Published:Updated:

புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?

"சில வருடங்களுக்கு முன், எனது நண்பர்கள் ஒரே வருடத்தில் ட்விட்டரில் ஐயாயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் வந்தால் பத்தாயிரம் டாலர்கள் பரிசளிப்பதாக விளையாட்டாக என்னிடம் பந்தயம் கட்டினார்கள். அப்படி ஜெயித்த பணத்தில் ஒரு ஒட்டகத்தையும், ஒரு பெட்ரோல் பங்க்கையும் வாங்கினேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இணையத்தில் இருக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பெயர் Xavier. நாம் தினசரி பார்க்கும் பல்லாயிரக்கணக்கான மீம்களிலும், புகைப்படங்களிலும் ஒற்றைவரி கமெண்ட்டுகளால், உலகிலுள்ள அனைவரையும் சிரிக்க வைத்துவிடும் இவர் யார், எங்கிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?


"நான் சேவியர். ஒரு பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறேன்... என்ன? எந்த ஊரிலா?மன்னிக்க வேண்டும். அந்த பெட்ரோல் பங்க் எங்கிருக்கிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக இங்கு எங்கேயோதான் இருக்கிறது. ஆம்... துரதிர்ஷ்டவசமாக எனக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு நிறைய தோழிகள் இருப்பதாக எனது மனைவி கூறுகிறார். நிச்சயம் இல்லையென்று எனக்குத் தெரிந்தாலும், இந்த உலகில் மனைவியருக்குத் தெரியாதது தான் எதுவுமே இல்லையே..!" என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்ளும், இவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களுக்குள் சென்றால், சிரிப்புக்கு 200% கியாரன்ட்டி.

"இந்த லாக்டௌன் காரணமாக திருமணம் தடைபட்டவர்கள் அனைவருக்கும்...

நீங்கள் தப்பிக்க கடவுள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பைத் தந்துள்ளார்.. இப்போதாவது கொஞ்சம் யோசியுங்கள்..!".

"அமைதியாகப் புன்னகைக்குக்கும் பெண்தான் இந்த உலகின் மிக ஆபத்தான படைப்பு!

எல்லாம் சரி.. முதலில் அமைதியான பெண்ணை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?".

"நீங்கள் அழகாக இல்லை என்று சொல்லி யாராவது இருபதாயிரம் ரூபாயை உங்களுக்குத் தந்தால் வாங்கிக் கொள்வீர்களா?

நிச்சயம் பெற்றுக் கொள்வேன். எனக்கு அழகுதான் இல்லை... ஆனால் அறிவிருக்கிறதே!"

"ஒரு தனி எறும்பு 29 வருடங்கள் வரை வாழக்கூடும்..!

அப்படியென்றால் திருமணமான எறும்பு..?"

புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?

இப்படி நொடிப்பொழுதில் சிரிக்க வைக்கும் Xavier மீம்ஸ் அல்லது கமென்ட்ஸைப் பார்க்காத நாளே இருக்காது என்றே சொல்லலாம். ஆனால், இப்படி உலகெங்கும் ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் என அனைத்து இடங்களிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் இந்த சேவியர் உண்மையில் ஓர் இந்தியர் என்பது நமக்கு நிச்சயம் ஆச்சரியமான தகவல்தான் இல்லையா?

ஆம்... முதன்முதலில் ஜூலை 2013-ம் ஆண்டு, "பக்கலு பபிட்டோ" (@PakaluPapito) என்று தனது ட்விட்டர் கணக்கைத் துவங்கிய முகம் காட்டாத அமெரிக்க மினுசோட்டா வாழ் கம்ப்யூட்டர் இளைஞர் தான் இந்த சேவியர் என்று கூறப்படுகிறது.

"சில வருடங்களுக்கு முன், எனது நண்பர்கள் ஒரே வருடத்தில் ட்விட்டரில் ஐயாயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் வந்தால் பத்தாயிரம் டாலர்கள் பரிசளிப்பதாக விளையாட்டாக என்னிடம் பந்தயம் கட்டினார்கள். அப்படி ஜெயித்த பணத்தில் ஒரு ஒட்டகத்தையும், ஒரு பெட்ரோல் பங்க்கையும் வாங்கினேன்" என்கிற இவரது ட்வீட் உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இவரது ஒரிஜினல் @pakalupapito ஐடி, 800k ஃபாலோயர்களுடன் இயங்கி வர, அதில் யாராவது பிரபலமானவர்களின் ட்வீட், அதனைத் தொடர்ந்து வரும் இவரது அதிரடி கமென்ட் என உலகெங்கும் இவரது ட்வீட்கள் மூலமாக சேவியர் அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இவரது Xavier பக்கமும் பிரபலமடைய, லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் கூடினர். ஆனால் சில காரணங்களால் இவரது ஒரிஜினல் ஐடியை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நீக்கிவிட, இவரது கமென்ட்கள் ஸ்க்ரீன் ஷாட்களாகி, அதே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் டம்ப்ளர் (Tumblr) என சுற்ற ஆரம்பித்து, பிற்பாடு மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆகின.

சேவியரைப் போலவே, "Few minutes later" என்று நடனமாடியபடி சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வரும் டேவிட் என்ற மீம்ஸ் கிரியேட்டரும் பிரபலமடைய, Xavier vs David பக்கங்களும் துவங்கப்பட்டு, ஒருவரை ஒருவர் பகடி செய்யும் மீம்களும் சமீப காலமாக வலம்வரத் தொடங்கியுள்ளன.

புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?

சேவியரிடம்"எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு கிடைக்கப்பெறுகிறது?" என்ற கேள்விக்கு, "என்னிடமிருந்தேதான்" என்ற பதில் தான் கிடைக்கிறது.. "உங்களது ஒற்றை வரி கமென்ட்களுக்கு இவ்வளவு வரவேற்பை எதிர்பார்த்தீர்களா..?" என்றால், "நிச்சயம் இல்லை... அதிலும் இத்தனைப் பெண்கள் என்னிடம் ப்ரப்போஸ் செய்வார்கள் என்று நினைக்கவே இல்லை. இரண்டு மூன்று மனைவியரை சமாளிக்கும் திறமையிருந்தால் நன்றாக இருக்கும்போல" என்று கூறும் இவரிடம், "எதிர்காலத்தில் எழுதவோ, நடிக்கவோ முயற்சிப்பீர்களா?" என்றால் "ஏற்கனவே இவற்றையெல்லாம் நன்றாகச் செய்பவர்கள் நிறையவே இருக்கின்றனர்!" என்று பதிலளிக்கிறார்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் உண்மையான சேவியரிடம் தான் கேட்கப்பட்டதா என்று தெரியாதபோதும், அத்துடன் இந்த சேவியர் உண்மையிலேயே இருக்கிறாரா என்பதும் தெரியாதபோதும், மீம்ஸ் என்ற வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்திய ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி கூறியதைப் போல, நமது கலாச்சார மற்றும் பாரம்பரியப் பண்பாடுகளையும், நடப்பு நிகழ்வுகளையும் காலத்திற்கேற்றாற் போல, எளிய வார்த்தைகளால் நிரந்தரமாகப் புரியவைக்கும் கலையை, நமது சேவியர் மிக அழகாக செய்து வருகிறார் என்பதை மறுக்கமுடியாது.

புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?
புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?
புத்தம் புது காலை : ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எங்கும் ரசிக்கவைக்கும் Xavier memes யார்?

இன்று Xavier Memes என்ற பெயரில் உலகெங்கும் ஓராயிரம் ஐடிக்கள் தங்களது நகைச்சுவை உணர்வுகளை சேவிரியரின் புகைப்படத்துடன் பதிவேற்றி, நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றனர். நமது மன அழுத்தத்தை ஒரு நொடியில் போக்கியும் செல்கின்றனர். இதோ இந்த மீம்ஸில் கூட,"நான் மைக்ரோசாப்ட்டை நிறுவினேன். நாங்கள் கூகுளைத் தொடங்கினோம். நான் முகநூலை ஆரம்பித்து வைத்தேன். நான் அமேசானை நிறுவினேன்... என்ற பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், ஜெஃப் பெஸோஸ், லேரி பேஜ் படங்களுக்குக் கீழே தனது படத்தைப் பதிவிட்டு, "இந்த ஆப் அனைத்தையும் எனது மொபைலில் டவுன்லோட் செய்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார் சேவியர்!

ஆம்... பணமும், புகழும் சம்பாதிக்கத்தான் சீரியஸ் விடாமுயற்சிக்காரர்கள் தேவை. ஆனால் மனமார சிரிக்க, சில ரிலாக்ஸ்ட் சேவியர்களே நமக்குப் போதுமானவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு