கட்டுரைகள்
Published:Updated:

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

மோடி, போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, போரிஸ் ஜான்சன்

தமிழை வளர்க்கிறேனே டேடி என பெரிய கோழியும், மெரினா தியானமும் போட்டோக்களுக்கு கெத்தாய் போஸ் தர, வைரல் ஆனது

ப்ளிசிட்டி பத்திக்கும் என்று செய்த சேட்டைகள், கடைசியில் சொந்த இமேஜுக்கே ஆப்புவைத்த வைரல் கதைகளின் லிஸ்ட் இது.
மோடி
மோடி
மோடி
மோடி

மோடி

பாறைமேல் சாய்ந்து யோகா செய்வது, மயிலுக்கு உணவூட்டுவது, வாத்துகளைப் பார்த்தபடியே சிந்தனையில் ஆழ்வது, தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவுவதைப் போல கேமராவைப் பார்ப்பது என எப்போதுமே பப்ளிகுட்டி மன்னன், வைரல் கண்ணன் மோடிதான். வாடிய மயிலைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என கடந்த மாதம் வெளியான மோடியின் போட்டோஷூட் பார்த்து கொரோனாவே கொஞ்சம் பயந்து போயிருக்கும். நாடு இருக்குற நிலைமைல இதெல்லாம் தேவையா என வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

ட்ரம்ப்

ஷ்மோர் மலையில் தன் சிலையும் பொறிக்கப்படவேண்டும் என கனவெல்லாம் கண்ட ட்ரம்ப், எதிர்க்கருத்து கிளம்ப, `ச்சும்மா வெளாட்டுக்கு’ என ஒதுங்கிக்கொண்டார்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் ட்ரம்ப்புக்கே டஃப் கொடுத்து சேட்டைகள் செய்ய அவரின் இமேஜும் இப்படி தொங்கிக் கிடக்கிறது..

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

ராகுல்

ழைப் பங்காளனாய் தொழிலாளியோடு தொழிலாளியாக மண்ணைத் தூக்கிச் சுமந்தார் ராகுல். ஆனால், மண் விழுந்தது என்னவோ.... சரி விடுங்க...

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

ஸ்டாலின்

ல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு எனச் சிந்தித்த வேளையிலே, யாரோ ஒருவரின் சிந்தையில் உதித்தது இந்த விக் ஐடியா. முதல்வர் ஆகி முடிசூடும்போது எல்லோரும் வாழ்த்துவார்கள் என்று ஸ்டாலின் கனவில் மிதக்க, ‘புது விக்குக்கு வாழ்த்துகள்’ என்று டிரெண்டிங் ஆக செம கடுப்பானார் ஸ்டாலின்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

டாடி பன்னீர்செல்வம் - கோழி ஓ.பி.ஆர்

மிழை வளர்க்கிறேனே டேடி என பெரிய கோழியும், மெரினா தியானமும் போட்டோக்களுக்கு கெத்தாய் போஸ் தர, வைரல் ஆனது என்னவோ அவர்களின் உடைகள்தான். ‘வானத்தைப்போல’வுக்குப் பிறகு வளருகிற பிள்ளைகளுக்கு எனத் தைத்த உடைகள் அவைதான்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

பாஜக அமைச்சர்கள்

ட்டியலின மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதைப் புரட்சி போல் பூச்சாண்டி காட்டுவது பாஜக அரசியல்வாதிகளின் அறிவார்ந்த ஐடியா. ஆனால், அங்கும் புதிய தட்டு டம்ளருட்ன் சென்று மாட்டிக் கொண்டனர்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

உதயநிதி ஸ்டாலின்

மூன்றாம் கலைஞர், திராவிடச் சூரியன் என சமூக வலைதளங்களில் போஸ்டர் அடிக்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட்ட ஒரு புகைப்படம், ஓவர்நைட்டில் அவர் இமேஜை கொஞ்சம் காலி செய்துவிட்டது. இரண்டு பக்க விளக்கவுரை கொடுத்ததுதான் மிச்சம்.

நினைச்சது ஒன், நடந்தது ஃபன்!

விஜயபாஸ்கர்

போட்டோஷாப் பா.ஜ.க-வுக்கே கொரோனா காலத்தில் டப் பைட் கொடுத்தார் விஜயபாஸ்கர். விவாத மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் போல் வித விதமான ஆடைகளில் வாட்ஸப் கார்டில் வலம் வந்தார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர ஏழாம் அறிவு போதி தருமராகவே இவர் மாறிவிட்டார் என வீடியோ மீம்கள் பறக்க, பிடித்தது ஏழரை. கடையக் காலிப் பண்ணுங்கய்யா அப்பரசென்டிகளா என டிசைனர் குழுவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கிறாராம் அமைச்சர்.