Published:Updated:

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

மணிகண்டபிரபு - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

மணிகண்டபிரபு - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

டித்தள்ளுபடியில் ஆரம்பித்து... அப்படியே நடுவில் வந்து கார்த்திகை தீபம் வரைக்குமே கன்டினியூ ஆகிற பண்டிகையாக ஆதியில் கொண்டாடப்பட்ட தீபாவளி... இப்போ  நாலு இட்லி, மூணு மட்டன் பீஸ், இரண்டு பட்டிமன்றம், ஒரு குட்டித்தூக்கம் எனச்   சுருங்கிச்  சுண்டிவிட்டது!    

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

``எப்படியிருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே?’’ என்று வருத்தப்படாத அங்கிள்ஸே தமிழ்நாட்டில் இருக்க முடியாது.  தீபாவளிக் கென்ற சில சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. அப்படி அவுட்டேட் ஆன  சில விஷயங்கள்!   

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

மணக்குமேண்ணே

புது வருட காலண்டர் வந்ததுமே முதலில் பார்ப்பது  தீபாவளியைத்தான். மூச்சுக்கு முந்நூறு தடவை தீபாவளிக்கு இன்னும் இத்தனை நாள் இருக்குனு பப்ளிக் எக்ஸாம் எழுதும் பையன் மாதிரி நினைவில் வெச்சிருப்போம். நகைக்கடையிலிருந்து செருப்புக்கடை விளம்பரம்வரை அத்தனை பேரும் அட்வான்ஸ் வாழ்த்துச் சொல்லும்போது `பாகுபலி’ மூன்றாவது  பார்ட் வர்ற மாதிரி ஓர் ஈர்ப்பு இருக்கும். ``ஆத்தா நான் பட்டாசு வாங்கிட்டேன்’’னு ஊருக்குக் காட்ட ஒரு சிலர் நாளுக்கு ஒருமுறை ஓலைப் பட்டாசு வெடிப்பாங்க. துப்பாக்கி வாங்கித் திருடன் போலீஸ் விளையாடுவாங்க. இப்போது, இன்னிக்குத் தீபாவளி என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் மோடில்தான் வாழ்கிறோம்.  

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

நேரம் காலை 4.30

விடிய விடியப் பட்டாசு வெடிச்சாலும் நள்ளிரவு நாலு மணிக்குப் பெண்கள் எல்லாம் எழுந்து பதினாறு புள்ளி, பதினெட்டு வரிசையில் புள்ளிக்கோலம் போடுவாங்க. கையில் நீளமான ஊதுபத்தியோடு அந்தத் தாவணிப் பெண்களைப் பார்த்துக்கொண்டே பட்டாசு வெடிக்கிற வீரம் இருக்கே... வேதாளம் இருக்கே... விவேகம் இருக்கே...  `அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்’ எனக் கோலத்தில் எழுதி யிருப்பதுதான் முந்தைய வாட்ஸ்அப் 1.1 வெர்சன்.

உனக்குக் கேட்டுச்சா? 

இப்பெல்லாம் எங்காவது ஒரு மூலையில் பாத்ரூம் தகர கேட் திறக்கிற மாதிரி பட்டாசுச் சத்தம் கேட்குது. ஓலைப் பட்டாசில் ஆரம்பிப்போம். அப்படியே அணுகுண்டைக் கையில் பிடித்து வீசியடித்து விட்டுக் கடைசியில் செங்கோட்டை மார்க் சரவெடியைப் போட வேண்டும். ‘ஆண்டவா அணு குண்டை நான் பார்த்துக்கிறேன்,பிஜிலி வெடி வெடிப்போரிடமிருந்து காப்பாற்று’னு பூமித்தாயே வேண்டு கோள் வைக்கும்.சர்வோதயா ஊதுபத்தியில் பிஜிலி வெடிக்குத் தீப்பற்ற வைத்து, இரண்டு பக்கமும் வாகனத்தை நிறுத்தி,  கன்னிவெடிய டிஃப்யூஸ் பண்ற ஆபீசர்ஸ் ரேஞ்சுக்கு பில்ப் அப் குடுப்பாங்க.  

பலே மல்லையத்தேவா!

பஸ்ஸில் பக்கத்து சீட்டும் தீபாவளிப் பலகாரச் சீட்டும் நல்லா ஆளா பார்த்து அமையணும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், மல்லையா ஏமாத்தி னதுக்கு முன்பே பலகாரச் சீட்டு பாலய்யா ஏமாத்தி ஓடியிருப்பாரு. பலகாரச்சீட்டு பத்து வாரம் கட்டி ஏமாந்து `போனா போகுது விட்ரா பால்பாண்டி’ என்று தீபாவளிக் கொண்டாடுவதில்தான் சுவாரஸ்யமே.  

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

விமர்சன வெடி

இன்னிக்கு வருவதே மூன்றிலிருந்து நான்கு படங்கள். அதிலும் ஒரு படத்துக்கு வெளியாவதில் பிரச்னை. ஒரு படத்தில் எல்லாம் புதுமுகமாய் இருக்கும். சினிமா போஸ்டரைப் பார்த்தாலே இனிமா  குடிச்ச மாதிரி இருக்கும். வேற வழியே இல்லாம ஒரு படத்துக்குப் போனால் `பாரும் பார்த்துத் தொலையும்’ ரேஞ்சுக்கு இருக்கும். இருந்தாலும் புதுச்சட்டைக் கிழிய க்யூவில் நின்னு சண்டை போட்டு புதுப்படம் பார்க்கிற சுகம் எங்கே கிடைக்கும்?

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!பறக்கும் பஸ்

குடும்பத்தோட ஊருக்குப் போக பஸ் ஸ்டாண்டில் இறங்கினால் எங்கெங்கு காணினும் கூட்டமடா... மஞ்சுவிரட்டுல மாடு பிடிப்பது மாதிரிதான், பஸ்ஸில் இடம் பிடிப்பது. இடம்பிடித்துச் சொந்த ஊர் நோக்கிப் போக ஏறினால் இடமே இருக்காது.  கடுப்புல கால் கடுக்க நிற்கும்போது கண்டக்டர் ஒவ்வொருத்தருக்கா டிக்கெட்டையும் சில்லறையையும் நிற்கும் நம்மிடம் கொடுத்து அனுப்பும்போது கட்டடத்தில் சித்தாள் கலவைச் சட்டியை கை மாற்றுவது மாதிரி இருக்கும். தப்பித்தவறி டி.வி-யில் படம் போட்டால், ஆடிக்காத்தில் சாயற வாழைமரம் மாதிரி எல்லோரும் ஒரே பக்கமா சாய்வாங்க.  

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

ஜொலிக்குதே ஜொலிக்குதே

துணியெடுக்க கடைக்குப் போனால் அலம்பல்தான். ஒருத்தனுக்கு ஒரு ட்ரெஸ்ஸிங் ரூம். அறை எண் 505-ல் அவன் பேர் எழுதி வெச்சி சமாதி கட்டிடலாம். அத்தனை நேரமாகும். ``கல்யாணமா, காது குத்தா?’’ன்னு கவுண்டமணி கேட்பது மாதிரி ``சட்டை சைஸ் நாற்பதா? நாற்பத்தி ரெண்டானு?’’ தொண்டை வலிக்க சேல்ஸ்மேன் வெளியிலிருந்து கத்துவது பாவமா இருக்கும். மிடில் கிளாஸ் பசங்க, சிக்கனத்துலயும்  சீரியஸானவங்க. ஒரு கருப்பு பேன்ட்டுக்கு ஆறு சட்டை எடுத்து அட்ஜஸ்ட் செய்திடுவாங்க.   

எப்படி இருந்த தீபாவளி இப்படி ஆகிடுச்சே!

கடன் வாங்காமல் கம்ப்ளீட் ஆகுமா?

தீபாவளிக்குத் பட்டாசு, புதுத்துணி வாங்குறோமோ இல்லையோ மறக்காம வாங்க வேண்டிய ஐட்டங்களில் ஒன்று கடன். ஒரு தீபாவளிக்கு வாங்கின கடனையே கட்டித் தீர்த்திருக்க மாட் டோம். இருந்தாலும், இந்தத் தீபாவளிக்கும் ஒரு கடனைப் போடு வோம். ஏன்னா, வாங்குற கடன் நமக்கான கடன் இல்லை. நம்மோட இருக்கிற  மக்க மனுஷங்க மகிழ்ச்சிக் கில்லா!