Published:Updated:

``இது கண்ணா... இல்ல குடோனா?'': கண்ணிலிருந்து அகற்றப்பட்ட 23 கான்டாக்ட் லென்ஸ்கள்: வைரல் வீடியோ!

23 காண்டாக்ட் லென்ஸ் ( california eye associates insta page )

ஒருவர் இரவில் கான்டாக்ட் லென்ஸை கழற்றுவதை மறந்துவிட்டு, தினமும் காலையில் புதிய கான்டாக்ட் லென்ஸை போட்டுக் கொண்டுள்ளார். அதுவும் 23 நாள்கள் தொடர்ச்சியாக..

கான்டாக்ட் லென்ஸ்களை உபயோகிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்துபவர்கள், அதை உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதை மறந்து தூங்கி விட்டாலோ அல்லது லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களுக்கு மஸ்காரா உள்ளிட்ட மேக்கப் சாதனங்களை உபயோகித்தாலோ அது கண்களில் இன்பெக்ஷனை ஏற்படுத்தும். அதேபோல கான்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்தும் திரவத்தைக் கொண்டு சுத்தப்படுத்திய பின்பே அதை உபயோகிக்க வேண்டும்.

இதுபோன்ற இன்னும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கையில், ஒரு பெண் தன்னுடைய கான்டாக்ட் லென்ஸை அகற்றாமல், தொடர்ந்து 23 கான்டாக்ட் லென்ஸை கண்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி உள்ளார்.

அவரின் கண்களில் இருந்து மருத்துவர், 23 கான்டாக்ட் லென்ஸ்களையும் நீக்கியுள்ளார். அந்தக் காட்சியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டவர், ``யாரோ ஒருவர் இரவில் கான்டாக்ட் லென்ஸை கழற்றுவதை மறந்துவிட்டு, தினமும் காலையில் புதிய கான்டாக்ட் லென்ஸை போட்டுக் கொண்டுள்ளார். அதுவும் 23 நாள்கள் தொடர்ச்சியாக..

ஒருவரின் கண்ணில் இருந்து 23 கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றுகிறேன். என்னுடைய கிளினிக்கிலிருந்து நிஜ வீடியோ.

கான்டாக்ட் லென்ஸ்களை பிரித்தெடுக்க நான் மிக நுண்ணிய அறுவை சிகிச்சை கருவியான ஜுவல்லர் ஃபோர்செப்ஸ் பயன்படுத்தினேன். கண் இமைக்குக் கீழே இருந்த கான்டாக்ட் லென்ஸ்கள் ஒன்றோடு ஒன்று நன்றாக ஒட்டியிருந்தன.

கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டு யாரும் தூங்காதீர்கள்’’ எனப் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.