Published:Updated:

`₹15 கோடி வருமானம் இலக்கு!' - தாய்ப்பாலில் நகை; வியப்பூட்டும் இங்கிலாந்து தம்பதியின் முயற்சி

Milk ( Photo by ROBIN WORRALL on Unsplash )

2023-ம் ஆண்டில் 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். சஃபியாவும் அவரின் கணவரும், கோவிட்-19 ஊரடங்கின்போது நகைகள் தயாரிக்க தாய்ப்பாலைப் பயன்படுத்தியது குறித்த கட்டுரையைப் படித்தனர். பின்னரே இந்த யோசனையை தாங்களும் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.

தங்கம், வைரம், வைடூரியம் என பலவற்றில் நகைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் லண்டன்வாழ் பெண் ஒருவர், தாய்ப்பாலில் நகைகள் செய்து விற்று வருகிறார். கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இந்த நகைகளை வாங்க இவரிடம் ஆர்டர்கள் குவிகின்றன.

Milk
Milk
Photo by Pixabay

மூன்று குழந்தைகளின் தாயான சஃபியா ரியாத் மற்றும் அவரின் கணவர் ஆடம் ரியாத் ஆகியோர் 2019 -ல் `மெஜந்தா ஃப்ளவர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினர். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் கிடைக்கும் சிறப்புமிக்க மலர்களைப் பாதுகாத்து அவற்றை விலைமதிப்பற்ற நினைவுப் பொருள்களாக மாற்றுகின்றனர். இதுவரையில் இவர்களின் நிறுவனம் சுமார் 4,000 ஆர்டர்களை வழங்கியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் தற்போது தாய்ப்பாலில் நகைகளைச் செய்ய நிறுவனத்தை விரிவுபடுத்தி உள்ளனர். 2023-ம் ஆண்டில் 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். சஃபியாவும் அவரின் கணவரும், கோவிட்-19 ஊரடங்கின்போது நகைகள் தயாரிக்க தாய்ப்பாலைப் பயன்படுத்தியது குறித்த கட்டுரையைப் படித்தனர். பின்னரே இந்த யோசனையை தாங்களும் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.

மேலும் தாய்ப்பால் நகைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், பாலூட்டும் தாய்மார்களுடன் பணிபுரிந்து, அவர்களின் தாய் பாலூட்டும் பயணத்தை நினைவுகூர, அவர்களின் தாய்ப்பாலை விலைமதிப்பற்ற நினைவுச் சின்னங்களாக மாற்றுவதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.