``நம்ம கல்யாண ஆல்பத்தைக் கேட்டா பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்து காட்டறியே?’’

``பழைய பேப்பர்காரன்கிட்டே அதைப் போட்டுதான் இந்த வாளி வாங்கினேன்!’’
- எஸ்.முகம்மது யூசுப்
“தேர்தல் அதிகாரி மகளை பொண்ணு பாக்கப் போனது வம்பாப்போச்சு!”
“என்ன பண்ணாரு?”
``8-ம் தேதி ஜாதகத் தாக்கல், 10-ம் தேதி பொருத்தம் சரிபார்ப்பு, 12-ம் தேதி பரிசீலனை, 15-ம் தேதி ரிசல்ட் அறிவிப்புனு சொல்றாரு!”
- சி.சாமிநாதன்
``பட்டிமன்றத்துக்கு புதுசா ஒரு தலைப்பு சொல்லேன்!”
`` `ஆய்வில் விஞ்சி நிற்பவர் ஆளுநரா, முதல்வரா?’ன்னு வெச்சுடேன்!”
- ஏந்தல் இளங்கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism