Published:Updated:

``பெருமிதமாக உணர்கிறேன்"- 20-வது பேரக்குழந்தையை வரவேற்கும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்!

மாற்று பாலினத்தவராக மாறிய ஒலிம்பிக் வீரர் கேட்லின் ஜென்னர்!

கேட்லின் ஜென்னர் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர், 2015-ல் தன்னை மாற்று பாலினத்தவராக அறிவித்துக்கொண்டார்.

``பெருமிதமாக உணர்கிறேன்"- 20-வது பேரக்குழந்தையை வரவேற்கும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்!

கேட்லின் ஜென்னர் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர், 2015-ல் தன்னை மாற்று பாலினத்தவராக அறிவித்துக்கொண்டார்.

Published:Updated:
மாற்று பாலினத்தவராக மாறிய ஒலிம்பிக் வீரர் கேட்லின் ஜென்னர்!

கேட்லின் ஜென்னர் தனக்கு 20-வது பேரக் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 72 வயதான கேட்லின் ஜென்னர் 2015-ல் தன்னை மாற்று பாலினத்தவராக அறிவித்துக்கொண்டவர். மூன்று மனைவிகள் ஆறு பிள்ளைகள் எனப் பெரிய குடும்பத்தில் புதிய உறுப்பினராக தற்போது பெண் குழந்தை இணைந்துள்ளதைப் பகிர்ந்து, தான் பெருமிதமாக உணர்வதாகப் பதிவிட்டுள்ளார். வில்லியம் புரூஸ் ஜென்னர் என முன்னர் அறியப்பட்ட கேட்லின், 1974-ல் அமெரிக்க ஆண்கள் தடகள போட்டியின் வெற்றியாளர், 1976 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார். அப்போது எந்தவித ஸ்பான்சர்களும் அமெரிக்க வீரர்களுக்கு இல்லை, அரசின் முழு பயிற்சியில் களமிறங்கும் சோவியத் வீரர்களை எதிர்கொண்டு அவர் சாதித்தது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. விளையாட்டுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை என திரும்பிய அவர் கவனம் Keeping Up with the Kardashians என்கிற நிகழ்ச்சியைத் தன் மனைவியோடு இணைந்து தொகுத்து வழங்கினார். Transparent என்கிற அமேசான் சிரீஸிலும் தோன்றினார். மாற்று பாலினத்தவருக்கான குரலாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

கேட்லின் ஜென்னர் புதிதாக பிறந்திருக்கும் பேத்தியுடன் பேரன்
கேட்லின் ஜென்னர் புதிதாக பிறந்திருக்கும் பேத்தியுடன் பேரன்
DailyMail

மகன் பர்ட்க்கும் (Burt) அவரின் கேர்ள் ப்ரண்ட் வலேரி பிட்டாலோ (Valerie Pitalo)வுக்கும் மூன்றாவதாகப் பிறந்திருக்கிறார் இந்தப் பெண் குழந்தை. "அழகிய, பொக்கிஷம் போன்ற தருணங்கள். குடும்பத்திற்காக நான் சந்தோஷமாக உனர்கிறேன். அழகான பெண் குழந்தையை வரவேற்கிறேன். இந்த சிறுவர்கள் பெரிய அண்ணன்களாக போகின்றனர்" எனத் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் குடும்பத்தினரும் ரசிகர்களும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism