"ஏன் உங்க மனைவி வாக்கிங் வர மாட்டேங்கிறாங்க!"
"கிரவுண்டுக்கு மேட்சிங்கா சேலை கிடைக்கலையாம்!"
- கி.ரவிக்குமார்

“திரும்பத் திரும்ப அதே வீட்டிலேயே திருட அந்த வீட்ல என்னதான் இருந்தது?”
“ ‘முயற்சிகள் தவறலாம், முயற்சி செய்யத் தவறாதே’ன்னு போர்டு இருந்தது எசமான்!”
- தில்லை.பாலசுப்ரமணியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“படகு கவிழ்ந்தப்ப நீங்க ஏன் லைப் ஜாக்கெட் எடுத்துக்கல?”
“என்னோட டெய்லர் தைக்காத எதையும் நான் போட்டுக்க மாட்டேன்!”
- அம்பை தேவா
“நான் கச்சேரில பாடறேன்னு தெரிஞ்சா போதும், ஊரே கூடிடும் தெரியுமா..?”
“அப்புறம் எப்படி தப்பிச்சு ஓடுவீங்க?”
- ஜெ.மாணிக்கவாசகம்