Published:Updated:

மாடியிலிருந்து விழுந்த கர்ப்பிணி பூனை; காப்பாற்றியவர்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்கிய துபாய் அரசு!

காப்பாற்றப்பட்ட பூனை
காப்பாற்றப்பட்ட பூனை ( Twitter:/ @HHShkMohd )

துபாயின் டீரா ஃப்ரிஜ் முராரில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இரண்டாவது மாடியில் சிக்கிக்கொண்ட பூனை விளிம்பில் வந்து நிற்கிறது. பூனையை காக்கும் வண்ணம் நான்கு ஆண்கள், துணி ஒன்றை பிடித்திருந்தனர்.

கர்ப்பிணி பூனையை காப்பாற்றியதற்காக கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் உட்பட நான்கு பேருக்கு தலா 50,000 திர்ஹாம்கள் அதாவது, இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் அளித்து கௌரவித்துள்ளது துபாய் அரசு.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெளியிட்டார். நான்கு ஆண்கள் சேர்ந்து, இரண்டாவது மாடியில் சிக்கி இருந்த கர்ப்பிணி பூனையை காப்பாற்றும் வீடியோதான் அது. அதைக் குறிப்பிட்டு, `நம் அழகிய நகரத்தில் இது போன்ற காட்சிகளைக் காணும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொண்டாடப்படாத இந்த ஹீரோக்களை யாராவது அடையாளம் கண்டால் சொல்லுங்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

துபாயின் டீரா ஃப்ரிஜ் முராரில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இரண்டாவது மாடியில் சிக்கிக்கொண்ட பூனை விளிம்பில் வந்து நிற்கிறது. பூனையை காக்கும் வண்ணம் நான்கு ஆண்கள், துணி ஒன்றை பிடித்திருந்தனர். திடீரென பூனை குதித்து அவர்கள் விரித்திருந்த வலையில் பாதுகாப்பாக விழுகிறது. பின்னர் எழுந்து நடந்து செல்கிறது.

இதனை, அந்த நான்கு பேரில் ஒருவரான ரஷீத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அந்தப் பூனை அமைதியாகச் சாப்பிடும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு, பூனை நலமாக இருப்பதாகவும் கூறினார். நண்பர்களான அந்த நான்கு பேரையும் துபாய் போலீஸார் அடையாளம் கண்டு அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூனையைக் காப்பாற்றும் முயற்சியில் இளைஞர்கள்
பூனையைக் காப்பாற்றும் முயற்சியில் இளைஞர்கள்
பசுவுக்கு கிராம மக்களுடன் சேர்ந்து வளைகாப்பு; விவசாயி சொல்லும் நெகிழ்ச்சி காரணம்!

ஆட்சியாளரின் ட்வீட்டை தொடர்ந்து பூனையை காப்பாற்றிய நான்கு பேர், மொரொக்கொவை சேர்ந்த வாட்ச்மேன் ஹர்ஷப், பாகிஸ்தானை சேர்ந்த சேல்ஸ் மேன் அதிஃப் மெஹ்மூத், கேரளாவை சேர்ந்த நாசர் மற்றும் மளிகைக் கடை வைத்திருக்கும் முகமது ரஷீத் என்பது தெரிய வந்தது.

அரசு கௌரவத்தை பெற்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய ரஷீத், ``கர்ப்பிணி பூனை இந்தத் தெருவில் அதிகம் உலாவுவதனால் இங்கு இருக்கும் அனைவருக்கும் அவளை தெரியும். ஆனால் அவள் இரண்டாவது மாடியின் பால்கனியில் மாட்டிக்கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. நாங்கள் காப்பாற்றினோம்" எனக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு