சினிமா
Published:Updated:

ஒரே நாடு... பல காமெடி!

ஒரே நாடு... பல காமெடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே நாடு... பல காமெடி!

என்னெல்லாம் கைலாசாவுக்காக நித்யானந்தா உருவாக்கலாம்? சின்னதா ஒரு கற்பனை..!

கைலாசா நாட்டின் அதிபராகிவிட்டார் நித்யானந்தா. கைலாசாவைத் தனி நாடாக அறிவித்து, தனிக்கொடி, தனி ரிசர்வ் வங்கி, தனி கரன்சி என்றெல்லாம் பட்டையைக் கிளப்புகிறார். இன்னும் என்னவெல்லாம் கைலாசாவுக்காக அவர் உருவாக்கலாம்? சின்னதா ஒரு கற்பனை..!

ஒரே நாடு... பல காமெடி!

கைலாசா தேசிய கீதம்

“கலாசா கைலாசா

ஜெய் ஜெய் கைலாசா

ஏலேலே ஐலசா

நீங்க இப்ப டம்மி பீஸா..!

உலகம் இப்ப எங்க கையில

கலகம் செய்வோம் எங்க தீவுல!

ஓடி ஒளியல... ஆட்டம் முடியல...

காசு பணம் துட்டு... மணி மணி மணி

ஏய்... ரகிட ரகிட ரகிட ரகிட ரகிட

ஓய்... ரகிட ரகிட ரகிட ரகிட ரகிட

பிஸ்தா சுமாகிர சோ மாரி ஜமாகிராயா...

டமாலே... ஹேய்..!

ஹேய் டமா டமா டமா டமா டமாலே!!!

ஹேய் டமா டனக்கு னக்கன டேடே!

டஸ்கி னக்கன டேடே!

பிஸ்தா டன்ட னக்கா டனக்கு னக்கா டே...டே...டே...டே!”

ஒரே நாடு... பல காமெடி!

தேசியச் சின்னம்

நித்தியானந்தாவின் உருவம், கீழே ‘வாயே வெல்லும்!’

தேசியப் பழம்

அன்னாசிப் பழம்

(விதை, இந்தப் பழம் போட்டதுதான்!)

தேசிய மரம்

முருங்கை மரம்

(பலவித மருத்துவ குணங்களையும், வேதாளம் அடிக்கடி ஓடி ஏறக்கூடியதுமான ஒரே மரம். தேசியக் காய்கறி சொல்லவா வேண்டும், முருங்கைக்காய்தான்!)

தேசிய விலங்கு

‘இம்சை அரசன்’ கரடி ( ரீசன் வேணுமா என்ன?)

தேசியப் பறவை

கொக்கு (பற பற)

தேசிய விளையாட்டு

மான் கராத்தே (எஸ்கேப் ஆக எப்போதும் பயன்படும்)

ஒரே நாடு... பல காமெடி!

தேசிய ஸ்லோகன்

கேமராவில் காண்பதும் பொய்!

தேசியப் பூ

ஒரு முழம் மல்லிகைப் பூ

(மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ)

தேசியப் பழமொழி

‘நண்டு கொழுத்தால் வளை தங்காது.’

தேசிய பானம்

மஞ்சள் கலந்த பால் (உடலுக்கு நல்லது)

தேசிய சேனல்

நித்யா டிவி (பேர் சொல்லணும்ல... அதானே டிரெண்டு?)

தேசிய விளையாட்டுகள்

ஐஸ் பாய், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி

(பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாதுல்ல)

தேசிய ஏர்லைன்ஸ்

ஏர் கைலாசா

தேசிய உணவு

அல்வா

தேசிய நடனம்

கும்தலக்கா குண்டலினி

தேசியத் தலைவர்

சுவாமி நித்யானந்தா (ஒரே தலைவன்)

உப தேசியத் தலைவி

மா நித்யானந்திதை

(ஆட்கள் மாறுவார்கள். பெண்கள் கோட்டா)

தேசிய கரன்சி: கைலாஷ் கரன்சி

தேசியத் தொழில்: யூடியூப் வீடியோ போடுதல்