Published:Updated:

அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!

அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!
பிரீமியம் ஸ்டோரி
அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!

`இங்கு காரண காரியமின்றி, எதுவும் நடப்பதில்லை அண்ணே’ன்னு சொல்லி, பயணத்தைத் தொடங்குறான்.

அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!

`இங்கு காரண காரியமின்றி, எதுவும் நடப்பதில்லை அண்ணே’ன்னு சொல்லி, பயணத்தைத் தொடங்குறான்.

Published:Updated:
அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!
பிரீமியம் ஸ்டோரி
அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!
சீமான் சொல்லும் பயணக்கதைகள் இப்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம். அவர் இலங்கை சென்று ஆமைக்கறியும், கறி இட்லியும் தின்ற கதை உலகமே அறியும். ஆனால், உலகின் தென் துருவத்துக்கு அவர் சென்று வந்த கதை தெரியுமா? தலையைச் சொறியாதீர்கள், இது கற்பனைக் கதைதான். அதை அவர் வாய்ஸ் ஓவரிலேயே கேட்போம்.

அண்டார்ட்டிக்கா பயணம், ஒரு ஆங்கிலப் படத்துக்கு நிகரான திகிலும் திருப்பங்களும் நிறைஞ்ச சாகசப் பயணம். அதைப் பற்றி நினைச்சாலே, ஹால்ஸ் மிட்டாய் சாப்பிட்டு தண்ணி குடிச்சதுபோல சில்லுனு இருக்கு. பல நாள்களுக்கு முன்ன, என் தம்பி ஒருத்தன் கைப்பேசியில் அழைச்சுப் பேசினான். `அண்ணே, இலவசமா இருந்தா கன்னியாகுமரி கடல் பக்கட்டு வாங்க, நான் உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிப்போறேன்’னு சொன்னேன். ‘நீ இப்படியே தப்பு தப்பா தமிழ் பேசிட்டு இரு. ஒருநாள் காதைக்கடிச்சுக் கறிக்குழம்பு வைக்கிறேன்’னு கோவத்துல திட்டி அழைப்பைத் துண்டிச் சுட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுபடியும், அதே எண்ல இருந்து அழைப்பு வருது. எடுத்து காதுல வெச்சா ஒரே அழுகை. ‘அதான் என்னைக் கண்டிச்சுட்டீங்களே, அப்புறம் எதுக்கு துண்டிச்சீங்க’ன்னு துடிக்கிறான். `சரி, அழாதேடா. உனகென்னடா பிரச்னை, உனக்கென்ன பிரச்னை’ன்னு கேட்குறேன். `நீங்க, கன்னியாகுமரி கடல் பக்கட்டு வாங்க, நான் சொல்றேன்’னு சொல்றான். `கடலுக்குள்ளே என்ன நண்டு வறுத்துத் திங்கப்போறோமா’ன்னு நான் நகைச்சுவையா கேட்க, சிரிக்கத் தொடங்குறான். `நான் வரேன்டா’ன்னு சொல்லிட்டுக் கிளம்புறேன். கொஞ்சம் தாமதமாகிடுது. அன்றைய இரவு குமரிக்கடலை அடையுறேன்.

அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!

கும்மிருட்டு. ஆந்தையே கண் தெரியாமக் கவுந்து விழுந்துடும். நாம ஒரு ஜிம் பாடி, கராத்தே தெரிஞ்ச ஆளுங்கிறதாலே கண் கொஞ்சம் தெரியுது. கடல்ல ஒரு கட்டுமரம், கட்டுமரத்துல நம்ம கட்சியின் கொடி. நம்ம பயதான். `டேய், கட்டுமரத்தை வலப்பக்கம் ஒடிச்சு வாடா’ன்னு கத்துறேன். என் குரல் ஒலியை, கலங்கரை விளக்கத்தின் ஒளிபோல நினைச்சுக்கிட்டு, ஒடிச்சு வந்துட்டான். `ஆயிரமாயிரம் யானைகளைக் கொண்டுபோகக் கப்பல் கட்டின நம் முப்பாட்டாய்ங்க, இந்தக் கட்டுமரத்தைப் பார்த்தா சிரிச்சுடுவாய்ங்களே தம்பி. புவாஹா’ன்னு சிரிக்குறேன். `இங்கு காரண காரியமின்றி, எதுவும் நடப்பதில்லை அண்ணே’ன்னு சொல்லி, பயணத்தைத் தொடங்குறான்.

திடீர்னு நாலைந்து படகுகள் எங்களைச் சூழ்ந்துடுச்சு. எல்லாம் கடற்கொள்ளையர்கள். `இங்கே பாரு, நானே ஒரு வெங்கம்பய. எங்கிட்டே காசில்லே’ன்னு நம்ம வடிவேலு அண்ணன் மாதிரி பாக்கெட்டை இழுத்துக் காமிச்சேன். அவனுங்களுக்கு எங்க மேல பரிதாபமே வந்துடுச்சு. `சல்லிக்காசு இல்லாம, எப்படி’ன்ற மாதிரி கேட்டாய்ங்க. `என் ஊர் அப்படி. அங்கே இருக்கிற அரசியல்வாதிங்க அடிக்குற கொள்ளையில ஆளுக்குப் பாதிப் பங்கு. எங்களுக்கு எப்பவுமே சங்கு’ன்னு சொன்னேன். வருத்தப்பட்டுப் போயி, ஒரு சங்கை என் கையில கொடுத்து `பத்திரமா போயிட்டு வாங்க’ன்னு வழியனுப்பி வெச்சுட்டாய்ங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஏன்டா பயணம் பண்ணக் கட்டுமரம்லாம் கட்டுனியே, கட்டுச்சோறு கட்டுனியா?’ன்னு கேட்டேன். இங்கேதான் ஒரு விஷயத்தை விளங்கிக்கணும். தம்பி, நம்ம பய. `நீங்க பசிதாங்க மாட்டீங்கன்னு தெரியும்ணே. அதான் கட்டுச்சோறு தயாரா எடுத்துட்டு வந்தேன்’னு சொல்லி, தூக்குவாளியை எடுத்து நீட்டினான். `அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர்டா, அண்ணனுக்கு நீயிடா’ன்னு நான் சொல்ல, தம்பிக்கு பயங்கர சந்தோஷம். எனக்குக் கொஞ்சம் புளியோதரையைத் தட்டுல போட்டுக்கொடுத்து, நோட் பேனாவோட என் பிடனிக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தான். `என்னடா தம்பி பண்ணுற’ன்னு கேட்டேன். `நீங்க என்னென்ன சாப்பிடுறீங்கன்னு லிஸ்ட் எடுக்கப்போறேன்’னு சொன்னான்.

`ஏன்டா, எடுத்துட்டு வந்ததே ஒரு வாளி புளிச்சோறு மட்டும்தான். அதுல என்னத்த லிஸ்ட் எடுக்கப்போற’ன்னு அவன் பிடனியைச் சேர்த்து நாலு போடு போட்டு உட்கார வெச்சேன். நாங்களும் சாப்பிட்டு, ஆறு ஓங்கிலுக்கும் ஒவ்வொரு வாய் ஊட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். நான் பொறுமையிழந்து, `அடேய், என்னை எங்கே நீ கூட்டிப்போற’ன்னு பாட்டாவே பாடிட்டேன். `பனிமலை தெரியுது பாருங்க, அங்கேதான்’னு சொன்னான். `அந்தா அதுக்கா’ன்னுதான் கேட்டேன். என்ன நினைச்சானோ, அவன் கண்ணுல தாரைதாரையா கண்ணீர் கொட்டுது. `இப்போ என்னடா உனக்குப் பிரச்னை’ன்னு கேட்டேன்.

`தாக்கு-ன்ற வார்த்தைதான் `அட்டாக்’னு மாறின மாதிரி, அந்தா அதுக்கா-ன்ற வார்த்தைதான் `அண்டார்ட்டிக்கா’ன்னு மாறினதை எவ்வளவு எளிமையா எடுத்துச் சொல்லிட்டீங்க’ன்னு ஒரே அழுவாச்சி. ஒருவழியா, அண்டார்ட்டிக்கா நிலத்தை அடைஞ்சு காலடி எடுத்து வைக்கிறோம். `அண்ணே பார்த்தீங்களா, நீங்க வர்றது தெரிஞ்சு இயற்கையே வெள்ளிக் கம்பளம் விரிச்சு வரவேற்குது. பனிச்சாரலைப் பன்னீராத் தெளிக்குது’ன்னு சொன்னான். புவ்வாஹா...! அப்படியே இரண்டுபேரும், இந்திய அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல், சினிமான்னு பேசிட்டுப் போறோம். திடீர்னு பசிக்க ஆரம்பிக்குது.

`பென்குயின் அடிச்சுத் தின்றலாமா’ன்னு தம்பி கேட்குறான். `வாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பில்ல. அது தவறு. ஆண்குயின் ஏதாவது கண்ணுல தட்டுப்பட்டுச்சுன்னா சொல்லு அடிச்சுடுவோம்’னு சொல்லிட்டு நடக்கத் தொடங்குறோம். வழியில் ஒரு பனிக்கரடி சுருண்டு படுத்துக்கிடக்கு. அண்டார்ட்டிக்கால பனிக்கரடியே கிடையாதுன்னு சொல்லுவான். எல்லாம் இலுமினாட்டியோட சதி. அந்தக் கரடி, குளிர்ல நடுங்கிட்டு இருக்க. `அட என்ன கழுத நீயி, ஒரு கரடியா இருந்துகிட்டு நடுங்கிட்டுத் திரியுற’ன்னு திட்டிட்டு ஒண்ணு பண்ணினேன். என் தம்பியைக் குனியச் சொல்லி, அவன் தலைமுடியைப் பிடுங்கி அதுக்கு ஸ்வெட்டர் நூற்றுப் போர்த்திவிட்டேன்.

இந்த சேவை செய்யுற நேரத்துல, உணவு தேடுறதை மறந்துட்டோம். நாமெல்லாம் காலைல ஒரு பிரச்னை. அது காலை உணவு. மதியம் ஒரு பிரச்னை, அது மதிய உணவு. இரவு ஒரு பிரச்னை, அது இரவு உணவுன்னு வாழ்ந்துகிட்டு இருந்த ஆள். ஆனால், இந்தப் பசி நம்மைக் கண்ணைக் கட்டிடுச்சு. சுத்தி வெறும் பனிக்கட்டிதான். அப்போதான் ஒரு யோசனை வந்தது. `டேய், அந்தக் கரடியைப் பிடிச்சுட்டு வாடா’ன்னு சொல்லி, அந்தக் கரடிகிட்டே பால் கறந்து, பனிக்கட்டியோட குழப்பி ஐஸ் க்ரீம் தயார் பண்ணி சாப்பிட்டோம்.

இன்னும் சில மைல்கள் நடந்துபோறோம். பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் அமர்ந்திருக்காங்க. அதுல ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி, நேரா என்னைப் பார்த்து வந்து, `யூ சீமான்?’ன்னார். நான், `ஆமாம்’னேன். அவ்வளவுதான் தாமதம், என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டார். `ஜெர்மனியில் ஒரு உணவகத்துல உங்கள் உரையைத் தொடர்ந்து ஒளிபரப்புவாங்க. அதைப் பார்த்து, இப்படியொரு அரசியல் தலைவரா’ன்னு நான் மிரண்டு போயிருக்கேன்’னு சொன்னார்.

அண்டார்ட்டிக்காவில் அண்ணன் சீமான்!

ஏன் அண்டார்ட்டிக்காவுக்கு வந்துருக் கீங்கன்னு அவர் கேட்டார். அப்போதான், நம்ம தம்பி வாயவே திறக்குறான். `இங்கே கட்சியோட கிளை ஒண்ணு திறக்குறோம். அதான் அண்ணனும் நானும் வந்திருக்கோம்’னு. எல்லாம் தயார் பண்ணிட்டுதான் என்னைக் கூப்பிட வந்திருக்கான். அந்த ஜெர்மானியரும், `கண்டிப்பா திறக்கணும். நான் உங்களுக்குத்தான் ஓட்டு போடுவேன்’னு சொல்றார். எனக்கு அது சரிப்பட்டு வரலை, `இங்கே பாரு தம்பி, இந்த மண்ணில் வாழுகிற உரிமை உனக்கு, எனக்கு, யாருக்கு வேணாலும் இருக்கு. ஆனால், ஆளுகிற உரிமை பென்குயின்களுக்கு மட்டும்தான் இருக்கு’ன்னு சொல்லிட்டேன்.

பிறகு, அந்த விஞ்ஞானிகிட்டே, `எதுக்கு இங்கே வந்திருக்கீங்க’ன்னு கேட்டேன். அண்டார்ட்டிக்காவின் பனிமலைகள் உருகி, கடல்மட்டம் அதிகமாகுது. அதைத் தடுக்க என்ன பண்ணலாம்னு ஆராய்ச்சி பண்ண வந்ததா சொன்னார். `எந்த இடத்துல பனி உருகி, கடலோடு கலக்குதுன்னு கேட்டேன்’. `இதோ இங்கேதான்’னு ஒரு இடத்தைக் காண்பிச்சாங்க. ஒண்ணும் பண்ணலை, கட்டுமரத்தைக் கட்டைகளா கழட்டி, உருகுற இடத்துல வெச்சு இறுக்கிவிட்டேன். இனி உருகுற பனி கடல்ல கலக்காது, கடல் மட்டமும் அதிகமாகாதுன்னு சொன்னேன். எல்லாப் பயலும் கைதட்டினான். `எப்படிணே உங்களால மட்டும்’னு நம்ம தம்பி கேட்கும்போது சொன்னேன், `இங்கு காரணம் காரியமின்றி எதுவும் நடப்பதில்லை தம்பி...’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism