“தலைவர் ரெய்டு நடந்தது பத்தி கவலைப்படாம சந்தோஷமா இருக்காரே...”

‘`எங்க எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரியாம இருந்தாராம். ரெய்டுல எல்லாம் புள்ளி விபரமா தெரிஞ்சுடுச்சாம்!”
- இசக்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தியேட்டருக்குள்ள போலீஸ் நுழையுதே ஏன்?’’
``படம் முடியப்போகுதுனு சிம்பாலிக்கா சொல்றாங்களாம்!’’
- எஸ்.முகம்மது யூசுப்

``நம்ம தலைவர் பண்ணுற தேர்தல் பிரசாரத்தைப் பார்த்து கட்சிக்காரங்களே தலையில் அடிச்சுக்கிறாங்க’’
``ஏன்?’’
``என்னை ஜெயிக்க வெச்சா, மீண்டும் இடைத்தேர்தல் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணுவேன்னு சத்தியம் பண்றாரே!’’
- அன்பு

“தலைவர் ஏன் `ஆடு’ சின்னம் கேட்கிறார்?”
“ ‘இலை’க்கு எதிரி ‘ஆடு’தானே?”
- தாமு, தஞ்சாவூர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism