Published:Updated:

`இதுதான் இலங்கையில் முதல் முறை!' - ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்த பெண்

``தினமும் ஸ்கேன் செய்வது, பரிசோதனை செய்வது என தொடந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே அவர் இருந்தார். இருந்தும் பிரசவ தேதி நெருங்க நெருங்க சில உடல் பிரச்னைகளும், புரதச் சத்துகளில் குறைபாடும் ஏற்படத் தொடங்கின. அதற்கான சிகிச்சைகள் முறைப்படி அளிக்கப்பட்டது."

இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். இலங்கை நாட்டில் முதன்முறையாக இதுபோன்று ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள கொழும்பு பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் 33 வயதான திலினி வாசனா தயானந்த என்ற பெண் இரண்டு நிமிட இடைவெளியில் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்தார்.

Baby
Baby
Pixabay
முதல் பிரசவம் சிசேரியன்; அடுத்தது சுகப்பிரசவம் ஆகுமா? - விளக்கும் மருத்துவர்!

அந்நாட்டை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், இலங்கையில் இதற்கு முன்னதாக இப்படியான பிரசவம் நடைபெற்றது இல்லை, இது ஓர் அதிசயமான நிகழ்வு எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ``ஆறு குழந்தைகளும் மிக நலமுடன், ஆரோக்கியமாக உள்ளனர், தாய் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். எந்த சிக்கலையும் இதுவரை அனுபவிக்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகின்றனர்" என்றனர்.

``திலினிக்கு ஆறு குழந்தைகள் உருவாகியுள்ளது என அறிந்தவுடன், தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தோம். இதுவரை இப்படியான விஷத்தை நாங்கள் அறியவில்லை என்பதால் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். தினமும் ஸ்கேன் செய்வது, பரிசோதனை செய்வது என தொடந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே அவர் இருந்தார். இருந்தும் பிரசவ தேதி நெருங்க நெருங்க சில உடல் பிரச்னைகளும், புரதச் சத்துகளில் குறைபாடும் ஏற்படத் தொடங்கின. அதற்கான சிகிச்சைகள் முறைப்படி அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்டோம். தொடர்ந்து தாய் மற்றும் குழந்தைகளுக்கு அசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash
கொரோனா காலத்தில் அதிகரித்த பதின்பருவ கர்ப்பங்கள்; இந்திய சிறுமிகளின் துயரநிலை மாறுமா?

இதுகுறித்து குழந்தைகளின் தந்தையான பிரபந்த செய்தியர்களிடம் கூறுகையில், ``என் மனைவி கருத்தரித்திருப்பதாக என்னிடம் கூறியதும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் முதலில் நான்கு கரு உருவாகி இருப்பதாகக் கூறினார். அதன் பின் மறுமுறை ஸ்கேன் செய்தபோது, ஆறு கரு உருவாகி இருப்பதாகக் கூறினர். எங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எண்ணம். ஆனாலும் ஆறு குழந்தைகள் கிடைத்திருப்பதை வரமாகக் கருதுகிறேன். என் மனைவி மிகவும் சிரமப்பட்டார். என்னால் அதை பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் அவருக்குத் துணையாக, பலமாக இருந்தேன்" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு