Published:Updated:

`உங்க மூக்குல எலும்பு இருக்கா?’ - மூக்கில் எலும்பில்லாத பெண்ணின் வைரல் வீடியோ

Romana Bruintjes ( ROMANA _BRUINTJES INSTA POST )

ஒருபுறமாகத் திரும்பி, தன்னுடைய ஆள்காட்டி விரலால் மூக்கை அழுத்துகிறார். அப்படியே மூக்கு அமுங்கிப் போகிறது. `டேய் எப்புட்றா' என்பது போல இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

எலும்புகள்தான் நம்முடைய உடலைத் தாங்கி நிலை நிறுத்தி, வடிவத்தைக் கொடுக்கின்றன. எலும்புகள் இல்லாத பட்சத்தில், நம்முடைய உடல் எப்படி இருக்கும்? அதிலும் குறிப்பாக மூக்கு..? கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை அல்லவா?

bones
bones
pixabay

எலும்பில்லாத மூக்கு இப்படித்தான் இருக்கும் என்று, உதாரணமாக வாழ்ந்து வருகிறார் ரோமனா ஃரூயின்ட்ஜெஸ் (Romana Bruintjes). டிக் டாக்கில் தன்னுடைய அற்புதமான குரலாலும், ஒப்பனை குறித்த பதிவுகளாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், நெதர்லாந்தை சேர்ந்தவர்.

ரோமனா, தனக்கு மூக்கு எலும்பு/குருத்தெலும்பு இல்லை என்பதை வீடியோவில் வெளிப்படுத்தி, `உங்கள் மூக்கில் எலும்பிருக்கிறதா?’ என்று கேட்டு இன்ஸ்டாவில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒருபுறமாகத் திரும்பி, தன்னுடைய ஆள்காட்டி விரலால் மூக்கை அழுத்துகிறார். அப்படியே மூக்கு அமுங்கிப் போகிறது. `டேய் எப்புட்றா?' என்பது போல இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பதிவுக்கு வரும் கமென்டுகள் தான் இன்னும் சுவாரஸ்யமானவை. அதில் ஒருவர், `இது போன்ற ஒரு மூக்கை வைத்திருந்தால், எந்த சண்டைக்கும் பயப்படமாட்டேன்' என்று பதிவிட்டுள்ளார். 

சில்லுமூக்கு தெரியும், இது சிலிக்கான் மூக்குபோல!