Published:Updated:

கழிவறை இருக்கைக்குள் நெளிந்த பாம்பு... பதறிய குடும்பம்! என்ன நடந்தது?

snake in toilet ( Eufaula Alabama Police Department Facebook )

வீட்டிலோ, பால்கனியிலோ இல்லாமல், நேராகக் கழிவறை இருக்கையின் உள்ளே சுருண்டு நெளிந்து இருந்துள்ளது. என்னடா இது ஏதோ இருக்கிறதே எனப் பார்த்தவர்களுக்கு உள்ளே பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சாதாரணமாகவே ஷூ, சாக்ஸ் போடும்போதும், துணிகளை அணியும்போதும், நன்றாக உதறிப் போட வேண்டும் எனக்கூறிக் கேட்டு இருப்போம். ஏனெனில், சில நேரத்தில் விஷம் நிறைந்த பூச்சிகளும் உயிரினங்களும் அமைதியாக வந்து உள்ளே பதுங்கி இருக்கக்கூடும்.

Toilet
Toilet

இதைப் போல ஒரு சம்பவம்தான், அமெரிக்காவின் அல்பாமா யூஃப்பாலா பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதிலும் வீட்டிலோ, பால்கனியிலோ இல்லாமல் நேராகக் கழிவறை இருக்கையின் உள்ளே சுருண்டு நெளிந்து பதுங்கியிருந்துள்ளது. என்னடா இது ஏதோ இருக்கிறதே எனப் பார்த்தவர்களுக்கு உள்ளே பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனடியாக அவர்கள், அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார், பாம்பு கழிவறையில் இருப்பதைப் பார்த்து வியந்ததோடு, அதைப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டனர்.

கழிவறை இருக்கைக்குள் நெளிந்த பாம்பு... பதறிய குடும்பம்! என்ன நடந்தது?
Eufaula Alabama Police Department Facebook

``எங்கள் பணிநேரத்தின்போது என்ன மாதிரியான அழைப்புகள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நாள் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாளின் அழைக்காத விருந்தினரான பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதைப் பொருத்தமான இடத்தில் விட்டோம். அந்தப் பாம்பு பாதிப்பை ஏற்படுத்தாத சாரை பாம்பு (Gray Rat Snake) வகையைச் சேர்ந்தது” என்று பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பாம்பு அங்கிருந்து அகற்றப்பட்டாலும், மீண்டும் கழிவறைக்குள் வந்துவிடுமோ என பயம், அந்தக் குடும்பத்தினருக்கு அகல இன்னும் சில நாள்கள் பிடிக்கலாம் அல்லவா?