Published:Updated:

சித்திரமும் நாப்பழக்கம்; செந்தமிழும் கைப்பழக்கம்! - `பேச்சிமுத்து' பாணி நீதிக்கதை

ஓ.பி.எஸ் கொளுத்திப்போட்ட 'பேச்சிமுத்து நீதிக்கதை'தானே இப்போ தமிழக பொலிடிக்கல் பொடிமாஸ் டிரெண்ட்! இன்னும் சில அரசியல்வாதிகளுக்கு நாம நீதிக்கதைகளை அவங்க சார்பா எழுதி வைப்போம். யாரு அவங்கன்னு கதையைப் படிச்சிட்டுக் கண்டுபிடிங்க பார்ப்போம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு ஊருல அய்யாத்துரை என்ற சிறுவன் தன் குடும்பத்தோடு வசித்து வந்தான். ரொம்ப நல்ல குணம் கொண்ட அவனுக்கு ஒரேயொரு குறை. பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்ருவான். இதுக்காகவே ஸ்கூலுக்குக் கிளம்புறப்போ, இன்னிக்கு என்ன பேசணுமோ அதை பேப்பர்ல எழுதி சட்டைப்பாக்கெட்ல வெச்சுட்டுத்தான் கிளம்புவான். ஒருநாள் அவங்க அப்பா சட்டைப் பாக்கெட்ல இருந்த லாண்டரி கணக்கை துண்டுச்சீட்டுக்குப் பதிலா தெரியாம எடுத்துட்டு வந்துட்டான். வாத்தியார் கேட்ட ஒரு கேள்விக்கு,

"ஆக... முழுக்கை சட்டை 6, அரைக்கை சட்டை 5, காஞ்சிபுரம் சேலை 3, பருத்தி சேலை 8!" என பதில் சொல்லி ஒரே அசிங்கமாகப் போய்விட்டதாம்.

மகனின் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் குணத்தை நினைத்து பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த அவன் தந்தை ரொம்பவே கவலைப்பட்டாராம். மகனின் இந்தக்குறையைப் போக்க ஒரு யோசனை தோன்றியதாம்... உடனே அய்யாத்துரையை அருகில் அழைத்து, குட்டிக்குட்டியாய் சொலவடைகளும் பழமொழிகளும் சொல்லிக் கொடுத்தாராம்.

"டேய் மகனே... எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் இந்தச் சொலவடைகளைச் சொல்லி எதிராளிகளைக் குழப்பி விடு..! அதாவது கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கணும்!" என்றாராம்.

உடனே ஏதோ புரிந்தவனாய் மனசுக்குள், "ஓஹோ நழுவுற மீனுல கழுவுற மீனா இருக்கணுமா... இருந்துட்டாப் போச்சு!" என நினைத்தபடி அப்பா சொல்லிக் கொடுத்த பழமொழிகளை மனப்பாடம் செய்தபடி மறுநாள் பள்ளிக்குப் போனான் அய்யாத்துரை. அன்று மாவட்டக் கல்வி அலுவலர் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தார். அவனைப் பார்த்து,

"ஆத்திசூடி சொல்லப்பா!" என்று கேட்டதும்,

"சீனிச்சக்கர சித்தப்பா... ஏட்டில எழுதி நக்கப்பா!" என்றானாம். அய்யாத்துரையின் இந்தப் புதிய ஆத்திசூடியைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்ட டி.ஈ.ஓ, உடனடியாக அவனை கிளாஸ் லீடராக புரமோட் செய்துவிட்டுக் கிளம்பினாராம்.

அய்யாத்துரை அன்றிலிருந்து பூனைமேல் மதிலாக இல்லாமல், யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னேவாக வாழ ஆரம்பித்துவிட்டானாம்.

அப்படிச் சொலவடையாகவே மாறிய அய்யாத்துரை யார் தெரியுமா? முன்பு அப்பா படித்த ஸ்கூலில் இன்று ஹெட் மாஸ்டர். நான் தான் உட்கார்வேன் என அடம்பிடித்து 'அன்அப்போஸ்ட்' ஆக அந்த ஹெட்மாஸ்டர் சீட்டில் உட்கார்ந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

நீதிக்கதை!
நீதிக்கதை!
*நீதி: சித்திரமும் நாப்பழக்கம்; செந்தமிழும் கைப்பழக்கம்!*

இது ஒரு சாம்பிள் நீதிக்கதை.

ஓ.பி.எஸ் கொளுத்திப்போட்ட 'பேச்சிமுத்து நீதிக்கதை'தானே இப்போ தமிழக பொலிடிக்கல் பொடிமாஸ் டிரெண்ட்! இன்னும் சில அரசியல்வாதிகளுக்கு நாம நீதிக்கதைகளை அவங்க சார்பா எழுதி வைப்போம். யாரு அவங்கன்னு கதையைப் படிச்சிட்டுக் கண்டுபிடிங்க பார்ப்போம்!

தவழ்ந்தது பிழைக்கும்!
கேட்குறவன் கேனையனா இருந்தா கேட்பரீஸ் சாக்லேட் கசக்குதுன்னு சொன்னா நம்புறவன் துப்பிடுவானாம்!
பயந்தவனுக்கு பார்லிமென்ட்டும் பஞ்சுமெத்தை!
ரீல் விடலாம். ஆனா, ஏக்கர் கணக்குல விடக்கூடாது!

இந்த நான்கு நீதிக்கதைகளையும் ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > அவங்கல்லாம் அப்பவே அப்படி! https://bit.ly/2SyBEPC

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு