தண்ணீரின் முக்கியத்துவம், பாதுகாப்புக்கான அவசியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்ல, மார்ச் 22 உலகத் தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாம் வாழும் பூமி, மூன்று பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும், உயிரினங்கள் பயன்படுத்தும் நல்ல நீரின் சதவிகிதம் மிக மிகக் குறைவே. மனிதர்களாகிய நாம் பல்வேறு தேவைகளுக்காக அந்தக் குறைந்த நீரையும் அசுர வேகத்தில் காலிசெய்து கொண்டிருக்கிறோம். அசுத்தமும் செய்துகொண்டிருக்கிறோம். இப்படியே சென்றால், இன்னும் சில வருடங்களில் நல்ல நீருக்காக, நாடுகளுக்கிடையே பெரிய போரே நடக்கலாம். இந்த அபாயம் தடுக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் முயற்சி செய்துவருகிறார்கள்.

1992-ம் ஆண்டு ஐ.நா. சபையில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. அதில், தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு, மார்ச் 22-ம் தேதியும் ‘உலகத் தண்ணீர் தினம்’ கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கருவை மையப்படுத்தி, அதற்கான செயல்திட்டங்களும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

கடந்த ஆண்டின் கரு, ‘தண்ணீரும் நிலையான வளர்ச்சியும்’ (WATER AND SUSTAINABLE DEVELOPMENT). வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், நிலையான வளர்ச்சிக்கு தண்ணீரை எப்படிப் பயன்படுத்துவது என்கிற அடிப்படையில் செயல்திட்டங்கள் போடப்பட்டன.

இந்த ஆண்டின் கரு, ‘சிறந்த தண்ணீர், சிறந்த பணி’ (BETTER WATER, BETTER JOBS).

அனைத்துத் தொழில்களுக்கும் தண்ணீரின் தேவை அவசியம். தண்ணீர் எவ்வளவு சிறப்பாக உள்ளதோ, செய்யும் பணியும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். எனவே, தண்ணீரின் தரத்தையும் சுத்தத்தையும் பாதுகாப்பதே நம் கடமை என்பதை வலியுறுத்தி, நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சரி, நம் அளவில் தண்ணீருக்கு எப்படியெல்லாம் சிறப்புச் செய்யலாம்.

1. முகம் கழுவும்போதும், பல் துலக்கும்போதும் குழாயைத் திறந்துவிட்டு, நிதானமாகச் செய்யாதீர்கள். தேவைப்படும்போது திறந்து, உடனே மூடிவிடுங்கள்.

2. எவ்வளவு தேவையோ, அவ்வளவு தண்ணீரை மட்டும் பள்ளிக்குக் கொண்டுசெல்லுங்கள். பிளாஸ்டிக் பாட்டிலில் வெகு நேரம் இருக்கும் தண்ணீரைக் குடிப்பதும் உடலுக்குக் கேடு.

3. பாத்திரம், காய்கறி, பழங்கள் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்குச் செல்லும்படி செய்யுங்கள்.

4. குழாயில் கசிவு இருந்தால், உடனே பெரியவர்களிடம் சொல்லி சரிசெய்யச் சொல்லுங்கள். பள்ளி, பூங்கா, சாலையில் நடந்து வரும்போது, ஏதேனும் குழாய் மூடாமல் இருந்தால், மூடுங்கள்.

5. நன்றாகக் குளியுங்கள். ஆனால், பக்கெட் முழுக்க நிரப்பிவிட்டு, பாதியைக் கொட்டும் பழக்கத்தை விடுங்கள்.

7. தண்ணீரைவைத்து விளையாடுவதைத் தவிர்க்கவும். உலகில், பல குழந்தைகள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

8. மழை நீரைச் சேகரியுங்கள். பெரிய பாத்திரங்களில் மழை நீரைப் பிடியுங்கள்.

9. காலை, மாலை குளிர்ச்சியான நேரங்களில் மட்டும் செடிகளுக்குத் தண்ணீர் விடுங்கள். அப்போது மண் ஈரமாக இருந்து, நீர் முழுமையாக செடிகளுக்குச் செல்லும். வெயில் நேரத்தில் ஊற்றினால், உடனே காய்ந்துவிடும்.

- தா. நந்திதா