“மன்னா... எதிரி புயலென புறப்பட்டு வருகிறானாம்...!”

“சரி...சரி... வரும்போது நிவாரணத்தொகையை மறக்காமல் எடுத்து வரச்சொல்லும் அமைச்சரே...!”
- கோவை.நா.கி.பிரசாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“நம்ம தலைவர் பேசுகின்ற மேடையில் ஏதோ பலகையில் எழுதி மாட்டி இருக்காங்களே... என்ன அது?”

“ ‘நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே’ அப்படின்னு எழுதி மாட்டியிருக்காங்க.”
- கந்தபெருமாள்
“ இந்த ரியல் எஸ்டேட் ஆபிஸ்ல மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் ?”

“பத்திரப்பதிவு முடிஞ்சதுமே படகையும் துடுப்பையும் தந்திடுவாங்களாம்!”
- தில்லை.பாலசுப்ரமணியன்

"ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார். தோற்றால் நஷ்டஈடு தர நீங்கள் தயாரா?"
- பெ.பாண்டியன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism