
“சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு தாயி...”
“இருப்பா உப்புமா எடுத்துட்டு வரேன்...”
“வேண்டாம் தாயி.. மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப்போறேன்...”
- சீர்காழி வி.வெங்கட்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவர் தனக்கு வந்த குற்றப் பத்திரிகைகளைத் தொகுத்து எழுதறாரே ஏன்?’’
``அதுதான் அவரோட சுயசரிதை!’’
- அம்பை தேவா

``அம்பது பேர் மட்டும் அமரக்கூடிய மாதிரி ஒரு சபா சொல்லுங்க!’’
``ஏன் கேக்குறீங்க?’’
``அப்பதானே என் கச்சேரி நடக்கும்போது சபா நிரம்பி வழிஞ்சுடுச்சுனு பத்திரிகையில எழுதுவாங்க!’’
- எஸ்.முகம்மது யூசுப்

``அந்த கிரிக்கெட் வீரர் ஏன் ஜெர்சி போடாம விளையாடுறார்?’’
``ஜெர்சில `நியூ இந்தியா'னு இருக்கணுமாம்!’’
- மாணிக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism