Published:Updated:

உலகம்

உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்

ச.ஸ்ரீராம்

உலகம்

ச.ஸ்ரீராம்

Published:Updated:
உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்
உலகம்

நண்பர்கள் குறைவா...

லகில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளால் அதிக நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. மேலும் அவர்கள் பள்ளிகளில் சேரும்போது ஒருவித தனித்து இருக்கும் மனநிலையை உணர்கிறார்கள் என்று பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளது. இதனைப் போக்க, அவர்களை மற்றவர்களோடு நெருங்கிப் பழகவைக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுரை கூறியுள்ளது.

உலகம்

ஸ்பேஸ் கில்லி ஸ்பேஸ் X

வி
ண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி அதைத் திரும்பத் தரையிறக்கும் முயற்சியைத் தொடர்ந்து செய்துவரும் ஸ்பேஸ் X நிறுவனம் தனது பால்கான் 9 ராக்கெட்டை கென்னடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில்செலுத்தி, தரையிறக்கியுள்ளது.  27 இன்ஜின்கள்கொண்ட இந்த ராக்கெட்டைத் தரையிறக்கும் செயலை வெற்றிகரமாக முடித்து விண்வெளித்துறையில் தாங்கள் கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

உலகம்
உலகம்

பனியில் உறையும் பிரான்ஸ்

பி
ரான்ஸ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இதன் காரணமாகச் சென்ற வாரத்தில் பார்வையாளர்கள் ஈஃபிள் டவரைச் சுற்றிப்பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

உலகம்

நடுங்கிய தைவான்

தை
வான் நாட்டில் 6.4 ரிக்டர் என்ற அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவானில் உள்ள ஒரு குடியிருப்பு முதல் தளம் வரை உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு மீட்புப்பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

அல்டிமேட் ஆப்கானிஸ்தான்

ப்கானிஸ்தான் போர், ஒசாமா, அமெரிக்க ராணுவம் போன்ற பிரச்னைகளிலிருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக ஆரம்பித்து இன்று பெரிய அணிகளைத் திணற வைக்கிறது. அந்த வரிசையில் ஜிம்பாப்வேயுடனான தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் ரஷீத் கான் டி20 தரவரிசையில் 2-வது இடத்திலும் முகமது நபி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3-வது இடத்திலும் உள்ளனர்.

உலகம்

தெரியுமா?

லண்டனில் உள்ள மேடம் துஸாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில், 2009-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சிலை அமைக்கப்பட்டது.