Published:Updated:

ஜாலி பலன்கள் - 2023: பாசிட்டிவிட்டி பரவ வித்தியாசமான ராசிபலன்கள் - ஜஸ்ட் ஃபார் ஃபன் மக்களே!

ஜாலி பலன்கள் - 2023

பூனை குறுக்கப்போய்டுச்சேனு நெகட்டிவா பாக்காம, குறுக்க போன பூனை கடிக்காம போச்சேனு பாசிட்டிவா பாப்போம். இந்த 2023 வருஷத்துக்கான ஜாலி பலன்கள் இதோ...

ஜாலி பலன்கள் - 2023: பாசிட்டிவிட்டி பரவ வித்தியாசமான ராசிபலன்கள் - ஜஸ்ட் ஃபார் ஃபன் மக்களே!

பூனை குறுக்கப்போய்டுச்சேனு நெகட்டிவா பாக்காம, குறுக்க போன பூனை கடிக்காம போச்சேனு பாசிட்டிவா பாப்போம். இந்த 2023 வருஷத்துக்கான ஜாலி பலன்கள் இதோ...

Published:Updated:
ஜாலி பலன்கள் - 2023

காலைல கண் முழிச்சதும் காலண்டர்ல ராசி பலன் பாக்குறதுல தொடங்கி, தூக்கமே வராம நைட் 12 மணிக்கு வாட்ஸப்ல ஃபார்வர்டு மெசேஜ் படிக்கிற வரை எங்க பார்த்தாலும் நெகட்டிவிட்டி. ‘இவ்வளவு நெகட்டிவிட்டி பரப்பி அப்படி என்னப்பா சாதிக்க போறீங்க?’னு அசரீரி கேக்குற அளவுக்கு நம்மள சுத்தி முழுக்க முழுக்க நெகட்டிவிட்டி. நெகட்டிவிட்டி பத்தி பேச வேணாம் பாசிட்டிவா இருப்போம்னு எழுதுற கட்டுரைல கூட இத்தனை நெகட்டிவிட்டி. அதனால இக்னோர் நெகட்டிவிட்டி. அதாங்க எதிர்மறையான விஷயங்களைப் புறக்கணிக்கிறது.

பூனை குறுக்கப்போய்டுச்சேனு நெகட்டிவா பாக்காம, குறுக்க போன பூனை கடிக்காம போச்சேனு பாசிட்டிவா பாப்போம். இந்த 2023 வருஷத்துக்கான ஜாலி பலன்கள் இதோ...
ஜாலி பலன்கள் - 2023
ஜாலி பலன்கள் - 2023

மேஷம்

உங்கள் ராசியின் அதிபதி எப்பவும் ஜாலியாதான் இருப்பாரு. அவரைப் போலவே நீங்களும் ஃபன் பண்ணுங்க. பணமா இல்லாம பணத்தை டிஜிட்டலா செலவு செஞ்சீங்கன்னா பொருளாதாரம் உங்கள வச்சு செஞ்சுடும். நிம்மதிய சீர்குலைக்கிற உறவுகள விட்டு தள்ளி நில்லுங்க, சந்தோசத்துக்கான பரிசு வெல்லுங்க. அன்புக்குரியவர்களுக்கு வெறும் குட்மார்னிங், குட்நைட் இல்லாம நல்ல மெசேஜ்களயும் அனுப்புங்க. பக்கத்துல கண்ணாடி இருந்தா உங்க அழகான சிரிப்ப ஒருதடவ பாருங்க.

ராசியான படம்: சூர்யவம்சம்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: நாக்க முக்க

ரிஷபம்

புதிய முயற்சிகள் நல்லபடியா நடக்கணும்னு சாமிகிட்ட வேண்டுறதோட நின்னுடாம கொஞ்சம் முயற்சியும் செய்யுங்க. வாழ்க்கையில் நீங்க எதிர்பார்த்த எதுவுமே கிடைக்கலைன்னா நீங்க சரியானத செய்யலைன்னு அர்த்தம். எனவே, செயல்கள் நேர்மறையா இருந்தால் எல்லாம் நல்லதாவே நடக்கும். நல்ல நாய், நல்ல பூனை போல் நல்ல மனுசங்களோடவும் பழகுங்க. எல்லாவற்றிலும் வெற்றியே கிடைக்காது, தோல்வியும் கிடைக்கும் அதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்.

ராசியான படம்: அன்பே சிவம்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: டைலாமோ டைலாமோ

மிதுனம்

ஊசி அளவு நன்மை செஞ்சிருந்தாலும் உயிரைக் கொடுக்கிற மிதுன ராசி நேயர்களேன்னு யாராச்சும் வந்தா ஏமாந்துடாதீங்க. நன்மை செஞ்சவங்களுக்கு நன்றி சொல்லி நன்றியுணர்வோட இருந்தா போதும் உங்கள யாரும் ஏமாத்த முடியாது. தேங்க்ஸ் மட்டுமில்ல, சாரியையும் கொஞ்சம் சத்தமாச் சொல்லிப் பழகுங்க. தேவையான பொருள்கள் வீட்டில் இருந்தாலும் ஆஃபர் விளம்பரம் பார்த்து ஆர்டர் பண்றவங்க நட்பை உடனே துண்டித்துவிடவும்.

ராசியான படம்: சூரரைப் போற்று
நீங்க கேட்க வேண்டிய பாடல்: ஓ மகசீயா
ஜாலி பலன்கள் - 2023
ஜாலி பலன்கள் - 2023

கடகம்

இரண்டாவது வீட்ல குரு நல்லால்ல, மூணாவது வீட்ல சனி நல்லால்லைனு புலம்பாம பக்கத்து வீட்ல இருக்கிறவங்க கூட நல்ல நட்போட இருக்கப் பாருங்க. அவசரத்துக்கு உதவி செய்ய அவங்கதான் வரணும். தோஷம் பத்தி கவலைப்படாம இன்னும் ரெண்டு தோசை எக்ஸ்ட்ரா வாங்கிச் சாப்பிட்டு நிம்மதியா ஒருநாள் தூங்குனீங்கன்னா உங்க பிரச்னை எல்லாம் சரியாகிடும். எல்லா நாளும் அனுகூலமான நாளாக அமைய கூலாக இருந்தாலே போதும்.

ராசியான படம்: அலைபாயுதே
நீங்க கேட்க வேண்டிய பாடல்: ஊ சொல்றியா மாமா

சிம்மம்

‘வெளங்கும், வெளங்கிடும்’ என்று வாய்க்கு வாய் சொல்லும் ஆள்கள் உங்களைச் சுற்றி நில்லாமல் பார்த்துக்கொண்டாலே உங்களுக்கு எல்லாமே நல்லபடியா விளங்கும். குன்னூருக்குப் போறதா இருந்தாலும் சரி; குருவி வளர்க்கிறதா இருந்தாலும் சரி... குறிக்கோள்னு ஒண்ணு வச்சுக்கோங்க. வாழ்க்கைத்துணைக்கும் ஒரு வாழ்க்கை இருக்குதுங்கிற புரிதல் இருந்தால் மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ராசியான படம்: படையப்பா
நீங்க கேட்க வேண்டிய பாடல்: சீனா தானா
ஜாலி பலன்கள் - 2023
ஜாலி பலன்கள் - 2023

கன்னி

யோகா செய்றதுக்கு யோகம் வேணும், உடற்பயிற்சி செய்ய நேரம் வேணும்னு தயங்காம கிடைச்ச நேரத்துல வாக்கிங், ஜாக்கிங்னு போங்க. போனும் கையுமா தலையைக் குனிஞ்சபடி ஒரே இடத்துல உக்காந்து நேரம் போறது தெரியாம இருக்கிறதுக்குப் பதிலா சுவர்ல மாட்டி இருக்கிற கடிகாரத்துல தூசிய துடைச்சு வீட்ல நல்ல பேர் வாங்கலாம். பயணங்களை எப்போதும் தவிர்க்காதீர்கள். அதுதான் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

ராசியான படம்: மின்னலே
நீங்க கேட்க வேண்டிய பாடல்: டண்டனக்கா

துலாம்

கூட இருக்கிறவங்க செய்ற சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி புகார் சொல்லாம அன்போட நடந்துக்கிட்டா உங்க வாழ்க்கைல எல்லாமே அழகா மாறும். உங்க வீட்ல எல்லா விஷயங்களும் நீங்க இல்லைன்னா நடக்காதுங்கிற மனநிலைல இருந்து வெளில வாங்க. நீங்க இல்லைன்னாலும் எல்லாமே நடக்கும். சம்பந்தமில்லாத விஷயங்கள எல்லாம் கவலைப்படாம கடந்துபோங்க.

ராசியான படம்: வானத்தைப் போல
நீங்க கேட்க வேண்டிய பாடல்: டங்கா மாரி ஊதாரி

விருச்சிகம்

உங்க தலைவலிக்கு யாரும் டீயாக மாட்டாங்க. அதனால வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டீக்கடை இருந்தா ஆற அமரக் குடிச்சிட்டு வாங்க. எவ்வளவு பிரச்னை இருந்தாலும் நிறைய மனுசங்க நிறைய டிசைன்ல சந்தோஷமா இருக்கிறத அங்க பாக்கலாம். முடிஞ்சவரை நீங்களும் சந்தோஷமா வாழ்ந்து மத்தவங்களையும் சந்தோஷாமா வச்சுக்கோங்க. அர்த்தாஷ்டம சனிய நினச்சு அர்த்தமில்லாம பயப்படாம அர்த்தமானதா வாழப் பாருங்க.

ராசியான படம்: நினைத்தாலே இனிக்கும்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: அதாரு அதாரு
ஜாலி பலன்கள் - 2023
ஜாலி பலன்கள் - 2023

தனுசு

சனிக்கிழமை தவிர மத்த நாள்ல காக்கா வந்தாலும் விரட்டி விடாம கொஞ்சம் சோறு வச்சு கூட சேர்ந்து கா... கா...னு கத்தி குழந்தையா மாறிப் பாருங்க. மரம் வளர்ப்போம் மாடு வளர்ப்போம்னு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல மட்டும் ட்ரெயின் விட்டுட்டு இருக்காம வீட்டு வாசல்ல ஒரு பூச்செடியாவது வச்சு தினமும் தண்ணி ஊத்துங்க. அதோட சேர்ந்து நீங்களும் அழகா வளருவீங்க.

ராசியான படம்: காதல் கோட்டை
நீங்க கேட்க வேண்டிய பாடல்: ஜலபுலஜங்கு

மகரம்

ராகு திசை நடக்குது, அதனால உடம்பு சரியில்லைனு உங்களுக்கு நீங்களே சொல்லிக்காம உங்க வீட்ல உங்கள சுற்றி நாலு திசைகளையும் சுத்தமா வச்சுக்கோங்க. உடம்பும் மனசும் சீக்கிரம் சரியாகும். வீட்ல ஏதாவது சவுண்டு கேட்டாலே எரிச்சல்படாம கொஞ்சமா சவுண்டு வச்சு உங்களுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேளுங்க. அது எம்.ஜி.ஆர் பாட்டோ ஏமி ஜாக்ஸன் பாட்டோ... ஆடிப் பாடினாலும் தப்பில்ல, புத்துணர்ச்சி கிடைக்கும்.

ராசியான படம்: மெர்சல்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: ரகிட ரகிட

கும்பம்

இன்னைக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு வாசலயே வெறிச்சுப் பாத்துட்டு இருக்காம தினமும் அழகான ஆகாயத்தைப் பாருங்க. மனசு லேசாகும், கவலை தூசாகும். பிள்ளைகள் உங்க சொல்படி நடந்துக்கலன்னு கவலைப்படாம அவங்க சொல்றத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க. தேவையில்லாத உணவுகளையும் தேவையில்லாத உணர்வுகளையும் தவிர்த்திடுங்க.

ராசியான படம்: விக்ரம்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: லோலிட்டா
ஜாலி பலன்கள் - 2023
ஜாலி பலன்கள் - 2023

மீனம்

பொறியியல், விஞ்ஞானம், கணிதம், கலைன்னு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பலன்கள் இல்ல. ஆனா, எல்லாருக்கும் தனித்தனியா சமமான வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்தவங்க காதல் விவகாரங்கள்ல எப்பவுமே தலையிட வேண்டாம். புதன்கிழமை மட்டுமல்ல முடிந்தால் தினமும் அருகிலிருக்கும் கோயிலுக்கோ, பார்க்குக்கோ நடந்து சென்று நடந்து வரவும். காரிலோ பைக்கிலோ வாக்கிங் செல்வதைத் தவிர்த்துடுங்க. ஹெல்த்துக்கு நல்லது.

ராசியான படம்: பொன்னியின் செல்வன்
நீங்க கேட்க வேண்டிய பாடல்: ஆலுமா டோலுமா