பொருள்களை உள்ளடக்கி ‘நவகவ்யமாக’ நமக்கு நன்மை செய்கிறது. அடுத்த ஆண்டு, பஞ்சகவ்யா 20-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்தியாவைத் தாண்டி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா... என பஞ்சகவ்யாவைப் பல நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இது பயிர்களுக்கு நல்ல விளைச்சல் கொடுக்கும் விருந்தாகவும் கால்நடைகளைக் காக்கும் கவசமாகவும் மனிதர்களுக்கு மாமருந்தாகவும் செயல்பட்டுவருகிறது. இப்போது பஞ்சகவ்யா செய்முறை, கூகுள் தொடங்கி அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் வரை பிரபலமாகியுள்ளது.

1998-ம் ஆண்டு, ‘இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யா’ என்ற தலைப்பில் கொடுமுடியில் ஒரு கருத்தரங்கை நடத்தினோம். அந்தக் கருத்தரங்குக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்தார். அந்தக் கருத்தரங்கில் முனைவர்.சோலையப்பன், ஆய்வுசெய்து அனுப்பியிருந்த பஞ்சகவ்யா குறித்த வீடியோவை ஒளிபரப்பினோம். அந்த வீடியோவில், பஞ்சகவ்யாவில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதைக் கவனமாகப் பார்த்த நம்மாழ்வார், வீடியோ காட்சி முடிந்ததும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

‘இதுதான் நான் தேடிக்கிட்டிருந்த விஷயம். பஞ்சகவ்யா இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி’ என்றும் நம்மாழ்வார் சொன்னார். அடுத்து பஞ்சகவ்யா பயன்படுத்தும் பல விவசாயிகளைச் சந்தித்து, பஞ்சகவ்யா பயிர்களில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்தும் தெரிந்துகொண்டார். அதற்கு பிறகு அவரின் வாழ்நாள் முழுவதும் அவர் கலந்துகொண்ட அத்தனை நிகழ்ச்சிகளிலும் பஞ்சகவ்யா குறித்துப் பேசிவந்தார். பஞ்சகவ்யாவைப் பட்டி தொட்டி எல்லாம் கொண்டுசேர்த்ததில் நம்மாழ்வாருக்கு முக்கியப் பங்கு உண்டு. `பஞ்சகவ்யா’ என்ற வளர்ச்சி ஊக்கி, விவசாயிகள் கைக்குக் கிடத்த பிறகுதான் இயற்கை விவசாயம் வேகம் எடுத்தது. பஞ்ச கவ்யாவுக்கு நோபல் பரிசு பெறத் தகுதி இருக்கிறது'’ என்றுகூடப் பெருமையாகச் சொல்வார்.

காரணம், பஞ்சகவ்யா என்ற வளர்ச்சி ஊக்கியை விவசாயிகளே எளிதில் செய்துகொள்ளும் நுட்பத்தை வெளிப்படையாக அறிவித்தேன். அதை வியாபாரமாக்கி, பணம் செய்ய நினைத்திருந்தால், கோடிக்கணக்கில் பணம் கொட்டியிருக்கும். ஆனால், ரசாயன விவசாயத்தில் கடனாளியாக இருந்த விவசாயிகளை, கார் வாங்கி ஓட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது பஞ்சகவ்யாவின் மகிமை. ஒரு விவசாயி மகனால், உலக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இயற்கைப் பரிசுதான் பஞ்சகவ்யா.

பல பல்கலைக்கழங்களிலும், பஞ்சகவ்யாவின் நன்மைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. நான் அடிப்படையில் மருத்துவர் என்பதால், பஞ்சகவ்யாவில் சில மாற்றங்கள் செய்து, `அமிர்த சஞ்சீவி’ என்ற மருந்தாக மாற்றினேன். இதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களைக் குணப்படுத்தி வருகிறேன். என் சொந்த அனுபவம்... எனக்கும் சர்க்கரைநோய் ஏற்பட்டது. முறையான உணவும், அமிர்த சஞ்சீவியும் ஒரே மாதத்தில் என்னைச் சர்க்கரை குறைப்பாட்டிலிருந்து மீட்டுள்ளது. இதனால், ஆயுள் முழுவதும் அலோபதி மாத்திரைகள் சாப்பிடுவதிலிருந்து விடுதலை பெற்றேன். இந்த எளிய நுட்பத்தை என் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் சொல்வதுண்டு. இதைப் பலரும் பின்பற்றிச் சர்க்கரையை வென்று, இனிப்பாக வாழ்கிறார்கள். இந்தப் பணியைச் செய்யத் தூண்டிய என் குருமார்களுக்கும் என் வீட்டில் பல ஆண்டுகள் வசித்த ‘சித்தர் பாட்டி’க்கும் பெருங்கருணை கொண்ட இயற்கைக்கும் நன்றி சொல்லவேண்டிய தருணம் இது’’ என்று நெகிழ்கிறார் டாக்டர் நடராஜன்.