Published:Updated:

ஒத்தக்கடையை மாத்தி விட்டாச்சு, வேலூர்ல கோட்டை விட்டாச்சு, கே.கே.நகர்? ஸ்பெல்லிங் ஸ்மைலிக்கள்!

Koyampuththoor
Koyampuththoor

சில ஊர்களுக்கு இனிஷியல்கள் உண்டு. அதையும் ஆங்கிலப்படுத்தி அவர்களின் கடமை உணர்சியை நிரூபித்திருக்கிறார்கள். பாரத மிகு மின் நிறுவனம் என்றொரு ஏரியா. எங்கே, BAARATHA MIGU MIN NIRUVANAM என மாற்றியிருப்பார்களோ என பயந்துபோனோம்.

ஊர் பெயர்களை அதன் உச்சரிப்புப்படியே, ஆங்கிலத்தில் மாற்றி அமைப்பது பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டதில் இருந்து, ஊர் சண்டை உக்கிரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. `சில்லென்ற கோவை'யை எல்லாம் சில்லு சில்லாக உடைத்துக்கொன்டிருக்கிறார்கள். `இனமென பிரிந்தது போதும்' பாடலுக்கே சமாதானம் ஆகாத இந்தச் சண்டை, எங்கு போய் முடியுமோ என தமிழகமே குழப்பத்தில் இருக்கிறது.

தமிழக அரசு
தமிழக அரசு

"மக்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம், கொரோனா வைரஸை குழப்புவதற்கே இதயதெய்வம் அம்மா வழியில் வந்த எடப்பாடி அவர்களின் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது'' என ரத்தத்தின் ரத்தங்களும், "பெயர் மாத்துனா, போர்டு மாத்தணும். போர்டு மாட்டினா, காசு பார்க்கலாம்ன்ற எண்ணம்தான்'' என உடன்பிறப்புகளும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி மேலும் குழப்புகிறார்கள். இந்தக் குழப்பத்தோடு, ஆங்கிலப்படுத்தியதில் உள்ள குழப்பத்தையும் ஒரே மூச்சோடு பார்த்து மூட்டைக்கட்டி விடுவோம்... அதான் சரி!

வ.உ.சிதம்பரனார் நகர் என்பது, ஆங்கிலத்தில் V.O.C NAGAR என குறிப்பிடப்படுகிறது. அதை தமிழ்படி ஆங்கிலப்படுத்துகிறேன் என VA.OO.SI NAGAR என மாற்றி மிரளவைத்திருக்கிறார்கள். இந்த லாஜிக் படி பார்த்தால் 'கலைஞர் கருணாநிதி நகர்' எனும் K.K. NAGAR, ஆங்கிலத்தில் KA.KA. NAGAR என்றுதானே மாற்ற வேண்டும்? யெப்பா, நான் சரியாத்தானே பேசிட்டு இருக்கேன்!

Va.Oo.Si Nagar
Va.Oo.Si Nagar

சில ஊர்களுக்கு இனிஷியல்கள் உண்டு. அதையும் ஆங்கிலப்படுத்தி அவர்களின் கடமை உணர்சியை நிரூபித்திருக்கிறார்கள். வே, தே போன்ற இனிஷியல்களை Ve, The என மாற்றியிருப்பவர்கள், M, A என்றும் சில இனிஷியல்களை விட்டுவைத்திருக்கிறார்கள். ஏன் எனப் புரியவில்லை அதேபோல், பாரத மிகு மின் நிறுவனம் என்றொரு ஏரியா. எங்கே, BAARATHA MIGU MIN NIRUVANAM என மாற்றியிருப்பார்களோ என பயந்துபோனோம். நல்லவேளையாக, மொழிபெயர்ப்பே செய்துவிட்டார்கள்.

நிறைய ஊர்களின் பெயர்கள் `பாளையம்' என்கிற பதத்தோடு முடியும். அதை ஆங்கிலத்தில் எழுதுவதிலேயே அரசாங்கம் குண்டக்க மண்டக்க குழம்பியிருக்கிறது. பாளையம் என்பதை சில இடங்களில், PAALAYAM என்றும் சில இடங்களில், PALAYAM என்றும் எழுதி அறிக்கையில் பால்டாயில் தெளித்திருக்கிறார்கள். இதேபோல், பாப்பாக்குறிச்சி எனும் ஊரை ஆங்கிலத்தில் பப்பாக்குறிச்சி ஆக்கிவிட்டார்கள்.

Not that Meenatchipuram
Not that Meenatchipuram

யூனிகோட் சாஃப்ட்வேரில் தங்கிலீஷில் டைப் செய்யும் முறையைப் பயன்படுத்தித்தான் ஆங்கிலத்தில் படுத்தியிருக்கிறார்கள். மீனாட்சிபுரம் என்ற ஊர் MEENAKSHI PURAM என அழைக்கப்பட்டு, இப்போது MEENATCHI PURAM என மாற்றப்பட்டுள்ளது. நல்ல விஷயம்தானே! ஆனால், கிருஷ்ணாபுரம் என்ற ஊரை KIRUSHNAA PURAM என எழுதாமல் ஏன் KRISHNA PURAM என எழுதியிருக்கிறார்கள்... புரியவில்லை மக்களே!

கிருஷ்ணகிரி எனும் ஊரையே கிருட்டிணகிரி என்றுதான் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், KIRUTINAGIRI என்ற பெயரோ அறிக்கையில் இல்லவே இல்லை. அதை விடுங்கள், இப்போது கிருஷ்ணாபுரத்தை கிருட்டிணாபுரம் என மாற்றி, அதை KIRUTINAPURAM என்றுதானே எழுத வேண்டும். சரி அதுகூட வேண்டாம், KIRUSHNAPURAM என மாற்றுவதில் என்ன பிரச்னை?!

Veeloor
Veeloor

ஒத்தக்கடை எனும் பெயரை அழகாக, OTHAKADAI என ஆங்கிலத்தில் மாற்றியிருக்கிறார்கள். தேவர்குந்தானி என்கிற ஊரையும் மிக அழகாக THEVARKUNDHAANI என அழகாக எழுதியிருக்கிறார்கள். இப்படி சின்னச்சின்ன ஊர்களை எல்லாம் சரியாக எழுதியவர்கள், வேலூர் விஷயத்தில் மட்டும் ஏன் கோட்டைவிட்டார்கள் தெரியவில்லை. ஆங்கிலத்தில் VEELOOR என்பதில் தமிழில் வீலூர் என்று வருகிறது. கமான் வீலு...

தென்முகம் காங்கேயம் பாளையம் என்றொரு ஊர். இம்மாம் பெரிய பெயரை நாலு போர்டில் எழுதுவதற்கு கால் லிட்டர் பெயின்ட் அதிகம் தேவைப்படும் என்பதால், T.K.பாளையம் என சிம்பிளாக மாற்றியிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். இதேபோல், புஞ்சை காளமங்கலம் வேலம்பாளையம் என்றொரு ஊர். பஸ்ஸில் ஊர் பெயரை சொல்வதற்குள் கடைசி ஸ்டாப் வந்துவிடும் என்பதால், P.K.வேலம்பாளையம் என டிக்கெட் கிழித்திருக்கிறார்கள். ஆனால், நம் அரசோ THENMUGAM KAANGEYAM PALAYAM, PUNJAI KAALAMANGALAM VELAMPALAYAM என புது டிக்கெட் கிழித்திருக்கிறது.

Chaliye Puducherry Ko Wanakkam
Chaliye Puducherry Ko Wanakkam

கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் `ஹள்ளி' என்கிற பதத்துடன் முடியக்கூடிய ஊர் பெயர்கள் நிறைய இருக்கின்றன. அந்த `ஹள்ளி'யை, `பட்டி'யாக மாற்றலாம் என மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதில் ஜெட்டிஹள்ளி என்றொரு ஊர். அதை பட்டியாக மாற்றினால், ஜெட்டிபட்டி என்று வருகிறது. இந்த ஹள்ளியை, பட்டியாக மாற்றுவதை விட, ஹள்ளிக்கும் பட்டிக்கும், பாளையத்துக்கும், தெருவுக்கும் முன்னால் உள்ள சில சாதிப்பெயர்களை மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்.

தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கிலப் பெயர் மாற்றம் ஏன் அவசியம்? - விளக்கும் ஆய்வாளர்!

தமிழ்நாடு என்பதையே TAMILNADU என எழுதாமல் THAMIZHNAADU என எழுதலாம், சென்னையை CHENNAI என்று அழைப்பதை மாற்றி SENNAI என அழைக்கலாம், இல்லையேல் சென்னைக்கு CORONAPURAM என பெயர் மாற்றிவிடலாம் என சிலர் ஒரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் மாநில அரசோ புதுச்சேரியின் பெயரையும் லிஸ்டில் சேர்த்து, அவர்களை ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறது. சாலியே புட்சேரிக்கோ வன்க்கம்!

அடுத்த கட்டுரைக்கு