Published:Updated:

`காத்துல போறத ஜாடியில புடிங்க...'- குழந்தைகளுக்கு பிரியும் காற்று; நினைவாக சேகரிக்க ஜாடி!

new born

குழந்தைகளின் முதல் முடி, முதல் பல் என பெற்றோர்கள் சேகரிப்பதுண்டு. இங்கு மற்றொரு சிறந்த தருணம் உண்டு, அதுதான் குழந்தைகள் வெளியிடும் காற்று. அதாவது குழந்தைகள் காற்று வெளியிடும்போது அது வால்வு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது

`காத்துல போறத ஜாடியில புடிங்க...'- குழந்தைகளுக்கு பிரியும் காற்று; நினைவாக சேகரிக்க ஜாடி!

குழந்தைகளின் முதல் முடி, முதல் பல் என பெற்றோர்கள் சேகரிப்பதுண்டு. இங்கு மற்றொரு சிறந்த தருணம் உண்டு, அதுதான் குழந்தைகள் வெளியிடும் காற்று. அதாவது குழந்தைகள் காற்று வெளியிடும்போது அது வால்வு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது

Published:Updated:
new born

குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்தும் பெற்றோர்களுக்கு பொக்கிஷம்தான். குழந்தை பிறந்ததில் இருந்து, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் பக்குமாகச் செய்ய நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளின் முதல் சிரிப்பு, முதல் பல் என அனைத்தையும் நினைவாகச் சேகரித்து வைக்கிறார்கள்.

fart jar
fart jar
frida baby ad

குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களின் சிறு சிறு குறும்புத்தனங்களில் சேகரித்தவற்றைப் பரிசாக வழங்கி பெற்றோர்கள் மகிழ்வது உண்டு. இப்படி குழந்தையின் முதல் நடை தொடங்கி, முதல் உடை வரை அனைத்தையும் சேகரிக்கும் பெற்றோர் இன்னொரு விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை.

அதுதான், குழந்தைகள் மலக்குடல் வழியாக வெளியிடும் காற்று (fart). குழந்தைகளுக்குப் பிரியும் காற்றை இதுவரை யாராவது சேகரித்து இருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அட, காத்துவாக்குல போறத எங்கே அடைச்சு வைக்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கென்றே அமெரிக்காவில் உள்ள ஃப்ரிடா பேபிஸ் ஃப்ளாட்டுலென்ஸ் அக்வைசிஷன் ரீடெய்ன்மென்ட் டெக்னாலஜி (Frida Baby’s Flatulence Acquisition & Retainment Technology - F.A.R.T) என்ற நிறுவனம் குழந்தைகள் வெளியிடும் காற்றைச் சேகரிக்க ஜாடி ஒன்றை வடிவமைத்து விற்க உள்ளதாக விளம்பரம் வெளியிட்டுள்ளது.

“குழந்தைகளின் முதல் முடி, முதல் பல் என பெற்றோர்கள் சேகரிப்பதுண்டு. இங்கு மற்றொரு சிறந்த தருணம் உண்டு, அதுதான் குழந்தைகள் வெளியிடும் காற்று. அதாவது குழந்தைகள் காற்று வெளியிடும்போது அது வால்வு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இதனால் ஒரு முறை காற்று வெளிவந்தால் அது ஜாடிக்குள் அடைக்கப்பட்டு விடும்" என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

இந்த ஜாடியுடன் டிஸ்ப்ளே ஸ்டாண்டும் வழங்கப்படுகிறது. இதில் குழந்தை காற்று வெளியிட்ட தேதி, காற்று பிரிவதற்கு முன்பு குழந்தை என்ன சாப்பிட்டது போன்ற தகவல்களைப் பதிவிடலாம். இந்தத் தயாரிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இப்போதே இதை வாங்க மக்கள் பலர் காத்திருக்கின்றனர்.

'ஜாரை விக்குறவங்களுக்கு அது வியாபாரம்; இதையெல்லாம் பிடிச்சுவச்சு நாம என்ன செய்ய...' என்ற விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.