Published:Updated:

மிட்டாய் சுவைக்க $100K சம்பளம்... 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் - எங்கே தெரியுமா?

candy ( pixabay )

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக, வடஅமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் போதும். அதிசயிக்கும் வகையிலான தொகையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மிட்டாய் சுவைக்க $100K சம்பளம்... 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் - எங்கே தெரியுமா?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக, வடஅமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் போதும். அதிசயிக்கும் வகையிலான தொகையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Published:Updated:
candy ( pixabay )

மிட்டாய்கள், சாக்லேட்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பட்டியலில் மிட்டாய்களுக்கென தனி இடம் உண்டு.

கனடாவில் உள்ள கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற நிறுவனம் ஆன்லைனில் மிட்டாய்களை விற்று வருகிறது. மிட்டாய்களின் சுவையை பரிசோதிப்பதற்கு, உலக அளவில் முதன்முறையாகத் தலைமை மிட்டாய் அதிகாரியை (Chief Candy Officer) வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய (work from home) நியமிக்க உள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மிட்டாய்
மிட்டாய்
pixabay

மிட்டாய்களை சுவைப்பதற்கு சம்பளமா எனப் பலரும் இதை வியப்பாகப் பார்த்து வருகின்றனர். ஆனால், அதிசயிக்கும் வகையில் ஆண்டுக்கு 100,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையராக, வடஅமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் போதும்.

இப்பதவியில் நியமிக்கப்படுபவர், ஒரு மாதத்துக்கு சுமார் 3,500 தயாரிப்புகளின் சுவையை சோதனை செய்து அதற்கு ஒப்புதல் முத்திரையை வழங்க வேண்டும். ஃபன்ஹவுஸில் சாக்லேட் யுக்திகளைப் பயன்படுத்துவதோடு, சாக்லேட் தொடர்பான போர்டு மீட்டிங் நடத்துவதும் இவரின் பொறுப்புகளில் வரும்.

மிட்டாய்
மிட்டாய்
pixabay

மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவங்கள் ஏதும் தேவை இல்லை. ஆனால் மிட்டாய்கள், பாப் கலாசாரம் மற்றும் ஊடங்கங்களின் மீது ஆர்வமும், கிரியேட்டிவ்வாகவும், இயற்கையிலேயே தலைமைப் பண்பு கொண்டவராகவும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எப்படி வேடிக்கையாக நடந்து கொள்வது எனத் தெரிந்தும் இருக்க வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.

தலைமை மிட்டாய் அதிகாரியின் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.