திருவிழா என்றால் பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், தப்பாட்டம் என நம் ஊரே களைகட்டும். அதுபோல, வெளிநாடுகளில் திருவிழாக்களை வித்தியாசமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அப்படி ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் நடந்த ஒரு திருவிழா, `டெப்ரேசென் ஃப்ளவர் கார்னிவல்' (Debrecen Flower Carnival].

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தத் திருவிழா மக்களை ஈர்த்ததற்கான காரணம், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு. அதற்கு மெருகூட்ட அழகான பெண்களின் நடனம், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்... என ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் சாலைகள் அதிர்ந்தன. மலர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான உருவங்கள், பார்வையாளர்களை `வாவ்' சொல்லவைத்தன.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழா, இந்த வருடம் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி, 12 நாள்கள் வரை நடைபெற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான உருவங்களைத் தயார்செய்து, சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இதற்காக, டன் கணக்கில் மலர்கள் பயன்படுத்தப்பட்டதாம். உள்ளூர் மற்றும் வெளியூர் நடனக் கலைஞர்கள், இசை மற்றும் சாகசக் கலைஞர்கள் கலந்துகொண்டு, அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கவைத்தனர்.

சுமார் 45 வருடங்களுக்கும்மேலாக நடைபெற்றுவரும் இந்தத் திருவிழாவைக் காண, அண்டை நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகிறார்கள். ஹங்கேரி நாட்டில் கோடையில் கொண்டாடப்படும் இந்த ஃபிளவர் ஃபெஸ்டிவல், அந்த நாட்டை ஆண்ட செயின்ட் ஸ்டீஃபன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.