Published:Updated:

பூமியின் தென் துருவத்தை எட்டி சாதித்த இந்திய வம்சாவளிப் பெண்; யார் இந்த ப்ரீத் சண்டி?

ஹர்பிரீத் சண்டி
News
ஹர்பிரீத் சண்டி ( Instagram Photo: @polarpreet )

``நீங்கள் விரும்பும் எதையும் செய்ய நீங்கள் தகுதியானவர். நீங்கள் எங்கிருந்து வந்தாலும் உங்கள் ஆரம்பப்புள்ளி எதுவாக இருந்தாலும், தொடங்குங்கள். ஏனெனில் எல்லோரும் எங்காவது இருந்துதான் தொடங்குகிறார்கள்" என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரிட்டனில் பிறந்த சீக்கியப் பெண் ப்ரீத் சண்டி 40 நாள்களில் தென் துருவமான அன்டார்டிக் துருவத்தில் தன்னுடைய பயணத்தை முடித்து, வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை பொறித்துள்ளார்.

ப்ரீத் சண்டி, பிரிட்டிஷ் ராணுவத்தின் ஃபிஸியோதெரபிஸ்ட். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் தென் துருவமான அன்டார்டிகாவிற்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுவந்த ப்ரீத், முன்னதாக ஆல்ப்ஸ் மலையிலும் கிரீன்லாந்து மற்றும் நார்வேயிலும் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருந்தார். 33

ஹர்பிரீத் சண்டி
ஹர்பிரீத் சண்டி
Instagram Photo: @polarpreet

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பின் தென் துருவத்தில் கிட்டத்தட்ட 1,120 கி.மீ தூரம் கடந்து சோலோ பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். 40 நாள்கள் அவர் தனது பயணம் முழுவதையும் ஆடியோ பதிவுகளாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டே வந்தார். இறுதியாக 40வது நாள் தன்னுடைய பயணத்தை முடித்த அவர், ``நீங்கள் விரும்பும் எதையும் செய்ய நீங்கள் தகுதியானவர். நீங்கள் எங்கிருந்து வந்தாலும் உங்கள் ஆரம்பப்புள்ளி எதுவாக இருந்தாலும், தொடங்குங்கள். ஏனெனில் எல்லோரும் எங்காவது இருந்துதான் தொடங்குகிறார்கள்" என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

32 வயதாகும் ப்ரீத் சண்டி, ``மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, தங்கள் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்த விரும்பினேன்" என்கிறார்.

ராணுவ மருத்துவ அதிகாரியான ப்ரீத் சண்டி,
லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்துள்ளார். கனமான ஸ்லெட்ஜை (sledge) தென் துருவத்தில் இழுத்துக்கொண்டு நடக்கவேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக இரண்டு பெரிய டயர்களைச் சுற்றி இழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஹர்பிரீத் சண்டி
ஹர்பிரீத் சண்டி
Instagram Photo: @polarpreet

மேலும் இவர் ஒரு வலிமையான விளையாட்டு வீரராக, மராத்தான் மற்றும் அல்ட்ரா மராத்தான்களை ஓடியுள்ளார், ராணுவ அதிகாரியாக நேபாளம், கென்யாவில் கடினப் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தன் தென் துருவப் பயணத்தை எந்தக் குழுவுடனும் இணையாமல் தனியாக மேற்கொண்ட இவர், தென் துருவத்தை சுற்றி வந்த முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதனால் பலரும் இவரை `துருவப் பெண்மணி' என்று அழைக்கின்றனர்.

ப்ரீத் சண்டியின் இந்தச் சாதனை குறித்து பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் , ``உங்களுடைய சாதனை மிகவும் அதிசயிக்கத்தக்கது. வாழ்த்துகள் கேப்டன் ப்ரீத் சண்டி" என்று பாராட்டியுள்ளார்.