நித்தியின் சொந்த நாடு அறிவிப்பு வந்ததாலும் வந்தது, `எக்ஸ்க்யூஸ் மீ... கைலாசா குடிமகனாக என்ன பண்ணணும்' என்று வழி தேடி விழி பிதுங்கி நிற்கின்றனர் சிட்டிசன்கள். நித்தியின் அந்தக் கனவு கைலாசா நிறைவேறிவிட்டால் தன் நாட்டில் என்னவெல்லாம் செய்வார் எனக் குறுக்கும் மறுக்குமாக நடந்து யோசித்ததில்...
அதிசயம், அற்புதம்:
அடிக்கடித் தன்னை சிவனின் அவதாரமாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் நித்தி, தன் சொந்த நாட்டிலும் கடவுளாகத்தான் களம் காண்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை. என்றாலும், வெளியிலிருந்து பார்ப்பவர்கள், அவரை மன்னராகத்தான் பார்ப்பார்களென்பது மண்ணில் புரண்டு அழக்கூடிய விஷயம்... ப்ச்! `ஐன்ஸ்டீனும் அபிமன்யுவும் ஒண்ணு... இது அறியாதவங்க வாயில பன்னு...' என அறிவியிலையும் ஆன்மிகத்தையும் குழப்பியடித்துக் குருமா சமைத்துக்கொண்டிருக்கிறார் நித்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுமட்டுமா... அனிமல்ஸுக்கும் ஆல்ஃபெட் கற்றுத்தந்து அவற்றைப் பேச வைப்பேன், நான் தாமதமாகக் கண் விழித்தால் சூரியனையும் லேட்டாக உதிக்க வைப்பேன் (இதை நீங்கள் கூகுள்கூட செய்து பார்க்கலாம். போட்ருக்குப்பா... போட்ருக்கு..!) என ஓரகத்தி நாட்டிலேயே அடங்கப்பா... ஸாரி... `அடேங்கப்பா' போன்ற அதிசயங்களையும் பல வித்தைகளையும் தட்டியெறியும் நித்தி, தன் சொந்த நாட்டில் சும்மாவா இருப்பார்?
`கைலாசாவில் என் மூச்சுக் காற்று பட்டுதான் மலர் மலர்ந்தது, என் பாதம்பட்ட இடம் கடலாயிற்று, என் பார்வைபட்டுதான் காக்கா கறுப்பானது...' என்று சொன்னால் இல்லையென்றா சொல்வீர்கள்... இல்லை, இல்லையென்றுதான் சொல்லிவிட முடியுமா?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுடிமகன் ஐடி :

நித்தியின் பக்தாஸைப் பார்த்தாலே `லபக்'கென்றுப் பிடித்துவிடலாம். காவி உடை, கால்கிலோ ருத்ராட்சம், பளிச் திருநீறு, சிரித்த முகம்... எனத் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அப்படியிருக்கையில் `அடைமொழி வெச்சிக்கிட்டவன் என்னைக்கும் அழிஞ்சதில்லை' என்ற பழமொழியையும் நினைவில்கொண்டு, தங்களது பெயருக்கு முன்னோ, பின்னோ... `நித்தி பக்தி', `நித்தி சக்தி' என்று சேர்த்துக்கொள்ளலாம். `ஆத்தி... இது நம்ம லிஸ்டுலே இல்லையே' என்று நினைப்பவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று ஒரு ரூல்ஸையும் சூட்டோடு சூடாகப் போட்டுவிடலாம். இதுபோல பல வேடிக்கை, கேலிக்கைகளை செய்து நெய்பர் நாட்டினரைக் குதூகலப்படுத்தலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆன்லைன் அலப்பறைகள் :
வளர்ந்த சீனாவிலே இணைய பயன்பாட்டுக்கு ஏகப்பட்ட கட்டுகப்பாடுகள் இருக்கும் நிலையில், அவர் உருவாக்கப்போகும் கைசாலா தீவுக்கு `அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தேவை' என்று ஆன்லைனில் அட்வர்டெயிஸ்மென்ட் கொடுக்குமளவிற்கு நித்தியும், அவரது சக்திவாய்ந்த பக்தர்களும் இணைய டெக்னாலஜியில் கன்னாபின்னாவென அப்டேட்டாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமா... `நித்தமொரு செல்ஃபி, ஆளுக்கொரு பர்ஃபி' என வலம் வந்துகொண்டிருக்கும் நித்தியின் பக்தர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு டிக்டாக்கில் எதிர்வினையாற்றி எகிறி குதித்து வேடிக்கைகளுக்குத் தவம்கிடக்கின்றனர், நெட்டிசன்கள். இதற்காகவே `இணையம் இலவசம்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்து, `எனிவேர்... எனிடைம்... எனிதிங்...' என்ற கோட்பாடோடு எல்லோரையும் எனர்ஜியாக வைத்திருப்பார் நித்தி. 4-ஜி ஏற்கெனவே இருப்பதால் `நித்தி-ஜி' டெக்னாலஜியின் கண்டுபிடிப்புகளில் பக்தர்கள் இப்போதே இறங்குவது நல்லது.
காஸ்ட்யூம் கார்னர் :

சிவனின் அவதாரம் என ஒவ்வொரு முறையும் ஓயாமல் சொல்லும் நித்தி, அலங்காரப் பிரியராக இருப்பது பீஸ் இல்லாத பிரியாணியைப்போல முரணாக இருப்பதாக அண்ட சராச வெளியில் பேசிக்கொள்கிறார்கள். சாந்து நிற சாய குண்டாவில் முங்கியெழுந்ததுபோலத்தான் பெரும்பாலும் ஆடை அணிகிறார்கள் நித்தி பக்தீஸ். என்றாலும், அவர்கள் அணியும் நகைகளும், அலங்கார அணிகலன்களும் சற்று பொறாமைகொள்ளத்தான் வைக்கிறது. எனவே, இதற்குத் தனி கவனம் செலுத்தி, `காஸ்டியூம் கார்னர்' என்று ஒரு கடையைப் போட்டு ஆடை, அணிலன்களுக்கென்று பிரத்யேகப் பொருள்களை இறக்குமதி செய்து பக்தர்களைப் பரவசப்படுத்தலாம்.

சிஜி மேஜிக் :

பக்தர்களை அருள் பாலிக்க திருநீறு தூவியடிப்பது டைனோசர் காலத்திலே காலாவதியாகிவிட்டது. அதனால், தற்போது சில சிஜிக்கள் மூலம் மேஜிக் செய்து பக்தர்களை அசால்ட்டாக அடிபணிய வைத்துக்கொண்டிருக்கிறார் நித்தி. `நெருப்பாத்துல நீந்துறவன் இல்லடா, அந்த நெருப்பாறே நான்தான்டா', `பரமசிவன் கொடுக்குறான், ஆனந்தமா இருக்குறேன்' எனப் பதற வைக்கும் சில பன்ச்களைப் பேசி வந்தவர், இனி அதையெல்லாம் சிஜி மூலம் சிறப்பாகச் செய்து தன் நாட்டு பக்தர்களைக் குத்துப்பாட்டும் கும்மாளமுமாகக் குதூகலப்படுத்துவார் என நம்புவோமாக.