பிரீமியம் ஸ்டோரி

“நீங்க கொடுத்த மருந்தை சாப்பிட்டதும் மயக்கம் வருது டாக்டர்.”

ஜோக்ஸ் - 4

“அப்ப அது மயக்கமருந்துதான். சரி.. இப்ப ஒரு மருந்து தரேன். அது என்ன பண்ணுதுன்னு பார்த்து சொல்லுங்க.”

  - தீ.அசோகன்

“நம்ம பஸ்ல நவீன வசதிகள் எல்லாம் செஞ்சிருக்காங்க”

 “அப்படி என்ன வசதி?”

ஜோக்ஸ் - 4

“மழை பெய்யுதா... நின்னு போச்சான்னு பார்க்க மேற்கூரையில ஓட்டைகள் போட்டு இருக்காங்க”

- எஸ்.சடையப்பன்

"நம்ம டாக்டர் வீட்டுக் கல்யாணம் ரொம்ப வித்தியாசமா இருந்தது?"

"எப்படி?"

ஜோக்ஸ் - 4

“கல்யாணச் சாப்பாட்டில டயாபடீஸ் பந்தி, பிளட்பிரஷர் பந்தி, அல்சர் பந்தின்னு தனித்தனியா வச்சிட்டாரு!"

- பே.சண்முகம்

 “காடுகளில் ஆறுமாத காலம் சிங்கம், புலி, கரடிகளோடு வாழ்ந்து விட்டு தைரியமாக நாடு திரும்புகிறீர்களே மன்னா?”

ஜோக்ஸ் - 4

“ ‘சிங்கம், புலி, கரடியோட வாழ்ந்தாகிவிட்டது மகாராணியோடு வாழ முடியாதா என்ன’ என்ற தைரியம்தான்.”

- அவ்வை.கே.சஞ்சீவிபாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு