Published:Updated:

`திட்டக்கூடாது, சண்டை போடக்கூடாது...' பொம்மையை திருமணம் செய்து குழந்தையை வரவேற்ற பெண்!

Meirivone Rocha Moraes ( twitter )

“பொம்மை வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது. என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும்” - மோரேஸ்

`திட்டக்கூடாது, சண்டை போடக்கூடாது...' பொம்மையை திருமணம் செய்து குழந்தையை வரவேற்ற பெண்!

“பொம்மை வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது. என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும்” - மோரேஸ்

Published:Updated:
Meirivone Rocha Moraes ( twitter )

காலம் முழுதும் தன்னுடைய வாழ்க்கையில் பயணிக்கப்போகும் ஒருவருடன் தான், ‘திருமணம்’ என்ற பந்தத்தின் மூலம் இணைகிறோம். அப்படி தன்னுடைய வாழ்வில் வரவிருக்கும் இணை குறித்த கனவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும்.

பிரேசிலில் வாழும் 37 வயதுப் பெண் மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) விநோதமான முறையில் ஒரு பொம்மையைத் திருமணம் செய்துள்ளார்.

பொம்மை கணவருடன் மோரேஸ்
பொம்மை கணவருடன் மோரேஸ்
twiitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடனமாட தனக்கு ஒரு பார்ட்னர் கிடைக்காமல் மன வருத்தத்தில் இருந்தார் மோரேஸ். அப்போது மோரேஸின் தாய், வீட்டிலிருக்கும் பழைய கந்தல் துணிகளை ஒன்றாகத் தைத்து ஒரு பொம்மையை உருவாக்கியுள்ளார். அதற்கு மார்செலோ என்று பெயரிட்டு தன் மகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்செலோ பொம்மை அறிமுகமான நாள் முதல் தன்னுடைய வாழ்க்கை முழுமையானது என நினைத்த மோரேஸ், அந்த பொம்மையையே திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் திட்டமிட்டபடி சுமார் 250 பேர் முன்னிலையில் மோரேஸ் அந்த பொம்மையை திருமணம் செய்தார்.

இந்த திருமணம் குறித்து மோரேஸ் தெரிவிக்கையில், “பொம்மை வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது. என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும்” என்றார்.

பொம்மை கணவருடன் மோரேஸ்
பொம்மை கணவருடன் மோரேஸ்
twitter

மார்செலோ மிகச்சிறந்த, உண்மையான கணவர். பெண்கள் பொறாமைப்படும் நபர். திருமணத்தன்று இரவு நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்'' என்றும் மோரேஸ் கூறினார்.

மே 21 ஆம் தேதி ரியோடி ஜெனிரோவில் ஹனிமூன் கொண்டாடி முடித்துத் திரும்பிய போது, இவர்களின் வாழ்வில் ஒரு புது வரவு இணைந்துள்ளது. அதுவும் ஒரு பொம்மைதான். சுமார் 200 நபர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து அந்தக் குழந்தையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்தத் திருமணமும் மற்றும் குழந்தையை வரவேற்ற விதமும் விநோதமாக உள்ளதாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism