Published:Updated:

பௌர்ணமிக்குத் தமிழகம் வருவாரா நித்தியானந்தா?! காத்துவாக்குல வந்த அப்டேட்டும், உற்சாகமான பக்தர்களும்!

நித்தியானந்தா

Humour/Satire: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் சாமியார் - நித்தி இந்தியா ரிட்டர்ன்ஸ் எப்போது? இதுவரை நடந்த நிகழ்வுகளின் ஒரு ஜாலி ரவுண்டப் மக்களே!

பௌர்ணமிக்குத் தமிழகம் வருவாரா நித்தியானந்தா?! காத்துவாக்குல வந்த அப்டேட்டும், உற்சாகமான பக்தர்களும்!

Humour/Satire: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் சாமியார் - நித்தி இந்தியா ரிட்டர்ன்ஸ் எப்போது? இதுவரை நடந்த நிகழ்வுகளின் ஒரு ஜாலி ரவுண்டப் மக்களே!

Published:Updated:
நித்தியானந்தா
குடும்பங்கள் கொண்டாடும் சினிமா மாதிரி, 90 கிட்ஸ் கொண்டாடும் ஒரு சாமியார்னா அது நித்தியானந்தாதான். தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமில்லாம நேத்து ஐபிஎல் டீம் ஆரம்பிச்ச குஜராத் மாநில போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும், அன்ரூல்ட் நோட் போட்டு எழுதி வைக்கிற அளவுக்கு வழக்குகளோட எண்ணிக்கை அதிகமானதால, 2019ல வெளிநாட்டுக்குத் தப்பி போய்ட்டார்.

வெளிநாடுக்கு தப்பிச்சு ஓடுனவரு, 'மரியான்' தனுஷ் மாதிரி தத்தளிச்சுட்டு இருப்பாருனு பாத்தா, ஒரு தீவையே விலைக்கு வாங்கி, 'என்னவேணா நடக்கட்டும் நா சந்தோஷமா இருப்பேன்'னு 'ஜகமே தந்திரம்' தனுஷா மாறி ஜகஜகனு மின்னிட்டிருந்தார். மொத்த கைலாசா நாடுமே, 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... லாலலா லோலலோ'னு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், பேங்காக் சூட்டிங் போன வெங்கட் பிரபு டீம் மாதிரி இருக்கும். 'A Venkat Prabhu's கைலாசம்'னு படமே எடுக்கலாம்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனாலும், தன்னோட பக்தி சொற்பொழிவுகளையும், பத்தாம் பன்னிரண்டாம் பொது தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான Physics, Chemistry க்ளாஸ்களையும் ஆன் லைன்லயே இலவசமா நடத்திட்டு வந்தார் நித்தி.

இந்நிலையிலதான், நித்தியானந்தாவுக்கு உடம்பு சரியில்லைனு தகவல்கள் வந்துச்சு. இதைப் பத்தி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்ட நித்தி, "பிரபஞ்ச சக்தியோடு என் ஆத்மாவைக் கலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்றே மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். ஆனால், நான் சாகவில்லை"னு புரியிற மாதிரி கொடுத்த விளக்கத்தக் கேட்டு, 'கமல்ஹாசன் சார் ஒரிஜினல் ஐடில வாங்க'னு சிலர் கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை"ன்னு நித்தி கொடுத்த விளக்கத்த கேட்டு, "புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப... புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப. அது தப்பு இல்ல பயப்படத் தேவை இல்ல, உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள"ன்னு ஆட்டோகிராப் சேரன் மாதிரி 'வந்தல்லோ வந்தல்லோ'ன்னு எசப்பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாங்க இணையவாசிகள்.

ஆனா, 'உடல் நலக்குறைவு' என்ற செய்திய கேட்டு அரண்டுபோன அவரோட பக்தர்கள், திருவண்ணாமலைல தீபம் ஏத்தி வழிபாடுகள் நடத்துனாங்க. நித்தியும் தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல அப்பப்போ போட்டோஸ், உடல் நிலைக் குறித்த அப்டேட்டுகள்ன்னு போட்டு, 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'னு 'பேட்ட' ரஜினி வாய்ஸை டிக் டாக் பண்ணாத குறையா பெர்பாமன்ஸ் பண்ணிட்டிருந்தார்.
நித்தியானந்தா
நித்தியானந்தா

நண்டு ஆம்ப்லேட்ல மேற்கொண்டு நாலு கரண்டி பெப்பர தூவுனாப்ல, "கரீபியத் தீவு ஒன்றின் வங்கியில் நித்தியானந்தா சேமித்துவைத்திருந்த தங்கம், பணமெல்லாம் கொள்ளை போய்விட்டன. பணத்தைப் பறிகொடுத்த பரிதவிப்பில்தான், உடல்சோர்ந்துவிட்டார் நித்தியானந்தா"ன்னு வந்துச்சு ஒரு காரச்சார கமகம தகவல்.

ஒருவேளை Money Heistடோட அடுத்த சீசன் கதையா இது இருக்குமோனு, 'ஆற்காடு மாவட்ட டோக்கியோ பண்பாட்டு பாறைகள்', 'Professor கொள்ளைத் தடுப்பு மாமன்றம்' போன்ற அமைப்புகளோட, நித்தி பக்தர்கள் சிலரும் சேர்ந்து நெட்ப்ளிக்ஸ் அலுவலகத்தை முற்றுகையிடப் போறதா வதந்திகள் வந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நித்தி ரிட்டர்ன்ஸ்

இந்தத் தகராறுகள் மத்திலதான் நித்தி, இந்தியாவுல தரையிறங்கப் போறதா தகவல்கள் வந்துருக்கு. இது சம்பந்தமா நித்தி தரப்புக்கிட்ட பேசுனப்ப, "அமைதியாக ஆன்மிகப் பணி செய்ய விரும்புகிறோம். இந்தியாவுக்குள் நித்தியானந்தா நுழைவதற்கு அனுமதி தாருங்களென மத்திய பாஜகவிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் நித்தியானந்தா தமிழ்நாடு திரும்புவார்"ன்னு நம்பிக்கைத் தெரிவிச்சுருக்காங்க.

 நித்தியானந்தா
நித்தியானந்தா

"இந்த பணத்த எல்லாம் மீண்டும் திரட்டுறதுக்குதான் உடம்பு முடியலனு இந்த நாடகம் போட்டு, அனுதாபம் பெற பாக்குறார்"ன்னு நித்தியோட எதிர் தரப்பு குற்றச்சாட்டுகள் முன் வச்சது. அதுமட்டுமில்ல, "நித்திக்கு உடல்நிலை சரியில்லை. அதேநேரம் வழக்குகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவர் சரண்டராகி, உடனே பெயிலில் விடுவிப்பதற்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என நீதிமன்றங்களை நாடவிருக்கிறார்கள். நீதிமன்றங்களை நம்ப வைப்பதற்காகத்தான், 'நித்திக்கு உடல்நிலை சரியில்லை; கோயிலில் விளக்கேற்றுங்கள்' என அவரது ஆதரவாளர்கள் மூலமாகத் தகவல் பரப்பப்படுகிறது"ன்னும் மத்திய கைலாஷ்ல ஆரம்பிச்சு, நித்தியோட கைலாசா வரைக்கும் குற்றச்சாட்டுகள் எதிர் தரப்பு அடுக்குச்சு.

"ஜூன் 14-ம் தேதி பெளர்ணமி வரவிருக்கிறது. அதற்குள்ளாக திருவண்ணாமலைக்கு நித்தியானந்தா வந்து சேர்வார்"ன்னு சொல்ற நித்தி தரப்பு, 'தூதுவன் வருவான் மாரி பெய்யும்'ன்னு 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்திபன் மோட்ல, ஒத்த செருப்போட ஒத்த கால்ல காத்துக்கிட்டிருக்கு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism