‘ஒளி’ என்ற ஒன்று இல்லாவிட்டால், இந்த உலகமே தோன்றியிருக்காது. நம் கண்களால் பார்ப்பதால், கண்களில் இருந்துதான் ஒளி வருகிறது என ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஒளி பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பார்ப்போமா?

ஒளி ஒரு சூப்பர் ஹீரோ. ஒளியைவிட வேகமாகப் பயணிப்பது எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை. ஒளி, ஒரு விநாடியில் 3 லட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும்.

மழை பொழிவதற்கு முன்பு, மேகங்களில் உள்ள நீர்த் துளிகளுக்கு இடையே வெள்ளை நிற சூரிய ஒளி பட்டு, ஏழு நிறங்களாகப் பிரிந்து தெரிவதை, நாம் வானவில் என்கிறோம். நீர்த்துளிகள் கோள வடிவத்தில் இருப்பதாலேயே, வானவில் அரை வட்டமாகத் தெரிகிறது. நம் கண்களுக்குத் தெரியக்கூடிய ஒளி, புறஊதா மற்றும் அகச்சிவப்புக் கதிர்களுக்கு இடையில் இருப்பதால்தான் வானவில் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்ற (VIBGYOR) நிறங்களின் வரிசையில் தெரிகிறது.

இடி, மின்னல் இரண்டிலும் உங்களுக்கு எது முதலில் தெரியும்? மின்னல்தான் முதலில் தெரியும். பிறகுதான் இடி இடிக்கும் ஓசை கேட்கும். ஒலியைவிட மிக அதிகமான வேகத்தில் பயணம் செய்வது ஒளி. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில், சராசரியாக 100 மின்னல்கள் மின்னுகின்றன. மின்னல் மற்றும் இடியைப் பார்த்துப் பயப்படுவதற்கு ‘ஆஸ்ட்ராபோபியா’ என்று பெயர்.

மின்மினிப்பூச்சியைப் போல சில விலங்குகளின் உடலில் இருந்தும் வெளிச்சம் வீசும். ஒளி படாத கடலின் ஆழத்தில் இருக்கும் விலங்குகள், அதிக ஒளியை வீசக்கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலும் தங்களுக்கான இரையை ஏமாற்றி, அருகே வரவழைக்கவே இந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன. தூண்டில் மீன், சில வகை ஜெல்லி மீன்கள் இவற்றுக்கு உதாரணம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் லிவர்மோர் தீயணைப்புத் துறையினருடைய பராமரிப்பில், ஒரு குண்டு பல்ப் 115 ஆண்டுகளாகத் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. கின்னஸ் சாதனை புத்தகத்தில், இந்த ‘சென்டெனியல் பல்ப்’ (Centennial Light Bulb) இடம்பெற்று இருக்கிறது.

சூரிய ஒளி, பூமியின் வளி மண்டலத்தில் படும்போது ஒளி சிதறுகிறது. நீல நிறம் அதிகமாகச் சிதறல் அடைவதால், வானம் நமக்கு நீல நிறமாகத் தெரிகிறது. ஒளி ஒரு பொருளின் மீது படும்போது, அந்தப் பொருள் எந்த அலை நீளம்கொண்ட ஒளியை அதிகம் வெளியிடுகிறதோ, அந்த நிறத்தில் இருக்கும். கடலின் மீது சூரிய ஒளி படும்போது நீல நிறம் அதிகமாக வெளியிடப்படுவதாலே, கடலும் நீல நிறமாகத் தெரிகிறது.

ஒரு பொருளின் மீது டார்ச் விளக்கை அடியுங்கள். அந்தப் பொருளின் நிழல், சுவரிலோ அல்லது தரையிலோ விழும். ஆனால், மெழுகுவத்தியை ஏற்றிவிட்டு டார்ச்சை அடித்துப் பாருங்கள், மெழுகுவத்தியின் நிழல் விழும். எரியும் நெருப்பின் நிழல் விழாது.

சிலருக்கு, அதிகமான ஒளியைப் பார்த்தால் தும்மல் வரும். இதற்கு, ‘போட்டோ ஸ்னீஸ் ரிஃப்ளெக்ஸ்’ என்று பெயர். விளையாட்டாக சூரியத் தும்மல் என்பார்கள்.

சிவப்பு, நீலம், பச்சை ஆகியவையே முதன்மையான நிறங்கள். இந்த மூன்று நிறங்களைச் சேர்க்கும்போதுதான், வெள்ளை நிறம் உட்பட வெவ்வேறு நிறங்கள் உருவாகின்றன. காரணம், ஒளியின் அலை நீளத்தில் ஏற்படும் மாற்றம்தான். இந்த நிறங்களின் கலவையால்தான் மற்ற நிறங்கள் நம் கண்களுக்குத் தெரிகின்றன.

செய்து பார்ப்போமா?

ஒரு வெள்ளை நிற சார்ட்டில், காம்பஸ் அல்லது தட்டை வைத்து வட்டம் வரைந்து, வெட்டி எடுங்கள். அந்த வட்டத்தை 7 சம பாகங்களாகப் பிரித்து, வானவில்லின் ஒவ்வொரு நிறத்தையும் தீட்டுங்கள். அதன் மையத்தில் ஒரு சின்ன ஓட்டையைப் போட்டு, ஒரு குச்சியைச் செருகவும். அந்தக் குச்சியின் அடிப்பகுதியைப் பிடித்து லேசாகச் சுழற்றுங்கள். பிறகு, கொஞ்சம் வேகமாகச் சுழற்றுங்கள். இன்னும் வேகமாகச் சுழற்றுங்கள். இப்படி ஒவ்வொரு வேகத்திலும் அந்த வட்டத்தில் தெரியும் நிறங்கள் என்ன ஆகின்றன என்று பாருங்கள்.

ஓவியம்: ராம்கி

கிமு 13000

குகைகளில் வாழ்ந்த மனிதர்கள், பாறை இடுக்குகளில் எரியக்கூடிய பொருட்களை வைத்து வெளிச்சம் ஏற்படுத்தினார்கள்.

கிமு 5000

அப்போது வசதியாக இருந்தவர்கள் மட்டுமே, விலங்குகளின் கொழுப்பு, தாவர எண்ணெய் ஆகியவற்றை விளக்குகளில் பயன்படுத்தினார்கள்.

கிமு 5000

தென்அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் மின்மினிப் பூச்சிகளை சிறிய குடுவைகளில் பிடித்துவைத்து பயன்படுத்தினார்கள்.

கிமு 500

சிறிய அகல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

கிமு 300

சீனாவில் மெழுகுவத்திகளைப் பயன்படுத்தினார்கள். மெழுகுவத்தியை எரியவிட்டு, கடிகாரமாகவும் பயன்படுத்தினார்கள்.

கிபி 1800

கார்பன் ஆர்க் விளக்குகள் எனப்பட்ட பல்புகளின் கொள்ளுத்தாத்தாவைக் கண்டுபிடித்தார், சர் ஹம்ப்ரி டேவி.

கிபி 1879

எடிசன், ஸ்வான் போன்றோர் நாம் இப்போது பயன்படுத்தும் விளக்குகளின் தாத்தாவான குண்டு பல்புகளைக் கண்டறிந்தனர்.

ஆண்டு 1901

பீட்டர் கூப்பர் ஹெவிட், டியூப் லைட்களின் முன்னோடிகளைக் கண்டறிந்தார். 1950-ம் ஆண்டுக்குப் பிறகே, குண்டு பல்புகளைவிட சிறப்பான விளக்குகள் கண்டறியப்பட்டன.

ஆண்டு 1962

நிக் ஹோலோநிய்க் என்பவர் முதன்முதலாக LED விளக்குகளைக் கண்டுபிடித்து, LED விளக்குகளின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஆண்டு 1976

நீளமான டியூப்லைட்டுகளைவிட சுருள் வடிவத்தில் சிறிய மாற்றம் செய்தால், மின்சாரச் செலவு குறையும் என்பதற்காக, எட்வர்ட் ஹேமர் CFL வகை விளக்குகளின் முன்னோடியைக் கண்டுபிடித்தார்.

ஆண்டு 1985

நாம் இன்று பயன்படுத்தும் CFL விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆண்டு 1994

நீலம் மற்றும் வெள்ளை LED விளக்குகள் கண்டறியப்பட்டன.

ஆண்டு 2008

நாம் இன்று பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் LED விளக்குகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

இனி வரும் காலங்களில், அறையின் அளவுக்குத் தேவையான வெளிச்சத்தைத் தானே மாற்றிக்கொண்டு ஒளிரும் வகையிலான விளக்குகள் கண்டறியப்படலாம்.

- இனியன்