``ஏரி வேகமாக நிரம்பி வருதாம் தலைவரே!’’

``முன்பே ப்ளாட் போட்டு விற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா?!’’
- எஸ். மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“அந்தக் கட்சியிலிருந்து மிரட்டறாங்களா?! வேட்புமனுவை வாபஸ் வாங்கிட வேண்டியதுதானே!”

“அட நீ வேற, அந்தக் கட்சி வேட்பாளரை நிக்கச்சொல்லி மிரட்டறாங்கப்பா...!”
- கோவை.நா.கி.பிரசாத்
``தலைவரே... நாம தேர்தல் வேட்புமனுப் பரிசீலனையிலே ஜெயிச்சிட்டோம்...’’

``ஆஹா... எத்தனை வோட்டு வித்தியாசத்திலப்பா?’’
- பழ.அசோக்குமார்
``என்னய்யா இது, ஓட்டுக்குப் பணம் வாங்க வர்றவங்க ஃபுல் மேக்கப்ல வர்றாங்க?’’

``சி.சி.டி.வி கேமரா இருக்கு, அதுக்கு ஏத்த மாதிரி வாங்கன்னு சொன்னேன் தலைவரே!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism