``அந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யறவர் அரசியல்வாதின்னு எப்படிச் சொல்ற?’’

``புழல் சிறையிலிருந்து பத்து நிமிட தூரத்தில் மனைனு விளம்பரம் பண்றாரே!’’
- ஜியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அந்தப் பிச்சைக்காரன் கமர்ஷியலா 'திங்க்' பண்றானா...’’
``என்ன?"
``ஆகச்சிறந்த தர்மத்துக்கு தினசரி ஒரு பரிசு கொடுக்கப்போறானாமே!"
- பி.ஜி.பி.இசக்கி

“குழந்தைக்கு ஊட்டச் சத்தே இல்லை! இந்த மருந்தை உங்க மனைவிக்கு கொடுங்க!”
``மனைவிக்கா?”
“ஆமா சார்! குழந்தைக்கு சாதம் ஊட்ட, உங்க மனைவிக்கு சத்தே இல்லை!”
- கி.ரவிக்குமார்

``உங்க வீட்டுக்கு வந்த திருடன் ட்விட்டர்ல இருக்கான்னு எப்படி சொல்றீங்க?’’
``திருடி முடிச்சு கிளம்பும் போது நான் உங்க ஃபாலோயர்தான்... முடிஞ்சா கண்டுபிடிங்கன்னு சொல்லிட்டுப் போனான்!
- ஜியா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism