Published:Updated:

அசால்ட் குரு

கார்க்கிபவா
கார்த்திகேயன் மேடி

இதுவும் கடந்து போகும்.

பிரீமியம் ஸ்டோரி

ந்த குரு கொஞ்சம் நக்கல் பிடித்தவர். ஆனால் கொஞ்சம் வில்லங்கமானவர்.அவரின் சீடர்கள் அதைவிட நக்கல் ஆசாமிகள். அந்த குருவுக்கும் சீடர்களுக்குமான உரையாடலில் 1000 அர்த்தம் பொதிந்திருக்கும். வாசகர்களாகிய நீங்கள்தான் ஆழ்ந்து வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

குரு ஒரு நாள் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். வழியில் சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். குரு நின்று ஓய்வெடுக்கும் சில நொடிகளில் சீடர்கள் கேள்வி கேட்பது வழக்கம். வழியில், சீடன் ஒருவன் ``குருவே, எனக்குப் பசிப்பதில்லை. உறக்கமும் வரவில்லை. அதனால் தியானமும் செய்ய முடிவதில்லை’’ என்றான். குரு அவனிடம் ``இதுவும் கடந்து போகும்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

அசால்ட் குரு

அடுத்த ஸ்டாப்பில், இன்னொரு சீடன் ``குருவே, இப்போது என்னால் நன்றாகச் சாப்பிட முடிகிறது. உறங்க முடிகிறது. தியானமும் செய்ய முடிகிறது’’ என்றான். குரு அவனிடமும் ``இதுவும் கடந்து போகும்’’ எனச் சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

அடுத்த ஸ்டாப்பில், இரண்டு சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். குரு நடப்பதை மெதுவாக்கினார். அவர்கள் அருகில் சென்ற போது முதல் சீடன் குருவைக் காட்டி இன்னொரு சீடனிடம் சொன்னான்,

``இதுவும் கடந்து போகும்.’’

அசால்ட் குரு

குரு அவரே தேர்வு செய்த நான்கு இளைஞர்களுடன் ஒரு நாள் முழுக்க மெளன விரதம் இருக்க முடிவெடுத்தார். அதுவும் ஒருவித பயிற்சி என்பதால் தேர்வான இளைஞர்கள் பரவசமானார்கள். குருவுக்கு முன் நால்வரும் பேசவே கூடாது என முடிவெடுத்தார்கள். அடுத்த காலையே பயிற்சி தொடங்கியது. சின்ன விளக்கு ஒன்றை எரியவிட்டு, நால்வரும் குருவுக்கு முன் அமர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விளக்கு அணையத் தொடங்கியது. இறுதியில் ஒருவன் “அந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றுங்கள்” என்றான். இரண்டாமவன், ``நீ பேசக்கூடாது. மறந்துவிட்டாயா?” என்றான். மூன்றாமாவன், “முட்டாள்களே. ஏன் பேசுகிறீர்கள்” என்றான். நாலாமவன், “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றான்.

தலையிலடித்துக்கொண்டு குரு சொன்னார், ``உங்களை வைத்துக் கொண்டு சும்மாகூட இருக்க முடியாது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசால்ட் குரு

ரண்டு சீடர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையில் ஒரு கொடி இருந்தது. அதைக் காற்றில் அசைத்து அசைத்து விளையாடி மகிழ்ந்தனர். அப்போது ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்தது. “காற்றுதானே அசைகிறது” என்றான் . “இல்லை இல்லை... கொடிதான்” என்றான் மற்றொருவன். அவ்வழியே அப்போது குரு கடந்தார். அவரிடம் சென்ற சிறுவர்கள் அதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு குரு “காற்றும் அசையவில்லை. கொடியும் அசையவில்லை. அசைவது உங்கள் மனம் தான்” என்றார். சீடர்கள் விளையாடுவது நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து கொண்டார்கள். குரு அவர்களிடம் " ஏன் விளையாட்டை நிறுத்துவிட்டீர்கள்" என்றார்.

அதற்குச் சீடன் சொன்னான். " நாங்கள் விளையாடி கொண்டுதானிருக்கிறோம். நிறுத்தவில்லை. உங்கள் மனம் தான் நிறுத்திவிட்டது"

குரு ஞானமடைந்தார்.

அசால்ட் குரு

ரு நாள் வகுப்பில்...

"குருவே பூமி சுத்துதுன்னு சொல்றாங்க, ஆனா அதுபாட்டுக்கு நிக்கற மாதிரிதான தெரியுது, மத்ததுதான் சுத்தறாப்ல இருக்கு. இதெப்புடி?"

"ரயிலில் பயணித்திருக்கிறாயா?"

"செய்திருக்கிறேன் குருவே."

"ஜன்னல் சீட்டு?"

"அதெல்லாம் அடம்புடிச்சு வாங்கிடுவேன் குருவே."

"ரயில் வளைவுகளில் செல்லும்போது எட்டிப்பார்த்திருக்கிறாயா?"

"அட என்ன இப்பிடிப் கேட்டுட்டீங்க, பேவரிட் காட்சி அது."

"அப்போது உனக்கு முன்னான பெட்டியும் வளைந்திருக்கும், பின் வரும் பெட்டியும் வளைந்திருக்கும். ஆனால் நீ செல்லும் பெட்டி மட்டும் நேராகவே இருக்கும் கவனித்திருக்கிறாயா?"

"ஐ! ஆம் குருவே."

"அது ஏனென்று யோசி, இது விளங்கத் தொடங்கும்."

சீடர்கள் யோசனையிலும் குரு தூக்கத்திலும் மூழ்கினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு