Published:Updated:

107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்; அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் கின்னஸ் சாதனை!

ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
News
ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின் ( www.guinnessworldrecords.com )

ஜப்பானைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், உலகின் மிக வயதான இரட்டையர்கள் மற்றும் அதிக ஆண்டுகள் வாழும் இரட்டையர்கள் என இரண்டு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

Published:Updated:

107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்; அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் கின்னஸ் சாதனை!

ஜப்பானைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், உலகின் மிக வயதான இரட்டையர்கள் மற்றும் அதிக ஆண்டுகள் வாழும் இரட்டையர்கள் என இரண்டு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
News
ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின் ( www.guinnessworldrecords.com )

உலகிலேயே அதிக வயதானவர்களைக் கொண்ட நாடான ஜப்பானைச் சேர்ந்த இரட்டையர்கள், உலகின் மிக வயதான இரட்டையர்கள் மற்றும் அதிக ஆண்டுகள் வாழும் இரட்டையர்கள் என இரண்டு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

முதியவர்களை அதிகம் மதிக்கும் நாடான ஜப்பானில் செப்டம்பர் 1-ம் தேதி விடுமுறையுடன் தேசிய முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜப்பானின் வயதானவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். அந்நாட்டு மக்கள் தொகையில் 29 சதவிகிதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். உலகிலேயே சராசரி ஆயுட்காலம் அதிகமாக உள்ள நாடு ஜப்பான்தான். அங்கு 80,000-க்கும் மேற்பட்ட 100 வயதைத் தாண்டிய முதியவர்கள் உள்ளனர்.

ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
www.guinnessworldrecords.com

இந்நிலையில், இந்த ஆண்டின்தேசிய முதியோர் தினத்தில், இரட்டை சகோதரிகளான உமேனோ சுமியம்மா மற்றும் கூமே கொடமாருக்கு அதிக ஆண்டுகள் வாழும் சாதனைகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஜப்பானை சேர்ந்த கின் நரிதா மற்றும் ஜின் கனீ, இதற்கு முன்னர் அதிக வயதான இரட்டையர்களாக இருந்தனர்.

நவம்பர் 5, 1913-ல் இந்த இரட்டை சகோதரிகள் ஜப்பானின் டோஷிமோ தீவில் பிறந்தனர். இவர்கள் வீட்டில் மொத்தம் 11 பிள்ளைகள். மூன்றாவது, நான்காவது குழந்தைகளாக இரட்டையர்கள் பிறந்தனர். சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர் இந்தச் சகோதரிகள். தொடக்கப்பள்ளி முடிந்தவுடன் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது. ஒருவர் பணிப்பெண்ணாக மற்றொரு தீவுக்குச் செல்ல, இன்னொருவர் வீட்டிலிருந்து குடும்பத்தை கவனித்து வந்தார். 70 வயது வரையிலும் அவர்கள் மிக அரிதாகவே சந்தித்துக்கொண்டனர்.

ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
ஜப்பானின் 107 வயது இரட்டையர்களின்
www.guinnessworldrecords.com

பின்னர் இருவரும் இணைந்து ஷிகோகு கோவில்களுக்கு ஒன்றாகப் பயணம் மேற்கொண்டனர். இப்போது இருவரும் வெவ்வேறு முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
``முந்தைய கின்னஸ் சாதனையை இவர்கள் முறியடிப்பார்கள் என்று நாங்கள் எண்ணியதே இல்லை'' என்று இந்தச் சகோதரிகளின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கூமேவின் நினைவுகள் வயது முதிர்வு காரணமாக அவரால் அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.