Published:Updated:

``மாதவிடாய் காலத்தில் பெண்கள் சிவப்பு ஸ்டிக்கரை அணிய வேண்டும்": கஃபே உரிமையாளரின் சர்ச்சை ஐடியா!

மாதவிடாய்

அந்தோணியின் இந்த யோசனை பெண்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. அதோடு அவரிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களை, தங்களுடைய மாதவிடாய் நாள்களை சக ஊழியருக்கோ, வாடிக்கையாளருக்கோ தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது

``மாதவிடாய் காலத்தில் பெண்கள் சிவப்பு ஸ்டிக்கரை அணிய வேண்டும்": கஃபே உரிமையாளரின் சர்ச்சை ஐடியா!

அந்தோணியின் இந்த யோசனை பெண்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. அதோடு அவரிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களை, தங்களுடைய மாதவிடாய் நாள்களை சக ஊழியருக்கோ, வாடிக்கையாளருக்கோ தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது

Published:Updated:
மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியையும் அவதிகளையும் பெண்கள் எளிதாகக் கையாண்டு விடுவார்கள். அந்த நேரத்தில் அவர்களின் உளவியலையும் உடற்கூறையும், பிறர் புரிந்து கொண்டாலே போதும். இன்றளவும் அவர்களைப் புரிந்து கொள்வதில் இந்தச் சமூகத்திலும், ஆண்களிடத்திலும் பொதுவாகவே ஒரு சிக்கல் நிலவி வருகிறது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Ida Rizkha from Pexels

இந்நிலையில், `தன்னிடத்தில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சிவப்பு ஸ்டிக்கரை அணிய வேண்டும்’ என கஃபே உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி என்பவர், கஃபே ஒன்றின் உரிமையாளராக இருக்கிறார். இவர் சமீபத்தில் கைல் மற்றும் ஜாக்கி ஓ (Kyle and Jackie O) என்ற புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், மாதவிடாய்க் காலத்தின்போது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணர்ச்சிரீதியாக அழுத்தத்தில் உள்ள பெண் ஊழியர்களைக் கையாள்வதற்கான யுக்தியைத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது `பெண் ஊழியர்கள் அவர்களின் மாதவிடாய்க் காலத்தில் சிவப்பு ஸ்டிக்கர் ஒன்றை அணிந்துகொள்ளலாம். அச்சமயத்தில் ஆண்களுக்கு பெண்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. பெண்கள் சிவப்பு ஸ்டிக்கர் அணிந்து கொள்வதால் மற்றவர்கள் அவர்களின் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்பட உதவும். இது ஒரு சிறந்த யோசனை. ஏனெனில், வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே இது போன்ற பிரச்னைகளை, இரண்டு ஊழியர்களிடம் எதிர்கொண்டேன்' எனத் தெரிவித்தார்.

``மாதவிடாய் காலத்தில் பெண்கள் சிவப்பு ஸ்டிக்கரை அணிய வேண்டும்": கஃபே உரிமையாளரின் சர்ச்சை ஐடியா!
pixabay

அந்தோணியின் இந்தக் கருத்து, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கைல் மற்றும் ஜாக்கியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. `நீங்கள் சொன்னது எங்களுக்குச் சரியாகக் கேட்கவில்லை; நீங்கள் இதைத்தான் சொன்னீர்களா’ என தொகுப்பாளர்கள் மீண்டும் கேட்க, அந்தோணி `புதியதாக வண்டி ஓட்டுபவர்கள் L போர்டு உபயோகப்படுத்துவது போல, பெண்கள் மாதவிடாயின்போது ரெட் ஸ்டிக்கர் பயன்படுத்தலாமே' எனத் தன்னுடைய ஐடியாவை ஒப்பிட்டுப் பேசினார்.

``அந்தோணியின் இந்த யோசனை பெண்களை அவமானப் படுத்துவதாக உள்ளது. அதோடு அவரிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களை, தங்களுடைய மாதவிடாய் நாள்களை சக ஊழியருக்கோ, வாடிக்கையாளருக்கோ தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என ஜாக்கி ஓ விமர்ச்சித்தார்.

அந்தோணியின் இந்த யோசனை சமூக வலைதளத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியோடு, பல விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.