Published:Updated:

``மலைக்காதீங்க ... ஒரு துண்டு கேக் விலை 27,000 ரூபாய்!'' அப்படியென்ன அதில் சிறப்பு தெரியுமா?

சார்லஸ் - டயானாவின் திருமண கேக்

அரச குடும்பத்தின் திருமணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட 23 கேக்கில் இதுவும் ஒன்று. தற்போது ஏலம் விடப்படும் இந்த கேக் துண்டு, நடுப்பகுதியில் உள்ள பழ கேக்கின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

கலைப்பொருள்கள், ஓவியங்கள், கார், வீடு எனப் பழைமையான தனித்துவமான, விலையுயர்ந்த பொருள்கள் அவ்வப்போது ஏலத்திற்கு வரும். அந்த வகையில் 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் - டயானாவின் திருமண கேக் ஏலத்திற்கு வருகிறது.

``மலைக்காதீங்க ... ஒரு துண்டு கேக் விலை 27,000 ரூபாய்!'' அப்படியென்ன அதில் சிறப்பு தெரியுமா?

சுமார் 41 ஆண்டுகள் பழைமையான இந்த கேக்கில் இருந்து ஒரு துண்டு ஏலத்திற்கு வருகிறது. இதன் ஆரம்ப விலை 300 பவுண்டுகள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27,000 ரூபாய்.

ஒரு துண்டு கேக்கிற்கு அப்படியென்ன சிறப்பு இருக்கும் என்ற கேள்வி எழலாம். சார்லஸ் - டயானாவின் திருமணத்தில் 3000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட ஒரு விருந்தினர்தான், நைஜெல் ரிக்கெட்ஸ் (Nigel Ricketts). இவரிடம் சார்லஸ் - டயானாவின் திருமண கேக்கின் ஒரு துண்டு இருந்தது. இவர் கடந்த ஆண்டு இறந்தார். அவரின் இறப்பைத் தொடர்ந்து இந்த கேக் ஏலத்திற்கு வந்துள்ளது.

இதன் ஆரம்ப விலை சுமார் 27,000 ரூபாய் எனக் கூறப்பட்டிருந்தாலும், ஏலத்தில் இன்னும் அதிகமாகக் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கேக் அதன் ஒரிஜினல் பாக்ஸில் உள்ளது.

``மலைக்காதீங்க ... ஒரு துண்டு கேக் விலை 27,000 ரூபாய்!'' அப்படியென்ன அதில் சிறப்பு தெரியுமா?

அதோடு அரச குடும்பத்தின் திருமணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட 23 கேக்கில் இதும் ஒன்று. 5 அடுக்கு, 5 அடி உயரம் கொண்ட இந்த கேக்கில் இருந்து ஒரு துண்டு கேக் ஏலத்திற்கு வருகிறது, இது நடுப்பகுதியில் உள்ள பழ கேக்கின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

இந்த கேக்கின் 80 துண்டுகள் 2014-ம் ஆண்டில் ஏலம் விடப்பட்டன. இந்திய பண மதிப்பில் 1,27,000 ரூபாய் வரை விற்பனையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.